ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றியவர்கள்..!

important persons who helped rajinikanth to emerge as super star

ஒரு கலைஞன் உருவாகிறான் என்றால் அந்தக் கலைஞனுக்கு பின்னால் யாராவது அவரை ஊக்குவித்தால் மட்டுமே அந்தக் கலைஞன் நினைத்தபடி உருவாக முடியும் அப்படி எல்லா கலைஞர்களுக்கும் பின்னால் யாராவது ஒருவர் இருப்பார்கள் அப்படிதான் ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக ஆவதற்கு துணையாக இருந்தவர்களை பற்றி பார்ப்போம்.

ராஜ் பகதூர்

சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரஜினிகாந்திற்கு போதுமான அளவு பணம் வசதி இல்லை இந்த சமயத்தில் அவருடன் இணைந்து வேலை செய்த ராஜ்பகதூர் என்ற நண்பர் இவருக்கு பணம் கொடுத்து சென்னையில் உள்ள மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பை கற்றுக்கொள் என்று இவரை ஊக்குவித்து உள்ளார்.

மேலும் படிக்க – யோகிபாபு-வின் வாழ்க்கை வரலாறு..!

கே. பாலச்சந்தர்

ரஜினியை ஒரு நடிகன் என்று அங்கீகரித்த முதல் மனிதர் கே. பாலச்சந்தர் இவர்தான் முதன்முதலில் ரஜினிகாந்திற்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பளித்தார் அபூர்வ ராகம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரஜினிகாந்திற்கு கொடுத்து உதவினார் இதற்கு அடுத்து அவர்கள் இயக்கிய பல படங்களில் ரஜினிகாந்திற்க்கு முன்னுரிமை தந்துள்ளார்.

எம். பாஸ்கர்

வில்லனாக அல்லது கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து வந்த ரஜினிகாந்திற்கு கதாநாயகன் அந்தஸ்தை அளித்தவர் எம். பாஸ்கர் இவர் இயக்கிய பைரவி படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்தார் இதன் பிறகுதான் மற்ற இயக்குனர்கள் ரஜினிகாந்தின் ஒரு நாயகனாக பார்க்க தொடங்கினார்கள்.

மேலும் படிக்க – மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

கமலஹாசன்

ரஜினிகாந்த் அறிமுகமான காலங்கள் முதல் ஏராளமான படங்கள் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வந்துள்ளார் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் கதாநாயகன் என்றாலே அந்த படத்தின் நிச்சயம் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு வேடத்தில் இருப்பார் என்று ரசிகர்களால் பேசப்பட்டு வந்தன இதைத் தவிர்த்து அனைத்து பத்திரிகைகளிலும் இவர்கள் இருவரின் கூட்டணி எப்போதும் வெற்றி பெறும் என்று விமர்சனங்களை கூறி வந்துள்ளனர் இதைப் பொருட்படுத்தாத கமல்ஹாசன் ரஜினிகாந்தை தனியாக படம் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார் நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் நிச்சயம் என்னை கதாநாயகனாகவும் உன்னை ஒரு கதாபாத்திரமாகவும் சித்தரித்து உன் வாழ்க்கையை அழித்து விடுவார்கள் இனிமேல் நீ முழுநேர கதாநாயகராக உனக்கென அமையும் படங்களில் நடி என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் இதன் பிறகுதான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அதன்பின் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்காமல் தனித்தனியாக படங்களில் நடித்து இன்று இருவரும் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலில் இருப்பவர்கள் இயக்குனர் எஸ்பி. முத்துராமன், ராஜசேகரன், மகேந்திரன், பி. வாசு, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இவர்கள்தான் ரஜினிகாந்தை வைத்து ஏராளமான படங்கள் மற்றும் ரசிகர்களுக்கான படங்களை இயக்கினார்கள்.

2 thoughts on “ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றியவர்கள்..!”

  1. Pingback: journey of superstar rajinikanth in the indian film industry

  2. Pingback: initial stgaes of superstar rajiniknath's life and film career

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன