கூந்தலுக்கு கண்டிஷனராக பயன்படும் மருதாணி..!

  • by
how to use henna as a conditioner for hair

நம்முடைய தோற்றத்தின் அழகை அதிகரிக்க உதவுவது நம்முடைய கூந்தல் தான். இத்தகைய கூந்தலை நாம் பலவகையான ரசாயனங்களை கொண்டு பராமரித்து வருகிறோம். இது ஆரம்பத்தில் உங்களுக்கு திருப்தியை தந்தாலும் நாளடைவில் இதனாலேயே உங்கள் கூந்தல் வலுவிழக்க தொடங்கிவிடும். இதனால் இளமையில் உங்கள் கூந்தல் அனைத்தையும் இழக்க நேரிடும். இதைத் தடுப்பதற்கு நாம் இயற்கை வழியை பின்தொடர வேண்டும்.

மருதாணியின் சிறப்பு

அக்கால பெண்கள் தங்கள் கூந்தலை பராமரிப்பிற்கு பயன்படுத்தும் இயற்கை பொருள் தான் மருதாணி. இதை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிப்பதற்கு முன்பாக இதை தலையில் தேய்த்து குளிப்பார்கள். இதனாலேயே அக்காலப் பெண்களின் கூந்தல் நீளமாகவும், கருமையாகவும் பல ஆண்டுகள் நீடித்து இருந்தது. எனவே உங்களுக்கும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் தலைக்கு மருதாணியை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

முடி உதிர்வை தடுக்கும்

சாதாரண தேங்காய் எண்ணையில் மருதாணி பொடியை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து, பிறகு ஆறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் உடனே நிற்கும். உங்களுக்கு இயற்கை மருதாணி கிடைக்கவில்லை என்றால் கடைகளில் விற்கப்படும் மருதாணி பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

கண்டிஷனர்

நம் குளித்தபின்பு நம் தலை முடிக்கு கண்டிஷனர் போடுவது வழக்கமாக இருக்கும். இதனால் நமது கூந்தல் மென்மையாகவும், பொலிவுடன் இருக்கும். எனவே மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் கண்டிஷ்னர் தயாரிக்கலாம். நாம் அரை கப் மருதாணி பொடியுடன் ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு இந்த கண்டிஷனரை உங்கள் கூந்தலில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு அலசினால் பளபளப்பான மற்றும் உறுதியான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.

பொடுகில் இருந்து விடுபட

என்ன செய்தாலும் உங்கள் கையில் இருக்கும் பொடுகுகள் குறையவில்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியவை ஒன்றுதான், அதற்கு நாம் வெந்தயத்தை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைக்கவேண்டும். பிறகு அதை அரைத்து அதனுடன் கடுகு எண்ணெய் மற்றும் மருதாணியை நன்றாக சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு வழக்கம்போல் ஷாம்புவை கொண்டு குளிக்கலாம். நீங்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சனையை வேரோடு அழியும்.

தலையில் ஏற்படும் தோல் அரிப்பு

ஒரு சிலருக்கு தங்கள் தலையில் அரிப்புகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் தலை மிக விரைவில் வறட்ச்சி அடைந்து உங்கள் கூந்தலை பாதிக்கும். இதைத் தடுப்பதற்கு நாம் மருதாணி இலை மற்றும் வேப்ப இலை அல்லது துளசி இலையை ஒன்றாக அரைத்து அதை நன்கு குழைத்து உங்கள் தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை நீரில் அலசுங்கள், இதன் மூலமாக தலையில் ஏற்படும் அரிப்புகள் அனைத்தும் விலகும்.

மேலும் படிக்க – இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு

எண்ணெய் பசை கொண்ட கூந்தல்

ஒரு சிலரின் தலையில் இருந்து எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் இவர்கள் கூந்தலை சரியாக பராமரிக்க முடியாமல் தவித்து வருவார்கள். எனவே இதை தடுப்பதற்கு நாம் முல்தானி மெட்டியுடன் மருதாணி பொடியை ஒன்றாக கலந்து நம் கூந்தல் மேல் பேஸ்டாக போட வேண்டும். இதை ஒரு மணி நேரம் ஊற வைத்து உங்கள் கூந்தலை அலசினால் தலையில் ஏற்படும் எண்ணெய் பசை அனைத்தும் நீங்கும்.

மருதாணி இயற்கையாகவே குளிர்ச்சியை அளிப்பதனால் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் உடல் நிலை கோளாறுகள் உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதை கோடைக்காலங்களில் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குளிர்காலங்களில் முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன