குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு ?

how to worship deity god

மனிதராக பிறந்த எல்லோருக்கும் தங்களுக்கென ஒரு குலதெய்வம் இருக்கும். நம் முன்னோர்கள் அவர்கள் வழிபட்ட தெய்வத்தை அவர்கள் சந்ததியினர் ஒவ்வொருவருக்கும் தங்கள் தெய்வத்தின் அருமை பெருமைகளைப் பற்றி சொல்லி அவர்களையும் குலதெய்வ வழிபாட்டை செய்யுமாறு கேட்டுக் கொள்வார்கள். இது இன்றுவரை தொடர்ந்து, நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் நம் குல தெய்வ கோவிலுக்கு சென்று சென்றுவர உதவுகிறது.

மறைந்து போகும் குலதெய்வ வழிபாடு

ஆனால் நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு சம்பந்தமில்லாத வெகு தூரத்தில் இருக்கும் கோவில்களுக்கு என் செல்ல வேண்டும் என்று நாம் தயங்குகிறோம். உண்மையில் நாம் எங்கு பிறந்தோமோ அல்லது நமக்கான குலதெய்வம் எங்கு உள்ளதோ அங்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகதான் நமக்கு அருள் கிடைக்கும். அதை தவிர்த்து மற்ற கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு எந்த பயனும் இல்லை.

மேலும் படிக்க – செவ்வாயில் முருகனின் அருள் பெற பின்பற்றுங்கள்

குலதெய்வ வழிபாடு செய்யும் முறை

குலதெய்வ வழிபாடு செய்பவர்களை எந்த ஒரு கிரகத்தினாலும் நம்மை அழிக்க முடியாது. அத்தகைய சக்தி வாய்ந்த குலதெய்வ வழிபாட்டை நாம் எப்படி செய்வது.

ஒவ்வொரு அமாவாசைக்கும் உங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று இரண்டு மண் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும். பின்பு பூஜைக்கு பயன் படுத்திய எலுமிச்சை பழத்தை கோவிலில் இருக்கும் சூலகத்தில் குத்தி வைப்பதன் மூலம் நாம் நீண்ட நாட்களாக வேண்டி வரும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.

மேலும் படிக்க – அஷ்டமியில் யாருக்கு என்ன செய்யனுமுனு பார்போம்

குலதெய்வத்தின் சக்திகள்

ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மால் முடிந்தவரை குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் உங்களுக்கு தேவையான அனைத்து செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் குலதெய்வம் மட்டுமே வாரி வழங்கும். என்னதான் நீங்கள் மற்ற தெய்வங்களை வணங்கி வந்தாலும், அந்த தெய்வங்களும் உங்கள் குலதெய்வம் வழியாகத்தான் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

நீங்கள் குலதெய்வம் வழிபாடு செய்யாதவர்களாக இருந்தால் மற்ற தெய்வத்தை வணங்குவது பயனற்ற செயலாகும். இதைப் பற்றி நன்கு ஆராய்ந்த பல ஆன்மீக முனிவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க – கணபதியின் மூலமந்திரம் பயன்படுத்தி எதிலும் ஜொலிக்கலாம்.!

பாவ புண்ணிய கணக்கு

நாம் செய்யப்படும் பாவ புண்ணியங்களை பொருத்துதான் நம்முடைய அடுத்த பிறவி அமையும். எனவே மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் பாவங்களை விட புண்ணியங்கள் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி தவறியவர்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் அடுத்த பிறவி மிக மோசமானதாக இருக்கும்.

நீங்கள் செய்யும் பாவங்களை விட புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் பலருக்கும் உதவி புரியும் வகையில் நீங்கள் உங்களின் மறுபிறவி மனிதராக இருக்கும். அப்படி புண்ணியங்களின் கணக்கு மேலும் அதிகரித்தால் உங்களுக்கு பிறப்பில்லா மற்றும் மரணம் இல்லாத ஒரு வாழ்க்கையை உங்களுக்கு சிவபெருமான் அளிப்பான்.

புண்ணியங்கள் அதிகரித்தால் சிவன் ஆலயங்கள் உள்ள ஊர்களில் நீங்கள் மனிதராகப் பிறப்பீர்கள். இதன் பின் நீங்கள் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை சிவாலயத்திற்கு சென்று வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை மிக அற்புதமாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன