சரும பொலிவுக்கு லோசன் இப்படி பயன்படுத்துங்க

  • by

ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு நீர்ச்சத்து என்பது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். நமது சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வழவழப்பாகவும் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் லோஷன்கள் கூட இதில் பெரும் பங்கு வகிக்கின்றன நம் சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்

இந்த லோஷன் நாம் பயன்படுத்தும் பொழுது நமது சருமம் நீர்ச்சத்தினை எளிதாக சருமத்திற்கு பரப்புகிறது. கிரீம்களில் ஒரு வித எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் உபயோகப்படுத்தப்படும் முதன்மை பொருள்  ஈரப்பதம் தரும் பொருளாகும். சருமத்தின் மீது இது மெல்லிய லேயர் போல் படிவதால், நமது சருமம் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்கிறது. மேலும் நீரும், எண்ணெயும் பிரியாமல் இருக்கும் படி நமது சருமத்தில் படர்ந்து சருமத்தை பாதுகாத்து வைக்கிறது. இதில் அதிகமாக ரெட்டினால், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வாசனை தருவதற்காக சில வாசனைப் பொருட்களும், கிளிசரின், பெட்ரோலியம், ஜெல்லி, புரோட்டின் மற்றும் பல நிலைப்படுத்தும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சாதாரண மாய்ஸ்சுரைசிங்க்கு தேவையான அனைத்தும் இந்த கலவை சேர்க்கப்படுகின்றன.


இதன் அவசியம் என்ன?

சரிங்க லோஷன்கள் ஏன் நம் சருமத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை பற்றி பார்ப்போம். வறண்ட சருமம் உடையவர்களுக்கு இந்த லோஷன் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும். நம் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்கவும், கவனித்துக் கொள்ளவும் மாய்ஸ்சுரைசர் தேவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீரும் எண்ணெயும் கலந்த கலவை தான் இவற்றில் உள்ளன. இவற்றில் ஆல்கஹால் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் குளித்து முடித்தவுடன் சருமத்தில் தடவிக் கொள்ளும் போது நமது சரும ஈரப்பதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இதனால் சருமத்தில் இருக்கும் துளைகள் மூடப்படாமல் இருப்பதால் ஈரப்பதம் நன்றாக உள்ளிழுக்கப்படும்.

மேலும் படிக்க – நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

இதன் வகைகள்:

இந்த மாதிரி லோஷன்கள் என்னென்ன வகைகளில் கிடைக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம். இந்த லோஷன்கள் பலவகையான பிரச்சனைகளுக்காக, பலவித வகைகளில் கிடைக்கின்றன. இளமையான சருமம், நிற மாற்றத்திற்காக, சுருக்கத்தை தவிர்ப்பதற்காக, செல்லுலாய்டு பிரச்சினைகளை குறைப்பதற்காக போன்று இப்படி பல காரணங்களுக்காக லோஷன்கள் கிடைக்கின்றன. இந்த லோஷன்களை பயன்படுத்துவதால் நமது சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது தான் இது போன்ற லோஷன்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஆகும். இவை வறண்ட சருமம், இயல்பான சருமம், எண்ணெய் தன்மை கொண்ட சருமம் போன்ற காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. உங்களது சருமம் மிகவும் வறண்டு, உலர்ந்து காணப்பட்டால் நீங்கள் அதற்கு தகுந்த லோஷன்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். செல்லுலாய்டு பிரச்சனைகளை சரி செய்து மிருதுவான சருமத்தை பெறுவதற்கும், தோல் உரிவதை தடுப்பதற்கும் இந்த லோஷன்கள் உதவுகின்றன. முதுமை அடையும் பொழுது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கு இந்த லோஷன்கள் பயன்படுகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் ஆன்டி மார்க் ஸ்ட்ரெஜ் சரிசெய்யவும் இவை பயன்படுகின்றன.

மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் முறை:

நீங்கள் எங்கேனும் வெளியே செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூரிய ஒளி உடலில் படும்படி மாய்ஸ்சுரைசரை பூசிக் கொள்ளுங்கள். சூரிய ஒளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவுடன் 30 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் மாய்ஸ்சுரைசரை சருமத்தில் பூசுங்கள். நீங்கள் நீச்சல் உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்ட பின்னர், உடலை துடைத்து விட்டு பின்னர் இந்த மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது சிறந்தது.

சருமத்தின் நிறத்தை பராமரிப்பதற்கும், புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பதற்கும் இந்த லோஷன்கள் பயன்படுகின்றன. நாம் நமது சருமத்தை தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் நமது சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள இது போன்ற லோஷன்கள் உதவுகிறது.

மேலும் படிக்க – கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

இந்த லோஷன்களை பயன்படுத்துவதால் இது நமது சரும நிறத்தை சமநிலையோடு வைத்திருப்பதோடு, உடல் மற்றும் முகத்துக்கு இடையிலான வேறுபாட்டை குறைக்கிறது. புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க இந்த லோஷன்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சருமத்தை மென்மையாக்க தேவையான பாடி பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. அதனால் இந்த லோஷன்கள்  ஈரப்பதத்தை கொடுப்பதோடு, சருமம் உலராமல் மற்றும் வறண்டு போகாமல் இருக்க உதவுகின்றன. கோடை கால வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க இந்த லோஷன்கள் மிகச்சிறந்ததாகும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன