கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருக்க இதை செய்யுங்கள்..!

  • by
husband and wife should do this for happy life

உலகம் தொடங்கிய காலங்கள் முதல் இன்று வரை ஆண் பெண் உறவு என்பது அழியாமல் வாழ்ந்து வருகிறது. இக்காலத்தை ஒப்பிடுகையில் அக்காலத்தில் வாழ்ந்து வந்த கணவன் மற்றம் மனைவி இருவரும் அன்பைப் பரிமாறி தங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பாக கடந்து வந்தார்கள். ஆனால் இக்காலத்தில் உள்ள கணவன் மற்றும் மனைவி இருவரும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி இவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கணவன் மற்றும் மனைவி ஒற்றுமையாக அன்பை மட்டும் பரிமாற வேண்டும் என்றால் இந்த வழிகளை பின்தொடருங்கள்.

மனைவியின் கவனத்திற்கு

கணவன் மனைவி உறவு என்பது ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டு உதவியாக இருக்கவேண்டும். அதை தவிர்த்து உங்கள் கணவன் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்து அதைச் சுட்டிக்காட்டி வாழக்கூடாது. அதைத் தவிர்த்து அந்தத் தவறுகளை சரி செய்வதற்கான வழிகளை அவர் புரியும்படி தெளிவாக சொல்லவேண்டும். 

மேலும் படிக்க – இந்த நிலையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினை இருக்காது..!

பெண்கள் சில சமயத்திலும் கணவனை விட நான் சிறந்தவள் என்ற கர்வத்தை வெளிக்காட்டக் கூடாது. ஆண் பெண் இருவரும் சரி சமம் என்று வாழவேண்டும், அதைத் தவிர்த்து பெண்கள் ஆண்களை அவ்வப்போது கேள்விகளை கேட்க கூடாது. அவர்களுக்கு நீங்கள் அளிக்கப்படும் சுகந்திரத்தின் அடிப்படையில் நீங்கள் கேள்வி கேட்பதற்குள் அவர்கள் பதில் அளித்து விடுவார். ஒரு சில பெண்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள், இதுவும் சில சமயங்களில் பிரச்சினைகளை உண்டாகும். எனவே ஆண்கள் மேல் அக்கறை உள்ள பெண்கள் அவர்களின் செயல்களை கேட்டு அறிய வேண்டும். அதை தவிர்த்து அந்த செயல்களை தடை செய்வதோ அல்லது அதனால் ஏற்படும் பிரச்சினைகளை மட்டும் கூறுவதோ என்பதை தவிர்க்க வேண்டும்.

கணவனின் கவனத்திற்கு

ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு எது வென்றால், பெண்களை குறைத்து மதிப்பிடுவது. இதனால், தான் செய்யும் பெரிய காரியங்களை அவர்களிடமிருந்து மறைப்பார்கள். எனவே ஆண்கள் பெண்களை எப்போதும் சரிசமமாக பார்க்க வேண்டும். இதை தவிர்த்து எந்த ஒரு செயலையும் செய்வதாக இருந்தாலும் உங்கள் துணையுடன் ஆலோசனை கேளுங்கள். அது சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், தவறாக இருந்தால் அவருக்கு புரிய வையுங்கள். எப்போதும் உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அவர்கள் செய்யும் வேலையை அலட்சியப்படுத்த வேண்டாம். அதை தவிர அவ்வப்போது அவர் செய்யும் காரியங்களை புகழுங்கள். பெண்களின் சந்தோஷம் உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உள்ளது. எனவே ஈகோ போன்றவற்றை தவிர்த்து எப்போதும் அன்பை பரிமாறுங்கள்.

மேலும் படிக்க – உங்கள் காதல் வெற்றி அடைய இதை செய்யுங்கள்..!

அன்பின் விதிகள்

ஆண் பெண் உறவு அழகாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ வேண்டும். நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதினால் வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது. இதனால் விவாகரத்துக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிடுவதை தடுத்து அவர்களை புரிந்து கொண்டு அன்பை பரிமாறி வாழுங்கள்.

ஆண் பெண் உறவில் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த உறவு நீண்ட வருடங்கள் தொடர்கிறதே அதுதான் சிறந்த உறவாகும். எனவே எதற்கெடுத்தாலும் பிரிவு, சண்டை, கோபம் என்று இல்லாமல் ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு வாழுங்கள். இதைத் தவிர்த்து ஆண், பெண் இருவரும் எதிர்பாலினம் என்ற எண்ணங்களை முழுமையாக தவிர்த்து இருவரும் ஒன்றுதான் என்ற மனநிலைக்கு மாறுங்கள், இதுவே உங்கள் குடும்ப வாழ்க்கையை அழகாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன