ஆபாசப்படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு..!

  • by
how watching porn may affect you

உலக அளவில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. அதிலும் சிறுவர்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களின் ஆபாசப்படங்களை செல்போன்களில் வைத்திருந்தாலோ அல்லது அதை பகிர்ந்தாலும் அவர்களின் மேல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தது, அதன்படி ஒரு சிலரை கைதும் செய்தது.

தமிழ்நாடு

ஆபாச படங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டி வருபவர்களை இந்திய அரசு கண்காணித்து வருகிறது, அதைத் தவிர்த்து மக்களின் அற்ப எண்ணங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு சில ஆபாச படங்களை தாங்களே தயாரிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். ஆபாச படம் அதிகமாக பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு உள்ளது. இருந்தும் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏராளமான ஆபாச பட இணையதளங்கள் தடை செய்ததை, தவிர்த்து செல்போன் சேவைகளை அளிப்பவர்களும் இது போன்ற இணைய தளங்களுக்கு தடை செய்தது.

மேலும் படிக்க – அன்றாட வாழ்வுக்கு அடிப்படையான ஆரோக்கியம்

வீபிஎன் வழிகள்

ஆனால் என்னதான் அரசாங்கம் ஆபாச படம் இணைய தளங்களை தடை செய்தாலும் அதை குறுக்கு வழியில் பார்க்கும் தந்திரங்கள் நம்முடைய இளைய சமுதாயத்திற்கு நன்கு தெரிந்துள்ளது. இவர்கள் வீபிஎன் வழிமுறைகளை பின்தொடர்ந்தது இன்றும் ஆபாச படங்களை பார்த்து வருகிறார்கள். எப்போதெல்லாம் இளைஞர்கள் தனிமையில் இருக்கிறார்களோ அல்லது எப்போதெல்லாம் அவர்களுக்கு காமம் எண்ணம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் இது போன்ற இணைய தளத்திலேயே முழுகி வாழ்கிறார்கள். இது ஆரம்பத்தில் ஒரு அற்ப சந்தோஷத்தை அளித்தாலும் இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக இவர்களின் எதிர்காலம் பாதிப்படையும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆபத்தில் முடியும்

ஆபாச படம் என்பது நாம் எதிர்பார்த்ததைவிட வெவ்வேறு விதத்திலும், வெவ்வேறு கதையம்சம் கொண்டு உருவாக்குவது. இதனால் இதை பின்தொடரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்கள் உடலுறவு என்றால் இது போன்ற செயல்களினால் பூர்த்தி அடையும் என்று தவறான விம்பங்களை பின்தொடர்கிறார்கள். இதனால் திருமணமான பிறகு ஆபாச படத்தில் பார்ப்பது போல செய்ய முயற்சி செய்கிறார்கள், அது தவறும் பொழுது தகாத உறவுகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.

மேலும் படிக்க – மகத்துவ சத்துக்கள் பல கொண்ட மல்லி விதை

உடலுறவில் பிரச்சனை

தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பவர்கள் அதிகளவில் சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் உங்கள் உடல் சுயஇன்பத்திற்காக தயாராகிவிடும், எனவே எதிர்காலத்தில் நீங்கள் உடலுறவு மேற்கொள்ளும் பொழுது ஒரு சில நிமிடங்களிலேயே உங்கள் உணர்ச்சிகள் வெளியேறி உங்கள் உடல் தொய்வடையும். இதனால் எதிர்காலத்தில் உங்களை நம்பி வந்த பெண்ணை திருப்திப்படுத்த முடியாத சூழல் நிகழும். இதனால் உங்கள் மேல் உள்ள மரியாதை மற்றும் மதிப்புகள் அனைத்தும் கலையும், அதைத் தவிர்த்து கணவன் மனைவிக்குள் அன்பு குறையும். இது விவாதத்திற்கான காரணமாகவும் மாறும். எனவே ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பவர்கள் முடிந்தவரை சுய இன்பங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சுய இன்பம் மேற்கொள்வதினால் ஏராளமான நன்மை இருக்கிறது என்று பலரும் உங்களுக்கு அறிவுரை கூறி இருப்பார்கள். அது ஒருவகையில் உண்மையானாலும் தொடர்ந்து இதை செய்வதன் மூலமாக உங்கள் உடல் நிலை பாதிப்படையும். அதைத் தவிர்த்து உங்கள் உடலும் சுய இன்பத்திற்கு மட்டுமே தயாராகி, உண்மையில் உடலுறவு மேற்கொள்ளும் போது உங்களுக்கு போதுமான அளவு இன்பத்தைத் தராது, எனவே உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆபாசப் படங்களைப் பார்ப்பதை குறைக்க வேண்டும், அதை தவிர்த்து அதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது தான் வாழ்க்கை என்று மூழ்கி விடக்கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன