ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

I LOVE YOU will help in your life

காதல் என்பது மிக அற்புதமான உணர்வு, இது பலருக்கும் எளிதில் கிடைப்பதில்லை என்று நாம் தவறாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் எல்லா இடத்திலும், எல்லோர் மனதிலும் காதல் உணர்வு இருக்கிறது. அதை வெளிக்காட்டும் விதங்கள் தான் வேறு. நம் மனதில் காதல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும் ஆனால் உங்கள் துணையோடு அல்லது நண்பர்கள், குடும்பத்தினர்கள் அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் காதலை வெளிக்காட்டுவார்கள். இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனம் நம்மிடம் இல்லாததால் நமக்கு காதல் கிடைக்கவில்லை என்று தவறாக புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் உங்கள் மனம் அவர்களின் அன்பை புரிந்து கொண்டு உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. காதல் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஆரோக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

திருமணம் மற்றும் உடல்நலம் பற்றிய ஆராய்ச்சியில் யார் ஒருவர் உறவில் இருக்கிறாரோ அல்லது காதலித்து வருகிறார்களே அவர்கள் குறைந்த அளவே மருத்துவரை சந்திக்கிறார்கள். அதேபோல் உங்களை ஒருவர் காதலிக்கிறார்கள் என்றால் அவருக்காக உங்களை நீங்கள் அதிகமாக கவனித்துக் கொள்வீர்கள். உங்கள் நண்பர், காதலன், காதலி உங்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுவார்கள். உதாரணத்திற்கு உங்கள் உணவுகளை நீங்கள் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டீர்களா என்பதை அவ்வப்போது விசாரித்துக் கொண்டே இருப்பார்கள். எனவே உங்களை அறியாமல் காதல் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

திருமணத்துக்குப் பின்பு நமது அழுத்தம் அதிகரித்துவிட்டது என்று நினைப்போம் ஆனால் உண்மையில் உறவில் இருப்பவர் மற்றும் உறவு இல்லாதவர்கள் மேல் நடத்தப்பட்ட ஆய்வில் உறவில் இருப்பவரை விட இல்லாதவர்களே அதிக அழுத்தத்தில் வாழ்கிறார்கள். எனவே நாம் எப்போது திருமணம் உறவில் ஈடுபடுகிறேமோ அப்போதிலிருந்து நம்முடைய பொறுப்புகள் அதிகரித்து நமது வேலைகளில் கவனம் செலுத்துகிறோம். இதனால் நமக்கு ஏற்படும் அழுத்தங்கள் குறைந்து நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறோம். அதே சமயத்தில் காதல் துணை இல்லாதவர்கள் சுதந்திரமாக மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதிலிருந்து காப்பாற்றுவதே உங்கள் உறவு தான்.

மேலும் படிக்க – காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியினர்களின் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். ஆய்வுகளின் அடிப்படையில் ஒருவரின் இரத்த அழுத்தம் அவர்களின் உறவை பொருத்து அமைகிறது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றால் உங்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சினை என்பதே இருக்காது. இது போன்றவர்கள் உறவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை மட்டுமே பரிமாறி வாழ்வார்கள்.

காதல் உணர்வு அதிகமாக ஏற்படும்போது நமது மூளையில் ஏதோ போதைப்பொருளை பயன்படுத்திய சந்தோஷத்தை தருகிறதாம். நம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கு காரணம் அது ஒருவிதமான மகிழ்ச்சியை எப்போதும் தூன்டிக் கொண்டே இருக்கும். காதல் உணர்வு, டோபமைன் என்ற ஆற்றலை மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கும் திரவியம் நமது மூளையில் சுரக்கிறது. இதனால் நாம் எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இருப்போம்.

மேலும் படிக்க – இதயங்கள் பரிமாறி, இமைகளில் உணர்வுகளால் சங்கமிப்பது காதல்

ஐ லவ் யூ என்ற வார்த்தையை ஒருவரிடம் நீங்கள் சொல்லும் போது உங்களுக்கு அது சாதாரண வார்த்தையாக தெரியும். ஆனால் அந்த வார்த்தையை கேட்பவர்களுக்கு அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் அவருக்குள் இருக்கும் வலிகளை குறைந்து, பதட்டத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே முடிந்தவரை இந்த வார்த்தையை உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பயன்படுத்துங்கள்.

காதல் உணர்வு உங்களுக்கு ஏற்படும் ஜலதோஷம் பிரச்சனை, உடல் கோளாறுகள் போன்றவைகளை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மற்றவர்களை ஒப்பிடும்போது காதல் உணர்வில் இருப்பவரை உடனடியாக சரி செய்கிறது.

எந்த ஒரு தம்பதியினர் கள் அடிக்கடி ஐ லவ் யூ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது, அதே சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக நீண்ட காலாம் உயிர் வாழ்கிறார்கள்.

எனவே நம் உடலில் இருக்கும் ஒரு அற்புதமான உணர்வுதான் காதல். அதை உணர்ந்து உங்கள் துணை, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அன்பை வெளிப்படுத்துங்கள். இதனால் அவர்களுக்கும் நல்லது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது எனவே காதலை அழிக்கும் மற்ற உணர்வுகளை அழித்து தயக்கமின்றி ஐ லவ் யூ என்ற வார்த்தையை பயன் படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன