ஹாவர்ட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கணிப்பு..!

  • by
howard university research regarding corona virus

அமெரிக்காவில் ஏராளமான பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். இதன் மூலமாக கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மற்றும் அதன் தாக்குதல் எவ்வாறு இருக்கும் என ஏராளமான கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். இச்சமயத்தில் கொரோனா வைரசை நாம் முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் நமக்கு மேலும் சிலவருடங்கள் சமூக இடைவெளியை பின் தொடர வேண்டாம் என உலக சுகாதார துறைக்கு ஹவர்ட்ஸ் பல்கலைக்கழகம் அறிவுரை கூறியுள்ளது. ஹவர்ட்ஸ் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ஹவர்ட்ஸ் பேராசிரியர்

ஹாவர்ஸிற்றில் உள்ள பரிசோதனை மையத்தில் கொரோனா வைரசை தயாரித்து அதை சீனாவிற்கு விற்றதாக ஏராளமான செய்திகள் இணையதளத்தில் பரவி வருகிறது. இதன் மூலமாக ஹவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் கைது செய்யப்பட்டார் என செய்திகளும் வெளியாகின. இது அனைத்தும் தவறான செய்தி என டைம்ஸ் என்ற பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பேராசிரியர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர் இவருக்கு சில பணப்பரிமாற்றம் சீனர்கள் செய்துள்ளார்கள் இதனால் இவர் கொரோனா வைரசை உற்பத்தி செய்து வெற்றி பெற்றார் என மற்ற விஞ்ஞானிகள் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இதற்கும்,  கொரோனா வைரஸிற்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அமெரிக்காவில் உள்ள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

மேலும் படிக்க – சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்..!

ஹவர்ட்ஸ் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட உலகிலுள்ள 70 சதவீத மக்களை தாக்கும் என ஹவர்ட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு உள்ளார்கள். ஆனால் இதில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்பதை பற்றிய தெளிவான கருத்துக்கள் அவர்கள் கூறவில்லை. ஒருவேளை மக்களின் பயம் இதுபோன்று கருத்துக்களினால் அதிகரிக்கும் என இதுபோன்ற தகவல்களை இவர்கள் வெளியிடுவதில்லை. அதேபோல் கொரோனா வைரஸிற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் செயல் மேலும் சில வருடம் நீடிக்கும் என கூறி உள்ளார்கள்.

சமூக இடைவெளி

அனைத்து நாடும் சமூக இடைவெளியை கிட்டத்தட்ட 2025 வரை நீட்டிக்க வேண்டும் என ஹவர்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறி வருகிறார்கள். குறைந்தபட்சம் 2022 வரையாவது சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் இந்த வைரஸ் தொற்று உலகில் உள்ள மக்கள் தொகையை பாதியாக குறைந்துவிடும் என தங்கள் பயத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க – வறட்டு இருமலைப் போக்கும் மஞ்சள்..!

ஆராய்ச்சியின் முடிவு

ஹவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்டத்தை தாண்டி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இருந்தும் இதை முழுமையாக பரிசோதிப்பதற்கு மேலும் 12 மாதங்கள் ஆகலாம் என இவர்கள் கூறிவருகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை முதல் கட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள், இது வெற்றியடைந்தால் நமது சமுதாயம் பாதுகாக்கப்படும்.

உலகில் உள்ள ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் தங்களால் முடிந்த வரை மாற்று மருந்தை தயாரித்து வருகிறார்கள். இவர்கள் இரவு பகல் உறங்காமல் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள், இருந்தும் இந்த வைரஸிற்கான மருந்தை யார் கண்டு பிடிக்கிறார்களோ அது அவர்களுக்குப் பெருமை அளிப்பதை விட அந்த நாட்டிற்கு பெருமையும் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் முழு முயற்சியுடன் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன