நோக்கு வர்மத்தினை ஆன்மீகத்தில் செலுத்தி ஆற்றல் பெறுவது எவ்வாறு?

hypnotism

ஹிப்னாட்டிசம் என்றால் நாம் மற்றவர்களை தொடாமல் அவர் எண்ணத்திற்குள்நுழைந்து அவர்களைக் கட்டுப்படுத்துவது தான் ஹிப்னாட்டிசம். மனிதர்களைச் சுற்றி ஏகப்பட்ட ஆற்றல்கள் சுற்றி வருகிறது, அவை அனைத்தையும் ஒரு நிலைப்படுத்தி எவன் ஒருவன் தன் வசத்தில் கொண்டு வருகிறானோ அவனுக்கு ஹிப்னாட்டிசம் என்பது எளிமையான ஒன்றாகும். ஆன்மீகத்தில் ஹிப்னாட்டிசத்தை வைத்து பலபேரின் வலிகளைப் போக்கி உள்ளார்கள். அதைத் தவிர்த்து உடல் வலி, மன வலி, மிகப்பெரிய வியாதிகளால் அவஸ்தைப்படுபவர்கள்,  மனச்சோர்வை தவிர்ப்பதற்காகவே ஹிப்னாட்டிசமை அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள்.

ஹிப்னாட்டிசம் எப்படி வேலை செய்கிறது

ஹிப்னாட்டிசம் மொத்தம் மூன்று வகையாகும். ஒருவரின் எண்ணத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும், யார் மன வலிமை குறைந்து காணப்படுகிறார்கள் அவரை ஹிப்னாட்டிசம் செய்வது என்பது எளிமையான காரியம். ஒருவரின் கண்கள் மூலமாக அவரை தன் வசப்படுத்தலாம் அல்லது உடல் மொழிகளின் மூலமாக நம் கட்டுக்குள் கொண்டுவரலாம். இல்லையெனில் அவர்கள் செய்யும் செயல்களைப் பொறுத்து அதற்கேற்ப அவர்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

மேலும் படிக்க – காகத்திற்கு படைத்து பிதருக்களிடம் ஆசி பெறுங்கள்!

ஹிப்னாட்டிசம் விளைவுகள்

உங்களை யாராவது ஹிப்னாட்டிசம் செய்துவிட்டால் அது அறிவது என்பது இயலாத காரியம். எனவே நீங்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறீர்கள் என்பதை உணர்வதற்குள் உங்களை வைத்து அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பார்கள். ஹிப்னாட்டிசம் என்பது ஒருவரின் ஆழ்மனதில் என்ன சிந்தனைகள் செல்கிறது என்பதை கண்கள் வழியாக பார்க்கக்கூடியது. எனவே உங்கள் குறைகளை கண்கள் வழியாக பார்த்து அதற்கேற்ப உங்களிடம் பழகி உங்களை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

அதுவே உங்கள் உடல் மொழியின் மூலமாக ஹிப்னாட்டிசம் செய்தால் உங்களை உடல் ரீதியாக பல இன்னல்களுக்குள் சிக்கவைப்பார்கள். உங்களை அறியாமல் நீங்கள் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல் வேறு ஒரு நபராக உருவெடுத்து அதை போல் வாழ்வீர்கள். காலப் போக்கில் இதை உணர்ந்து வெளியே வந்தால் மட்டுமே உங்களால் இது போன்ற பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.

மேலும் படிக்க – தர்பணம் தர சிறந்த நாள் தை அம்மாவாசை

நீங்கள் மிக அழகான ஆடையை அணிந்து செல்பவராக இருந்தால் உங்களை சுற்றி பல பேர் உங்கள் பக்கம் திரும்புவார்கள், இதுதான் மிக எளிமையான முறையில் ஹிப்னாட்டிசம் செய்வது. மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக நீங்கள் என்ன செய்தீர்களோ அதை தான் ஹிப்னாட்டிசம் மூலமாக கண்களுக்கு தெரியாத சில ஆற்றல்களைக் கொண்டு உங்களை அவர்கள் வசம் ஈர்த்து கொள்கிறார்கள்.

ஹிப்னாட்டிசத்திற்க்கு என்ன தேவை

ஒருவர் ஹிப்னாட்டிசம் செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதாவது அழுகை, சிரிப்பு, கோபம் என எல்லாவற்றையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தேவையான போது மட்டும் வெளிக்காட்ட வேண்டும். இப்படிப்பட்டவர்களால் மட்டும் தான் ஹிப்னாட்டிசம் செய்ய முடியும்.

ஹிப்னாட்டிசம் செய்வது என்பது யோகா பயிற்சியை போன்று. நாம் எப்படி ஒரு நிலையில் அமர்ந்து எல்லாவற்றையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு மன அமைதியுடன் மற்ற  எண்ணங்கள் எதன் மேலும் கவனத்தை செலுத்தாமல் ஒரு நிலையாக இருப்பதோ அதேபோல்தான் ஹிப்னாட்டிசம் செய்வதும்.

மேலும் படிக்க – ரம்மியமான வாழ்க்கை வாழ ரத்தினங்கள்

ஹிப்னாட்டிசத்தின் நன்மை மற்றும் தீமை

ஹிப்னாட்டிசம் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. ஒருவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வலி உணராத படி நாம் ஹிப்னாட்டிசம் மூலமாக வலியை குறைக்க முடியும். அதே போல் ஒருவர் துன்பம் மற்றும் மன கஷ்டத்தில் இருந்தால் அவர்களின் கஷ்டங்களை நம்மால் போக்க முடியும். உடல் பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை, தூக்கமின்மை என எல்லாப் பிரச்சினைகளையும் ஹிப்னாட்டிசம் மூலமாக தீர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒருவரின் ஆழ் மனதில் என்னென்ன கஷ்டங்களை இருக்கிறது என்பதை மனம் விட்டு வெளியே சொல்ல தூண்ட முடியும்.

இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் ஹிப்னாட்டிசம் மூலமாக பல பேர் தவறான செயல்களை செய்கிறார்கள். ஒரு பெண்ணை கவர்வதற்கு அவரின் மனம் மற்றும் உடல் ரீதியாக அவர்களை பயன்படுத்துவதற்கு மற்றும் வசதி படைத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்பது என அனைத்துத் தீய காரியங்களுக்கு பயன்படுத்துவதினால் இதை பலரும் எதிர்க்கிறார்கள்.

ஆன்மீகத்தில் நாம் எப்போது நம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தின் மூலமாக பல ஆற்றல்களை பெறுகிறோமோ அதைப்போல் தான் ஹிப்னாட்டிசம் செய்வதன் மூலமாக நாம் மன அமைதியை பெற முடியும். எல்லோரும் தன் மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொண்டார்கள் என்றால் எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன