கோதுமை சிறந்த ஸ்கிரப்பர் எப்படி என பாக்கலாம் வாங்க.!

how to use wheat face pack to glow your skin

கோதுமை மாவை உட்கொள்வதினால் நமது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. ஆனால் இந்த பதிவில் நாம் கோதுமை மாவை எப்படி சாப்பிடப் போகிறோம் என்பதை பார்க்கப் போவதில்லை அதற்கு மாறாக கோதுமை மாவை கொண்டு நம் சருமத்தின் அழகை எப்படி அதிகரிக்கப் போகிறோம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் அரிசிக்கு அடுத்தபடியாக அதிகமாக விளைவிக்கும் மற்றும் பயன்படுத்தும் பொருள் கோதுமை. இதை வட இந்தியர்கள் அதிகமாக உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். எனவே மிக எளிதில் எல்லோரின் வீட்டிலும் கிடைக்கக்கூடிய இந்த கோதுமை மாவை நமது முகத்திற்கு பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – பொலிவான முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க.!

சர்மத்திற்கு ஊட்டமளிக்கும் கோதுமை

கோதுமை மாவைக் கொண்டு முதலில் நாம் ஸ்கிரப்பரை தயார் செய்ய வேண்டும். இதற்கு நாம் ஒரு சிறிய பௌலில் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் சிறிதளவு சோடா உப்பை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு நமது முகம் முழுக்க இதை கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு சருமத்தை நீரில் கழுவுவதன் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் அழுக்குகள் விலகும்.

பொலிவான சருமத்தை பெற வேண்டுமென்றால் கோதுமை மாவுடன் தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நமது முகம் முழுக்க தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க – ஆவிபிடிப்பதால் புத்துணர்வு கிடைக்கப் பெறலாம்

பொலிவான சருமத்திற்கு உதவும் கோதுமை மாவு

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவுடன் பால் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதை உங்கள் முகம் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். இதேபோன்று வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய் விலகி எப்போதும் பளீரென்று இருப்பீர்கள்.

அழகில் மேம்பாட்டிற்கு உதவும் கோதுமை

உங்களுக்கு பட்டு போன்ற சருமம் வேண்டுமென்றால் கோதுமை மாவை பயன்படுத்துங்கள். இதற்கு நீங்கள் ரோஜா இதழ்கள் மற்றும் ஆரஞ்சு தோலை சிறிதாக நறுக்கிக் கொண்டு அதை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். மறுபுறம் பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து ஒன்றாக கலந்து முகம் முழுக்க தடவ வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் பட்டுப்போன்று இருக்கும் இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள் நிரந்தரமாக அழகான சருமத்தை பெற முடியும்.

மேலும் படிக்க – வெந்தயம் வைத்து பந்தயம் அழகு ஆரோக்கியம் கூட்டலாம்..

முகத்திற்கு பயன்படுத்தும் கோதுமை மாவை தரமானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் இதுவே உங்கள் சருமத்தை பாதிப்படைய செய்து விடும். அதேபோல் இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் சருமத்தில் இதை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் போகுமாறு முகத்தை கழுவ வேண்டும். இது போன்ற வழிகளை சரியாக பின்தொடர்ந்தாள் உங்கள் சருமம் அழகாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன