வாழ்வதற்கு சரியான முதலீடு திட்டம் அவசியம்..!

  • by
how you should invest your money

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாம் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகவே எந்த ஒரு வேலைக்கும் செய்யாமல் வீட்டில் அடைந்து கிடக்கிறோம். இதன் மூலமாக நம்முடைய அன்றாட வருமானம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் வேலை செய்பவர்கள், தனியார் வேலை செய்பவர்கள் மற்றும் தொழில் செய்து வாழ்க்கையை கடந்து வருபவர்கள் என எல்லோரையும் இந்த வைரஸ் பெரிதாக பாதித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சமநிலையில் இருக்கும் நிலையிலும் இவர்களுக்கு ஊதியம் சரியாக கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடல்

உங்கள் வருமானம் குறைந்தாலோ அல்லது பாதி வருமானத்தை உங்களுக்கு அளித்தாளே அந்தப் பணத்தை சரியான திட்டமிடலுடன் செலவு செய்யுங்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு செலவு செய்த பிறகு மீதி இருக்கும் பணத்தை சேமிப்பதன் மூலமாக உங்கள் எதிர்காலத்தை பயமில்லாமல் எதிர்கொள்ளலாம். ஒரு சிலர் தங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்யும் திட்டங்களில் இருப்பார்கள், இது போன்றவர்கள் தவறான பொருட்களின் மேல் முதலீடு செய்து உங்கள் வாழ்க்கையை கடினமாக்காதீர்கள்.

மேலும் படிக்க – கொரோனா தாக்கத்தால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்குமா.?

போதுமான வருமானம்

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு போதுமான அளவு வருமானம் வந்து கொண்டிருந்தாள் அதை சரியாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரிவர வருமானம் ஏதும் இல்லை எனில் அதை நினைத்து கவலைப்படாமல் குறைந்த பணத்தை வைத்து உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து வேறு எந்த பொருட்களையும் இதுபோன்ற சமயத்தில் வாங்காதீர்கள், முடிந்தவரை உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் தொழில் செய்பவர்கள் வங்கிகளில் போதுமான அளவு பணம் இருக்கும், அதை மீண்டும் வேற எந்த ஒரு தொழிலிலும் முதலீடு செய்யாமல் சரியான நேரம் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளுங்கள்

உங்களிடம் சிறிய சேமிப்பு இருந்தும் அதை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்ற சந்தேகம் உங்களுக்கு நிகழலாம். இது போன்ற சூழ்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது, எனவே மருத்துவத் துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். இல்லையெனில் மாஸ்க் மற்றும் கையுறைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை விலைக்கு வாங்கலாம். இதன் மூலமாக அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கு தேவையான பணவரவு இதன் மூலமாக கிடைக்கும். அதேபோல் இந்த சூழ்நிலைக்கு எந்த தொழில் சிறந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். அதைத் தவிர்த்து இதுவரை எத்தனை பேர் உங்கள் ஊரில் அதே தொழிலை செய்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள், இதுபோன்ற முயற்சிகள் தான் தான் உங்கள் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸினால் வேலை இழப்பு அதிகரிக்குமா..!

பொருளாதார நிலை

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பங்கு சந்தை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, மற்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பொறுத்து இந்தியா செய்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருத்தில் கொண்டு ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் பங்கை அதிகமாக வாங்கியுள்ளார்கள். இதனால் நம் நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு அசையா சொத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

யார் வீட்டில் சரியான திட்டமிடல் இருக்கிறதோ அவர்களின் வாழ்க்கைதான் இறுதிவரை மகிழ்ச்சியாகச் செல்லும். எனவே தோல்விகளைக் கண்டு பயப்படாமல் உங்கள் பணத்தை தைரியமாகவும் சரியான திட்டங்களுடன் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்வதற்கு முன்பாக அதில் இருக்கும் பிரச்சினைகள், அதை நீங்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். இந்த செயல் உங்கள் வாழ்க்கையை மிக செழுமையாக மாற்றும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன