வயதான முதியவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்..!

  • by
how to take care of elders in family

வாழ்க்கை ஒரு சக்கரம், மனிதர்கள் எப்படி குழந்தையாக பிறந்து பெரியவர்களின் உதவியால் ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து வருகிறார்களோ., அதே போல் தான் வளர்ந்த பிறகு முதுமை நிலையை அடையும்போது இளைஞர்களின் உதவியினால் தங்கள் காலத்தை கடத்துகிறார்கள். ஒருவரின் உதவியால் வளர்ந்து மற்றொருவர் உதவியால் உயிர் இழக்கும் சூழல் நமக்கு ஏற்படுகிறது. இதனால் நாம் எந்த வழியில் தொடங்கினோமோ அதே வழியில் முடிகிறோம்.

முதியவர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை

ஒருவர் வயது அதிகரிக்கும் போது நாம் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை குறைத்து விடுகிறேம். அவர்களை உரிமையாக அழைக்கிறோம் என்று சொல்லி கிழவன் மற்றும் கிழவி என்று அவர்களை கூப்பிட்டு அவர்கள் மனதை புண்படுத்துகிறது. வயது முதிர்ச்சியால் மற்றவர்கள் கூறப்படும் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைகிறார்கள். இவர்களுக்கு நாம் கடைசியாக என்ன செய்கிறோமோ அது தான் நாம் வாழும்போது நமக்கு கிடைக்கும் என்று எண்ணி உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை பராமரியுங்கள். அதை செய்வதற்கான சில வழிகளை இங்கே பார்ப்போம்.

மேலும் படிக்க – காதல் பிரிவில் இருந்து வெளியேறுவதற்கான ஐந்து வழிகள்.!

முதியோர் இல்லம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு அடைத்து விடுவார்கள். இதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வாழப்போகும் சில வருடங்கள் அவர்களுக்கு பிடித்தமாதிரி என வாழ்க்கையை நாம் அமைத்து தர வேண்டும். நீங்கள் வாழும் வாழ்க்கை முழுவதையும் உருவாக்கிய அவர்களுக்காக நாம் செய்யப்போகும் கைமாறாக இருக்கும். அதை தவிர்த்து வேறு வழியில்லாமல் முதியோர் இல்லத்தில் விடும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களை தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பது கட்டாயமான ஒன்று.

மருந்துகள் மற்றும் உதவிகள்

வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக சில உதவியாளர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக அவர்கள் மருந்து மற்றும் மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

வீட்டை அவர்களுக்காக மாற்றி அமையுங்கள்

வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு இரு சக்கர நாற்காலியில் செல்வார்கள். எனவே அவர்கள் செல்வதற்கு வசதியாக வீட்டை மாற்றி அமையுங்கள். அதை தவிர்த்து கழிவரையையும் மற்றும் அதன் செல்லும் பாதையும் மாற்றி அமையுங்கள். இது அவர்களுக்கு நீங்களே செய்யப்படும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க – பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்

வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையின் முதிர்ச்சி நிலையை அடைந்து எப்போது எரிச்சலாக இருப்பார்கள். இதனால் நீங்கள் பேசும் போதெல்லாம் உங்கள் மேல் எரிந்து விழுவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு அவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டுக் கொண்டு உங்கள் மனம் விட்டு அவர்களிடம் பேசுங்கள். இது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

அவர்களை எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் வைத்துக் கொள்ளுங்கள்

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு என சிறிய வேலைகளை அவர்களுக்கு அளியுங்கள். அது பொழுதுபோக்கு வேலையாக இருந்தால் இன்னும் சரியாக இருக்கும். அதை தவிர்த்து மாலை மற்றும் காலை வேளைகளில் அவர்களை நடைப்பயிற்சி அல்லது புத்துணர்ச்சியான சுவாசக்காற்று வீசும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

இறுதிக் கட்ட ஏற்பாடுகள்

உங்கள் முதியவரின் பெயரில் ஏதாவது பணம் மற்றும் சொத்துக்கள் இருந்தால் அதற்கான பத்திர பதிவுகளை முன்பு முடித்துக் கொள்ளுங்கள். இது போன்ற சொத்துக்கள் பிரிக்கும் சமயங்களில் பல மனக்கஷ்டங்கள் ஏற்படும். எனவே இதை முதியவர்கள் கண்முன்னே செய்யாமல் அவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – இந்த ஐந்து விஷயங்களை தான் பெண்கள் கவர்ச்சிகரமானதாக ஆணிடம் பார்க்கிறார்கள்

எல்லோரும் நிச்சயம் ஒருநாள் இறந்து போக தான் போகிறோம், ஆனால் முதியவர்கள் மட்டும் இன்னும் சில நாட்களில் இறந்து போக போகிறேம் என்ற வலிகள் நிறைந்த தருணத்தில் வாழ்வார்கள். எனவே அதை உள்வாங்கி அவர்களின் கடைசி சில நாட்களை அழகாக அமைத்து அவர்களை வழி அனுப்பி வையுங்கள். இதைவிட சிறந்த கைமாறு வேறு எதுவும் இருக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன