மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்திற்கு உடனடி தீர்வு..!

  • by
immediate solution for stress and anxiety

மேலை நாடுகளில் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தை குறைப்பதற்காகவே ஏராளமானேர்கள் இருக்கிறார்கள். இதன் மூலமாக அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் நிலையை மாற்றி அமைப்பதற்காக மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் மன அழுத்தத்தை போக்குபவர்களை சந்தித்து தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற வல்லுநர்களை சந்திப்பதில் நமக்கு ஏராளமான சிக்கல்கள் உருவாகிறது. அதை அனைத்தையும் தீர்த்து மிக எளிமையான முறையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் வல்லுனர்களை நாம் இந்த செயலியின் மூலமாக சந்தித்து நம்முடைய நிலையை மாற்றியமைக்க முடியும்.

உளவியல் சிகிச்சை

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டத்தில் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக அல்லது சக மாணவர்கள் மூலமாக மன அழுத்தப் பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரி அல்லது வேலையினால் ஏற்படும் அழுத்தங்கள் அதிகரிக்கும். இதேபோல் குடும்பத்தை வழிநடத்தும் குடும்பத் தலைவர்கள் அல்லது தலைவிகள் குடும்பத்தை வழி நடத்துவதால் ஏற்படும் அழுத்தங்கள், அதை தவிர்த்து தங்களின் நிலைக்கு மேலான சுமைகளை சுமக்கும் அனைவருக்கும் மன அழுத்தம் அல்லது மனப் பிரச்சினைகள் அதிகமாக உண்டாகிறது. இதை மனம் விட்டுப் பேசும் போதுதான் நமக்கு சரியான தீர்வு கிடைக்கும். இதைதான் உளவியலில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் அதற்கான சிகிச்சைகளை அளித்து நம்முடைய மனநிலையை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஜோதிடர் ஷங்கர் ஹெக்டி.!

தாழ்வு மனப்பான்மை

நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மிக அற்புதமானவை, அதை மன அழுத்தத்தில் சிக்கி சீரழிக்காமல் இதுபோன்ற வல்லுனர்களை சந்தித்து உடனடியாக சிகிச்சை பெறுங்கள். ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும், இது போன்றவர்கள் ஆலோசகரை நேரடியாக சந்தித்து சிகிச்சை பெறுவதை தங்கள் தயக்கத்தினால் தவிர்த்து வருகிறார்கள். இது போன்றவர்களுக்காகவே நம்முடைய செயலி இருக்கிறது. இது உங்களுக்கு விருப்பமான வல்லுநர்களை இணையவசதி கொண்டு காணொளி மூலமாக உங்கள் சிகிச்சை முறைகளுக்கான ஏற்பாடுகளை செய்து தருகிறது.

மறுபிறவி

மன அழுத்தம் என்பது விஷத்தை விட கொடியது, அதை ஆரம்பத்தில் நாம் தீர்க்க வில்லை என்றால் அது படிப்படியாக உங்களை முழுமையாக அழித்துவிடும். இதனால் உறவுகளில் பிளவுகள் ஏற்படும், தன்னம்பிக்கை குறைபாடு அதிகரிக்கும் மற்றும் வெளி உலக சந்திப்புகள் அனைத்தும் மிக கடினமாக மாறும். இதை அனைத்தையும் தடுத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றால், எங்களிடம் இருக்கும் சிறந்த வல்லுநர்களை சந்தித்து அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்றிடுங்கள். இதுவரை உங்கள் வாழ்க்கை மன அழுத்தத்தில் இருந்தால் அதை எங்கள் ஆலோசகர்களுடன் தெரியப்படுத்தி உடனடி தீர்வு பெற்று மறுபிறவி எடுத்து புதிய மனிதராக வாழுங்கள்.

மேலும் படிக்க – அட்சய திரிதியை வீட்டில் கொண்டாடும் வழிகள்..!

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு சிறந்த தொடக்கம் தேவை, எனவே இதுவரை தயங்குபவர்கள் அல்லது பயத்தினால் தள்ளி போடுபவர்கள் அனைவரும் உங்கள் தன்னம்பிக்கையை சோதித்து, இது போன்ற செயலில் ஈடுபடுங்கள். இதன் மூலமாக உங்கள் மனதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் விலகி ஒரு அற்புதமான வாழ்க்கையை தொடங்கும் சக்தியை எங்களுடன் இருக்கும் சிறந்த வல்லுநர்கள் உங்களுக்கு அளிப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன