தலைமுடி கொட்டுவதை எப்படி தடுப்பது?

how to stop hairfall

இப்போதும், எப்போதும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று தலைமுடி அதை பராமரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் நம் வாழ்நாளில் அதிக செலவு செய்கிறோம். ஏனென்றால் நமது தலைமுடி தான் நம்முடைய தோற்றத்தையும், அழகையும் நிர்ணயம் செய்கிறது. ஆனால் இதை வைத்து ஏராளமானோர் தொழில் செய்து வருகிறார்கள். நம் ஆரோக்கிய குறைபாட்டை அவர்கள் நன்கு பயன்படுத்தி மகிழ்ச்சி அடைகிறார்கள். இதைத் தடுப்பதற்கு உங்கள் தலை முடி கொட்டாமல் இருப்பதற்கு நாம் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

முடியை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்

நம் கூந்தலை எப்போதும் சுத்தமாகவும் மிகத் தூய்மையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் அன்றாட வாழ்க்கைக்கு அவ்வப்போது வெளியே சென்று வருவோம் இதனால் நமது கூந்தல் மாசு மற்றும் அழுக்கினால் பாதிக்கும் இதில் இருந்து காப்பாற்றுவதற்கு நம் கூந்தலை அவ்வப்போது ஷாம்பு அல்லது கண்டீஷனர் கொண்டு நம் கூந்தலை சித்தம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

கடுகு எண்ணெய்

ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து அதில் மருதாணி இலையுடன் கலந்து பின்பு இதை நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் இதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் நிரப்பி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இதை உங்கள் தலையில் தேய்த்து ஒரு சிறிய மசாஜ் செய்யுங்கள். இது முடி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

வெங்காயம்

தங்கத்தைப் போல் வெங்காயத்தின் விலையும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் இதன் விலை குறையும் என்ற நம்பிக்கையில் இதை இந்த வரிசையில் சேர்க்கிறேன். நமது தலை வழுக்கை விழ ஆரம்பித்து விட்டது என்றால் கவலை இல்லாமல் இந்த பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்து வழுக்கை விழும் இடத்தில் சிவக்கும் வரை நன்கு தேய்க்க வேண்டும் பிறகு அங்கே தேனைத் தடவ வேண்டும். இது வழுக்கை தலையில் முடி வளர்வதற்கான சிறந்த சிகிச்சை.

வெந்தயம்

வெந்தயத்தை நன்கு அரைத்துக் கொண்டு அதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்துக்கொள்ளவேண்டும் இதை நமது கூந்தலில் அல்லது தலையில் தடவி 40 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும் பின்னர் தண்ணீரை கொண்டு நமது முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் நம் தலையில் இருந்து முடி கொட்டுவது என்பது குறையும்.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

முட்டை

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக சேர்த்து அது நன்கு கலந்து. அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும் இதை நாம் குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து மசாஜ் செய்ய வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு நம் தலை முடியை அலசி விட வேண்டும். இதை செய்வதன் மூலம் நமது முடி உதிர்வதை தடுக்கிறது.

இயற்கையாக தயாரிக்கப்படும் ஷாம்பூ

கொஞ்சம் தயிரை எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு மற்றும் பாசிப்பருப்பு மாவை ஒன்றாக கலந்து நமது தலையில் தேய்த்து ஊற வைக்கவேண்டும் பின்பு அதை நீரில் அலசி நமது கூந்தலை உலரவைக்கவேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நமது முடி உதிர்வது நின்று போகும்.

நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு 

இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நமது தலையை மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி கொட்டுதல் விலகிவிடும்.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால்

கொத்தமல்லியை நன்றாக அரைத்து அதன் சாரை மட்டும் தனியாக எடுத்து நமது தலையில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதுவே நமது முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது. அதேபோல் தேங்காயையும் எடுத்து நன்கு அரைத்து அதன் பாலினை தனியாக எடுத்த நமது கூந்தலில் தடவி அதை கழுவினான் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

இவைகள் அனைத்தையும் சரியாக கடைப்பிடித்து கூந்தலை பராமரித்து கொள்ளலாம். நமது முடி உதிருதல் மற்றும் அது மீண்டும் வளர்தல் என்பது இயற்கையின் செயலாக இருந்தாலும் இடையில் நாம் செய்யும் செயல்கள் நமது முடி உதிர்வை அதிகப்படுத்துகிறது இதனால் நாம் சரியாக உணவுகளையும் இதுபோன்ற இயற்கை ஆரோக்கிய மருந்துகளையும் பயன்படுத்தி நமது கூந்தலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன