ஆரோக்கியமான முறையில் பொதுத் தேர்வை எப்படி எழுதுவது..!

  • by
how to write your board exams with healthy way

கொரோனா வைரஸ் பாதிப்பினால் தமிழகம் முழுவதும் முடக்கில் உள்ளது. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்து அவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்தார்கள். ஆனால் பொதுத்தேர்வு மட்டும் திட்டப்படி நடக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதனால் உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உங்கள் தேர்வுக்கு உங்களை எப்படி தயார் செய்து கொள்வது எப்படி என்பதைக் காணலாம்.

கொரோனா வைரஸ்

உலகம் முழுக்க பரவி வரும் கொடிய வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தினால் பல நாடுகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறது. இதற்கிடையே இந்தியா இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் கட்டத்தை எட்டி உள்ளது. இது மூன்றாவது கட்டத்திற்கு சென்றால் நம்முடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது.

மேலும் படிக்க – சீரகம், உலர்ந்த திராட்சை மற்றும் ஆளி விதை நீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள்..!

பொதுத் தேர்வு தள்ளிவைப்பு

ஒன்றாவது முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முழுமையாக ரத்து செய்து அவர்கள் நேரடியாக அடுத்தகட்ட படிப்பிற்கு செல்லலாம். ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டும் தள்ளி வைத்துள்ளார்கள், கொரோனா வைரஸ் பரவுவது நின்றபிறகு அவர்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள். அனைத்து மாணவர்களும் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கூடுதலாக 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு தங்கள் தேர்வை தொடங்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பினால் பல இடங்களில் போக்குவரத்துகள் குறைந்துள்ளது, இதன்மூலமாக மாணவர்கள் அவதிக்குள்ளாவதை தடுப்பதற்காக இது போன்ற செயலை தமிழக அரசு செய்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விட்டு அவர்கள் தேர்வு எழுத வேண்டும், அதற்கு ஏற்றார் போல் அவர்களின் மேஜை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தேர்வு

மாணவர்கள் தங்கள் பொதுத்தேர்வில் கவனத்தை செலுத்துவதற்கு முன்பாக தங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். இதனால் மிக ஆரோக்கியமான முறையில் கையுறை, முகமூடி போன்றவைகளை அணிந்து அவர்கள் தேர்வு நிலைகளுக்குள் செல்ல வேண்டும். அதை தவிர்த்து தேவையற்ற இடங்களை தொடுவது, தனது நண்பருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

பயிற்சி பெறும் முறை

தேர்வுகளுக்கு நீங்கள் தனிமையில் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஓய்வில் இருப்பதினால் உங்களுக்கு நீங்களே உதவிக் செய்து கொள்ளுங்கள். அதை தவிர்த்து கூட்டு முயற்சியில் படிப்பை மேற்கொள்ளாமல், தனிமையில் படியுங்கள். அதிகாலை 5 மணி அல்லது ஆறு மணிக்கு எழுந்து ஒருமுறை உங்கள் பாடம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசிரியர் உங்களுக்கு என்ன கற்பித்தார்களே அது உங்களின் நினைவில் வரும் எனவே தேர்வின்போது இதை மீண்டும் நினைத்து உங்கள் தேர்வு எழுதுங்கள்.

மேலும் படிக்க – கொரானாவை தடுக்க சமூக இடைவெளி அவசியம்

பதட்டத்தை குறையுங்கள்

தேர்வின் போது பதற்றம் அதிகரித்தால் உங்கள் மூளை வேலை செய்யாது. எனவே இதை கருத்தில் கொண்டு பதட்டத்தை குறைத்து சற்று கூடுதலான நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக உங்கள் கேள்வி தாளை பாருங்கள். பின்பு யோசித்து நீங்கள் பயின்ற பதிலை எழுதுங்கள். உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை என்று பாராமல் உங்கள் மனதில் அந்தப் பாட சம்பந்தமான என்ன கருத்து தோன்றுகிறதோ அதை எழுதுங்கள். இது போன்ற கருத்தை எழுதினாலே உங்களுக்கான மதிப்பெண் கிடைக்கும்.

எனவே எந்த ஒரு விடையும் விடாமல் அனைத்தையும் எழுதுங்கள். நீங்கள் கடந்த வருடம் படித்த அனைத்தும் உங்கள் நினைவில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும், எனவே அதை கொண்டு வந்து எழுத முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் அறிவைப் பயன்படுத்தி அதற்கான விடையை எழுதுங்கள். இதுபோன்ற தெளிவுடன், பதட்டம் இல்லாமல் எழுதப்படும் பதில்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன