சூரியக் கதிர்வீச்சில் இருந்து நம்மை காக்கும் சன்ஸ்கிரீன் லோஷன்..!

  • by
importance of sunscreen lotion during summer season

கோடைகாலம் வந்துவிட்டாலே நாம் ஒரு சில பொருட்களை மறவாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் மிக முக்கியமான பொருள் தான் சன் ஸ்கிரீன். இதைப் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய சருமம், எரிச்சல் அடையாமல் இருப்பதற்கான பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதைத் தவிர்த்து இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது.

இரண்டு வகையான தாக்கம்

சூரிய ஒளி எப்போதும் நம் சருமத்தின் மேல் இரண்டு வகையாக தாக்குகிறது. அதில் முதல் வகை நேரடியாக நம் சருமத்தை தாக்கும். இரண்டாவது வகை கண்ணாடிகள் மூலமாக நம் சருமத்தை தாக்குகிறது. நம் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அல்லது ஏதாவது கட்டிடங்களில் இருக்கும் கண்ணாடிகள் மூலமாக, இல்லையெனில் நாம் பாதுகாப்பு என்று நினைத்து பயன்படுத்தும் சூரிய கதிர்வீச்சு எதிர்ப்பு கண்ணாடிகளின் மூலமாக நமது சருமத்தை பாதிப்படைய செய்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைக் காணலாம்.

மேலும் படிக்க – ஃபவுண்டேஷனுக்கான நிறத்தை எப்படி தேர்வு செய்வது?

சரும புற்றுநோயை உண்டாக்கும்

நேரடியாக உங்கள் சருமத்தில் சூரியக் கதிர்வீச்சு படுவதன் மூலமாக உங்கள் சருமம் அதிக படியான எரிச்சலை உண்டாக்கும். அதுவே கண்ணாடியின் மூலமாக இரண்டாவது வகை தாக்கத்தினால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காக நாம் கோடைக்காலம் என்று பாராமல் எல்லா காலங்களிலும் சன் ஸ்க்ரீனை நாம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக உங்கள் சரும அழற்சி, எரிச்சல், காயங்கள் ஏற்படாமல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும்.

எப்படி பயன்படுத்துவது

நம் சருமத்தை சுத்தமாக்கிக் கொண்டு ஈரப்பதம் காய்ந்தவுடன் சன் ஸ்கிரீனை சூரிய ஒளி படும் இடங்களில் தடவ வேண்டும். அதாவது கைகள், முகம் தேவைப்பட்டால் கால்களில் உங்கள் சன் ஸ்கிரீனை தடவலாம். நீங்கள் வெளியே செல்லும் போது மறக்காமல் சன் ஸ்கிரீனை தடவ வேண்டும். ஏனென்றால் நம்முடைய சருமத்தில் ஒரு நாளைக்கு 80 சதவீதத்திற்கு மேலான சூரிய ஒளி நம் மீது படுகிறது.

மேக்கப் போடும் பெண்கள்

ஒரு சில பெண்கள் வெளியே செல்வதற்கு முன்பாக அதிகளவிலான மேக்கப் போடுவார்கள். ஆனால் சூரிய ஒளியின் தாக்கத்தினால் இந்த மேக்கப் மிக எளிதில் கரைந்துவிடும், அதை தவிர்த்து உங்கள் சருமத்தையும் பாதிப்படையச் செய்யும். இதுபோன்ற பெண்கள் மேக்கப் போடுவதற்கு முன்பாக தங்களுடைய சருமத்தில் சன் ஸ்கிரீனை நன்கு போட்டுக்கொள்ள வேண்டும். அது உலர்ந்த பிறகு அதன் மேல் சருமத்தில் போடப்படும் பவுடரை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, அதன் பிறகு உங்கள் முகத்திற்கு மேக்கப் போடலாம்.

மேலும் படிக்க – இந்திய பெண்கள் அணியும் வளையல்களில் இருக்கும் வகைகள்.!

கருப்பாக இருப்பவர்களுக்கு குறைவாக பாதிக்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும் சூரிய கதிர்வீச்சு ஏதாவது ஒரு வகையில் எல்லாரையும் பாதிப்படையச் செய்கிறது. எனவே எவராக இருந்தாலும் தங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். முடிந்தவரை தரம் உயர்ந்த கிரீமை பயன் படுத்துங்கள் அதைத் தவிர்த்து பயன்படுத்தப்படும் நாட்கள் முடிந்தது என்றால் அதைத் தூக்கிப் போடுவது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன