இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்க வேண்டும்..!

  • by
if you have these symptoms then you must consult a dietitian

நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும், அச்சமயத்தில் நம் உடலில் இருக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் மருத்துவரை சந்திக்கிறேம். ஒரு சிலர் என்ன பிரச்சனை என்று தெரியாமல் தவறான மருத்துவரை சந்தித்து தங்கள் உடல் நிலையை மேலும் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுபோல் ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் அதற்கேற்ற மருத்துவரை சந்திக்க வேண்டும்‌. இதனால் உங்களுக்கு இதுபோன்ற ஒருசில அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனே டயட்டீஷியன் சந்திக்க வேண்டும்.

சகிக்க முடியாத அலர்ஜி

நம்மிடைய உடல் ஆற்றலுக்கு முக்கியமாக பயன்படுவது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள். ஆனால் ஒரு சிலருக்கு கடல் உணவுகள், பால் உணவுகள் மூலமாக அலர்ஜிகள் உண்டாகும். இதனால் சரும பிரச்சனை, முடி உதிர்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவைகள் உண்டாகும். இதுபோல் ஒரு சில உணவுகளால் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால், அந்த உணவில் இருக்கும் குறைந்த அளவு விஷத்தன்மை உங்களை தாக்குகிறதாகும். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் உங்களுக்கு அலர்ஜி உண்டானால் உடனே டயட்டீஷியனை சந்திக்க வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணரிடம் இருந்து உங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு பெற

பால் பொருளால் வயிற்றுவலி

பால் பொருள்களினால் ஒரு சிலருக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும். மனிதர்களுக்கு சிறந்தது, மனிதர்களால் உருவாக்கப்படும் பால்தான். ஆனால் நாம் குடிக்க தகுந்த எல்லா பாலையும் குடித்து வருகிறோம், அதிலும் பசும்பால், ஆட்டுப்பால், போன்றவைகளை நாம் பயன்படுத்துகிறோம். இதில் இருக்கும் புரதம் சில சமயங்களில் நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது. இதை ஆரம்பத்தில் அறிந்து ஒரு சில சிகிச்சைகளை மேற் கொள்வதன் மூலமாக உங்களுக்கு உண்டான அனைத்து பிரச்சினையையும் குணப்படுத்த முடியும்.

நெஞ்செரிச்சல்

ஒரு சிலர் காரமான உணவுகளை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உண்டாகும், ஆனால் அதன் தாக்கம் சில மணி நேரத்தில் குறைந்து விடும். ஆனால் ஒரு சிலர் எந்த உணவுகளை எடுத்தாலும் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகள் உண்டாகும். இதுபோல் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் கற்பூரம்..!

உயர் ரத்த அழுத்தம்

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் போதுமான அளவு கொழுப்பு சக்தி இருக்க வேண்டும். ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பதனால் கெட்ட கொழுப்புகள் அதிகமாக நம் உடலில் சேர்ந்து விடுகிறது. இதனால் நமக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு எரிச்சல், நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. எனவே உங்கள் உணவுகளில் கட்டுப்பாடுகளை விதித்து சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும், அதற்கான அறிவுரைகளை டயட்டீசியனுடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உணவுப் பழக்கம்

ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு உணவுகளை உண்டு கொண்டே இருப்பார்கள். அதிலும் மன அழுத்தம் உள்ளவர்கள் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு தங்கள் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக நினைத்துக் கொண்டு தங்கள் ஆரோக்கியத்தை அழித்து வருகிறார்கள். நமக்கு எப்போது பசிக்கிறதோ அப்போது மட்டும் தேவையான உணவுகளை உண்ண வேண்டும், அதை தவிர்த்து தோன்றும் போதெல்லாம் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது கெட்ட பழக்கமாக மாறி விடும். இருந்தும் உங்களால் உணவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் டயட்டீஷியனுடனின் ஆலோசனையைப் பெறலாம்.

உடல் பருமன்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது உடல் எடை அதிகரிப்பது. இதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள்தான் முழுக்க காரணம் என்று சொல்ல முடியாது. இதை தவிர்த்து உடலில் அசைவின்மை, உடற்பயிற்சியை தவிர்ப்பது, அதிக அளவிலான மன அழுத்தம் போன்றவைகளினால் உடல் பருமன் பிரச்சினை உண்டாகிறது. இருந்தும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாகவே இந்த பருமன் பிரச்சினையை நம்மால் தவிர்க்க முடியும். அதற்கான சிறந்த ஆலோசனையை டயட்டீஷியன்கள் அளிப்பார்கள்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்..!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் என்றால் அவர்கள் டயட்டீஷியனின் அறிவுரையை கேட்க வேண்டும். நாம் சரியான அளவு சரியான உணவுகளை எடுத்துக் கொண்டாலே நம்முடைய ஆரோக்கியம் பலமாக இருக்கும். ஒரு சில வயது கடந்தவுடன் நம் உடலில் செரிமான பிரச்சனைகள் மனச்சிக்கல்கள் போன்றவைகள் உண்டாகும், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் உணவுகளை நாம் டயட்டீஷியனின் அறிவுறையைக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன