கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் முகமூடியின் அவசியம்..!

  • by
importance of face mask to secure you from corona virus

கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காமல் இருப்பதற்காக நாம் அதிகளவில் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து பயணம் செய்ய துவங்கி விட்டோம். ஆனால் முகமூடி என்பது எல்லோருக்கும் அவசியமானதில்லை என்று பல அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள், அதற்கான காரணம் என்ன என்பதை காணலாம்.

முகமுடி யாருக்கு

கொரோனா வைரஸ் பாதிக்கலாம் என்ற சந்தேகத்தில் இருப்பவர்கள் மட்டுமே முகமூடியை அணிய வேண்டும். அதை தவிர்த்து வைரஸ் தொற்றுக்கள் பரவியுள்ள நபர் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் மட்டுமே முகமூடியை அணிய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர் தங்கள் உடலில் இருக்கும் வைரஸ் நோய் மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்வதற்காகவே முகமூடியை அணிய வேண்டும். அதை தவிர்த்து மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் பலவிதமான நோயாளிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும், இதனால் அவர்களை சுற்றி உள்ள காற்றில் கூட இந்த வைரஸ் பரவல் இருக்கும். இதை தடுப்பதற்காகவே பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் முகமூடியை அணிகிறார்கள்.

மேலும் படிக்க – ஆல்கஹால் சானிடேஷனை வீட்டிலிருந்து செய்வது எப்படி..!

இடைவெளி அவசியம்

ஒவ்வொருவருக்கு இடையே குறைந்தது ஆறு அடி வரை இடைவெளி விட்டு சென்றால் உங்களுக்கு முடி அவசியம் ஆகாது. அப்படி கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்வதாக இருந்தால் நீங்கள் முகமூடியை அணிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் காற்றில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை உயிர்வாழும் அந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும் நமக்கு இந்த வைரஸ் தொற்று நமக்குள் சென்று விடும் இதனால் இதுபோன்ற சூழல் அதிகளவில் பரவி வரும் மருத்துவமனைகளில் இந்த முகமூடியை அணியலாம். அதைத் தவிர்த்து வீட்டிலோ அல்லது யாரும் இல்லாத இடங்களில் இந்த முகமூடியை அணிவது தேவையற்றது.

சுவாசத்தை தாக்கும்

கொரோனா வைரஸ் நம்மை தாக்கும் முதற்பகுதி நம்முடைய சுவாச பகுதியாகும். எனவே நம்முடைய சுவாசத்தை தூய்மையாக வைத்துக் கொண்டாலே இந்த முகமூடியின் அவசியம் நமக்கு தேவை படாது. ஒரு சிலர் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முகமூடிகளை பலமுறை பயன்படுத்துகிறார்கள் இதன் மூலமாக அவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் அவர்களுக்கு நிகழப் போவதில்லை. சாதாரணமாக ஒரு முகமூடி 3 மணி நேரம் வரை நீடித்திருக்கும் தன்மை கொண்டது அதன் பிறகு அதன் செயல்பாடு குறைந்து நமக்குத் தேவையற்றதாக மாறுகிறது. எனவே இதுபோன்ற முகமூடிகளை தவிர்ப்பது சிறந்தது.

மேலும் படிக்க – பூக்கள் மற்றும் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

வேலை செய்பவர்கள்

கடை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் முகமூடியை எப்போதும் அணிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவதனால் ஏதாவது ஒரு சூழலில் இவர்களுக்குள் அந்த வைரஸ் உள்நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நாம் முடிந்தவரை நம் கைகளை முகத்தின் அருகில் கொண்டு செல்லாமல் இருந்தாலே போதும் இந்த முகமூடியும் அவசியம் நமக்கு தேவை படாது.

முகமூடியின் மூலமாகவும் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு சிலர் தங்கள் முகமூடிகளை அடிக்கடி கழட்டி மாற்றுகிறார்கள், ஒருவேளை உங்கள் கைகளில் இந்த தொற்றுகள் கொண்டிருந்தால் அது உங்களின் முகமூடிக்குள் சென்று விடும். எனவே இது போல அடிக்கடி கழட்டுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டாலே இந்த வைரஸ் தொற்று உங்களை தாக்காமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன