வேலை செய்யும் இடங்களில் உங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?

  • by
how you sould expose yourself at your work

சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி ஒரு சராசரி இளைஞன் தனது வாழ்நாளில் 60% வேளைகளில் தான் கழிக்கிறான். அதைத்தொடர்ந்து மீதமுள்ள 40 சதவீதத்தில் 20% வேலையைப் பற்றி சிந்திக்கிறான். இப்படி என்னேரமும் விலையை பற்றி நினைத்து வாழும் இளைஞர்கள் தங்கள் வேலை செய்யும் இடத்தை எப்படி எல்லாம் நிர்வகிக்க வேண்டும். நம் முக்கியமான சில காலங்களை வேலை செய்து கொடுக்கும்போது அதை எப்படி எல்லாம் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் மாற்ற வேண்டும். இதற்கான வழிகளை இங்கே காணலாம்.

புன்னகை அவசியம்

புதிதாக ஒரு அலுவலகத்திற்கு செல்லும் போது உங்கள் முதல் நாள் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உங்கள் மற்ற அனைத்து நாட்களும் அமையும். எனவே முதல் நாள் வேலைக்கு செல்லும்போது உங்கள் முகத்தில் புன்னகையுடன் செல்லுங்கள் அதைத் தவிர்த்து பயமும், தயக்கமும் இருந்தால் உங்களின் தன்னம்பிக்கை குறையும். இதனால் மற்றவர்களும் உங்களை விளையாட்டு பொருளாக பார்க்க தொடங்கி விடுவார்கள். எனவே எல்லாரையும் கவரும் வகையில் எல்லாரிடமும் ஓர் மெல்லிய புன்னகையை வெளியிடுங்கள், அதைத் தவிர்த்துக் அவர்களை பாராட்டுவதும் கொண்டிருங்கள்.

மேலும் படிக்க – உங்கள் தினசரி வாழ்க்கையை இப்படி வாழுங்கள்..!

மேஜைகளை பராமரியுங்கள்

நீங்கள் வேலை செய்யும் மேஜைகளின் மேல் எல்லோரும் கவரும் வகையில் அழகான அலங்கார பொருட்களை வையுங்கள் ஒரு சிலர் சப்பாத்தி கள்ளிச்செடிகளை வளர்ப்பார்கள் மற்றவர்கள் அழகான காபி கப் அல்லது வண்ண வண்ண ஸ்டிக்கர்கள், எழுத்துக்கள் மற்றும் சிறிய வகை பொம்மைகளை வைத்து தங்களின் மேஜையை அழகூட்டுவார்கள். இது மற்றவர்களை கவருவதற்கு மட்டுமல்லாமல் உங்கள் வேலையை சலிப்பில்லாமல் செய்வதற்காகவும் உங்களுக்கு உதவும்.

எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்

உங்களை ஏதேனும் ஓர் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதாகக் இருந்தாலும் அல்லது அலுவலக கொன்டாட்டங்களுக்கு அழைத்திருந்தாலும் அதற்கு முன்னரே தயாராக இருங்கள். அங்கே என்ன பேசலாம், எவ்விதமான ஆடைகளை அணியலாம், எப்படி எல்லோரையும் கவரலாம் என்று சிந்தித்து அதற்கேற்ப செல்லுங்கள். இதனால் உங்கள் தரம் மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.

மேலும் படிக்க – அன்றாடம் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்

தாமதமில்லாமல் வேலைகளை முடியுங்கள்

வேலை செய்யும் நேரங்களில் எப்போதும் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலைகளை முடிந்தவரை கொடுத்த நேரத்தில் முடித்து விடுங்கள். இதனால் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் போது உங்களின் மேலதிகாரி உங்களை எந்த கேள்வியும் கேட்காமல் உங்களை மதிக்க தொடங்கிவிடுவார். எனவே குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடியுங்கள்.

இந்த வழிகளை அனைத்தையும் கடைப்பிடித்து உங்கள் வேலை நேரத்தை அழகாக்கலாம். அதைத்தொடர்ந்து உங்களை பார்த்து மற்றவர்களும் பின் தொடருமாறு நடந்து கொள்ளுங்கள். இது உங்கள் தரத்தை உயர்த்தும் அதே போல் எல்லோரும் உங்களை போல் இருக்க ஆசைப்படுவார்கள். இதுபோல் நேர்மறை எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். வேலையும் சுலபமாக இருக்கும், உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன