அடர்த்தியான கூந்தலுக்கு கேரட்..!

tips on how to use carrots to grow your hair thicker

நமது தலைமுடியின் பிரச்சினை முடிவில்லா பிரச்சினையாகவே இருக்கின்றன. ஏனென்றால், நம் அழகை மேம்படுத்திக் காட்ட உதவுவது தலைமுடி தான். சாதார நபரைக் கூட கூந்தல் அலங்காரதிற்க்கு பின்னால் மிக அழகாக காண்பிக்க முடியும். இத்தகைய சக்தி வாய்ந்த தலைமுடியை நம் பராமரிப்பதற்காக ஏகப்பட்ட செலவுகள் செய்து வருகிறோம். அனைத்திற்கும் தீர்வாக வீட்டிலேயே நாம் கேரட்டைக் கொண்டு நம் தலைமுடி அடர்த்தியாகவும், அதிகப்படுத்த முடியும் இதற்கான வழிகளை பார்ப்போம்.

தலைமுடி கருமையாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த வழிகளை பின்தொடர்ந்தாள் நிச்சயம் இது அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் இதற்காக நீங்கள் கேரட்டுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து தலைமுடி முழுவதும் தேய்த்து மசாஜ் செய்தால் போதும்.

மேலும் படிக்க – ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

முதலில் நாம் கேரட், வாழைப்பழம், யோகட், இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த விழுதினை நம் தலையில் இருக்கும் முடிகள் அனைத்திலும் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். பின்பு 30 நிமிடங்கள் அதை ஊற வைத்து பின்பு மூலிகையால் தயாரிக்கப்பட்ட ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். அப்படி உங்களிடம் இந்த வகை ஷாம்புகள் இல்லை என்றால் சீயக்காய் கொண்டு கழுவலாம் இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் கூந்தல் அடர்த்தியாக விடும்.

அடுத்து அவகோடா, தேன் மற்றும் கேரட்டை கொண்டு நம் கூந்தலை அடர்த்தியாக்குவது எப்படி என்பதை பார்ப்போம். நாம் ஒரு கேரட் மற்றும் பாதி அளவு அவகோடா எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தேனை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை நம் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பிறகு அதை மூலிகை ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு கழுவினால் போதும். இதையும் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க – பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு மேக் ஓவர் எப்படி செய்வது?

அடுத்ததாக கூந்தலை உதிர்வதில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக  இரண்டு கேரட்டுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் சிறு துளி தேன் மற்றும் யாகர்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த விழுதினை நம் தலைமுடி முழுவதும் தேய்த்து 30 நிமிடங்கள் அதை தலையிலேயே ஊற வைத்து பின்பு மூலிகை ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இதை செய்வதன் மூலம் நமது முடி உதிர்தலைத் தடுக்கலாம்.

கடைசியாக கேரட் மற்றும் கற்றாழை இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும் பின்பு அது தலைமுடி முழுவதும் அடைகிறான் என்பதை கவனித்து சிறிது மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் மூலிகை ஷாம்பு கொண்டு கழுவி வந்தால் உங்கள் கூந்தல் சில மாதங்களிலேயே வலிமையாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன