சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

  • by
important message of super star rajinikanth on tamil new year

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பினால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் ஏராளமான நாடுகள் மற்றும் மக்கள் தவித்து வரும் சூழலில் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுடன் மிக மகிழ்ச்சியான முறையில் கொண்டாடப்படும் இந்த தமிழர் பண்டிகை இன்று முழுமையாக முடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை தாக்காமல் இருப்பதற்காக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். இருந்தும் ஒரு சிலர் தங்களால் முடிந்தவரை வீட்டில் எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த தமிழ் புத்தாண்டன்று ஒரு காணொளியை வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவு அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்று ஏராளமானோர் எண்ணினார்கள், ஆனால் இவர் இந்த புத்தாண்டை மிகப் பாதுகாப்பான முறையில் கொண்டாடி வருபவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் உங்கள் கஷ்டங்களை நான் புரிந்து கொள்கிறேன் என்று மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை அளித்துள்ளார். இந்தியாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்தை இப்போது தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தில் அரசியல்வாதியாக உருவெடுக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார், இதற்காக அவர் சிறு சிறு செயல்களை செய்து மக்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் படிக்க – நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

ரஜினிகாந்தின் உரை

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த காணொளியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளிநாடுகளில் வாழும் மக்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு பொறுப்புடன் வீட்டில் இருந்தபடி இந்த தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றார். தமிழர்கள் அனைவரும் குடும்பங்களை பிரிந்து வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருப்பதினால் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இருந்தும் அனைவரும் மிகவும் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் தங்கள் இருக்கும் இடத்தில் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என மக்களுடன் கேட்டுள்ளார். இதற்காக அவர் இறைவனை பிரார்த்தனை செய்யப் போகிறேன் என்றார். எனவே எல்லோரும் அவரவர் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்தின் வேண்டுகோள்.

ரசிகர்கள் கூட்டம்

ரஜினிகாந்திற்கு மற்றும் அவர் நடிக்கும் படங்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை தவிர்த்து இந்தியாவிலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை அவர் சரியாகப் பயன்படுத்தி மக்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற ஊக்கமளிக்கும் உரையாடலை வெளியிட வேண்டும். இதனால் மக்கள் பயத்தைக் குறைத்து தன்னம்பிக்கையுடன் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வார்கள்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனுக்கு நடந்த விபரீதம்..!

அரசியலில் இருக்கும் ரசிகர்களை விட சினிமாத்துறையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே இவர் தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பாகவே ஏராளமான ரசிகர்கள் இவரை தலைவர் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இதை சரியாக பயன்படுத்தி இவர் மக்களுக்கு தினமும் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன