கோடி பலன் தரும் பைரவர் வழிபாடு செய்து பயன் பெறுங்கள்

  • by

ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும். அவரது மகிமைகள் மக்களின் குறைகள் போக்குவதில் அவர் வல்லமை தெளிவாக புரியும். கால பைரவர்  வழிபாடு என்பது எத்தனை அவசியம் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்கள் பின்ப்பற்றி வருகின்றனர். சிவனை வழிபட அவரின் அனுமதி கிடைத்தப் பின்தான் வணங்க செல்ல வேண்டும். 

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். இவரது ருதர் உருவம் நம்மை  பிரம்மிக்க வைக்கும். அஷ்டமிகாலங்களில் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடச் செய்வதில் வல்லவர் ஆவார். 

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். அவரிடம்  விளக்கு வைத்து முறயிட்டால் வேண்டுவதை நிறைவேற்றி கொடுப்பார். 

மேலும் படிக்க – போகியில் காப்பூ கட்டி பாரம்பரியத்தை கொண்டாடலாம்!

நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. இவரைப் பின்பற்றி நமது வேண்டு கோளை நிறை வேற்றி கொள்ளலாம். 

பைரவரின் அருள் கிடைத்தால் போதும் வாழ்வு எளிதாகும். தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.

சனியின் தாக்கம் குறைக்கும் பைரவர்:

சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. இவரின் சிறப்புகள் எண்ணிலங்கா ஒன்றாகும். 

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவரின் தவ வலிமையை மெச்சிய பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.

பைரவரை வழிபட்டால் எதுவானாலும் தீரும்,  சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் வேண்டி பெற்று கொண்டார். 

சனியின்  பார்வையால் பெரும் பாதிப்புகுள்ளாவோர்கள் அவரை பின்பற்றி வருதல் உத்தமம் ஆகும்.  ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

மிளகு தீபம்:

பைரவருக்கு  27 மிளகு வைத்து வெள்ளை மற்றும் சிவப்பு, மஞ்சள் துணியில் அதனை கட்டி நல்லெண்ணையில்  முந்திய நாள் இரவு ஊர வைத்து அஷ்டமி வாரநாட்களில் ராகு காலங்களில் வணங்கிவருதல் சிறப்பான பலனை தரும். 

மேலும் படிக்க – களைகட்டும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள்!

ராகு காலங்கள்,  வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில்  வழிபாடு செய்து வந்து வேலை வாய்ப்பு, கடன் தொல்லை, கல்யாண வரம் மற்றும் பணச் சேர்கை தொழில் தொடங்க உதவிப் பெறலாம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன