சிறப்புமிக்க தைப்பூசத் திருநாள்..!!

  • by
importance of Thai Poosam Features

உலகம் தோன்றியது  தைப்பூசத் திருநாளில்தான் என்று சொல்வார்கள். தமிழ் கடவுளாக வணங்கப்படும் முருகனுக்கு திருவிழா கொண்டாடப்படும் நாள்தான் தைப்பூசம். இந்த நாளில்தான் ஈசன் மற்றும் உமாதேவி ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்தார்கள்.

முருகனுக்கு உகந்த நட்சத்திரம்

முருகனுக்கு மொத்தம் நான்கு நட்சத்திரங்கள் உகந்ததாக இருக்கிறது. வைகாசி விசாகம், கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் இவை நான்கும் ஒவ்வொன்று சிறப்புகளை கொண்டது. முருகன் வைகாசி விசாக நாளில்தான் தோன்றினார். முருகனுக்கு சக்திகள் உண்டாகிய நாள் கார்த்திகை. அசுரர்களை அழித்த நாள் ஐப்பசி. வள்ளியை திருமணம் செய்த நாள் பங்குனி உத்திரம் திருநாள். தன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்.

மேலும் படிக்க – கணபதி ஹோமம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்..!

தைப்பூசத்தின் சிறப்பு

தைப்பூசத்திற்கு மறுநாள் எப்போதும் பௌர்ணமியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக இருக்கிறது. இதை புஷ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனி நட்சத்திரம் ஆனால் இதன் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். இதன் மூலமாக அறிவு, தெளிவு, ஞானம் என அனைத்தும் இந்த நட்சத்திரத்தில் அளிக்கப்படுகிறது.

கிடைக்கும் பலன்கள்

நீங்கள் செய்யவிருக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அதை பூச நாளில் தொடங்கினால் அது நிச்சயம் வெற்றி அடையும். திருமணத்தடை உள்ளவர்கள் திருமணப் பேச்சை இந்நாளில் தொடங்கலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்நாளில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் முருகனைப் போல் அறிவாளியாக இருப்பார்கள்.

முருகன் பக்தர்கள்

மகாவிஷ்ணு தன் மார்பில் மகாலட்சுமியை வைத்திருக்கிறார். சிவபெருமானோ தன் உடலில் ஒரு பாதியை உமையாளுக்கு கொடுத்திருக்கிறார். பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை தன் நாவில் வைத்துள்ளார். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று முருகன் தனது பக்தர்களை தன் மனதில் வைத்து இருக்கிறார். எனவே கஷ்ட காலங்களில் முருகனை வேண்டினால் அவர்களுக்காக உடனே ஓடி வருவார் என்பது புராணங்களில் இருக்கின்றது.

மேலும் படிக்க – காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

ஆண்டியான முருகன்

ஆண்டியாக நிற்கும் முருகனுக்கு அன்னை பார்வதி தேவி வேல் வழங்கிய நாள்தான் தைப்பூச திருநாள். முருகப்பெருமானின் அருள் புரிவதற்கு தைப்பூச நாளன்று அவரின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் போதும்.

காவடி தூக்குதல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதலின் மூலமாக உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் தீராத நோயை குணப்படுத்தலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த வருடம் 2020 ஜனவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருநாளை கொண்டாட படுகிறார்கள். தைப்பூச நாள் தவிர்த்து மற்ற நாட்களில் கூட முருகனை வழிபடுவதன் மூலம் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன