நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

  • by
how to stop grey hair by making hair dye at home

நரை முடி பிரச்சனை என்பது இப்போது எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. இளம் வயதினர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர்களும் தன் கூந்தல் கரு நிறமாக மாறினால் போதும் என்று கடைகளில் தேவையற்ற கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது உங்கள் கூந்தலின் கருமை அதிகரித்தாலும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை, மற்ற கூந்தல் பிரச்சனைகளை உருவாக்குகிறது. எனவே இதைத் தவிர்த்து இயற்கையான முறையில் ஹேர் டை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

உணவுமுறையில் மாற்றம்

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரை முடி பிரச்சனை ஏற்படாது. உடலை பாதிக்கக்கூடிய அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இளம் வயதில் நரை முடி ஏற்படுகிறது. தவிர்த்து நமக்கு விலைமலிவாக கிடைக்கும் தேவையற்ற ஷாம்பு மற்றும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் நரைமுடியை தூண்டுகிறது. எனவே அனைத்தையும் தவிர்த்து நரைமுடி தோன்றியவுடன் நாம் செய்ய வேண்டியது இந்த ஹேர் டையை பயன்படுத்துவதுதான், அதை எப்படி தயாரிக்கலாம் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

மருதாணி மற்றும் சில பொருட்கள்

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுவது மருதாணி தான். இதை தான் பல இயற்கையான கூந்தலுக்கு பயன் படுத்துகிறார்கள். எனிவே மருதாணி இலையை பறித்து, அதை காயவைத்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மருதாணி பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

மருதாணி பொடியுடன் அவரி இலை யையும் தயார் செய்து கொள்ளுங்கள். இது கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும். அப்படி இல்லையெனில் உங்கள் வீட்டு அருகே கீரை விற்பவர்களிடம் சொன்னால் அவர்கள் இதை கொண்டுவந்த தருவார்கள்.

முதல் கலவை

மருதாணிப் பொடியுடன் எலுமிச்சை சாறை கலந்து குழைத்து இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவேண்டும். மறுநாள் காலை அது கெட்டியாக இருக்கும் போது மேலும் அதில் சிறிது எலுமிச்சை சாறு தயிர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒன்றாக சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். இதை தலையில் போடுவதற்கு முன்பாக உங்கள் கூந்தல் சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இதை வேர்களில் படும்படி தடவி வடுகுகளில் தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை இதை அப்படியே ஊற வைத்து விடுங்கள். பின்பு அதை சீயக்காய் ஷாம்பு எதையும் போடாமல் அலசி விடுங்கள்.

மேலும் படிக்க – பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு மேக் ஓவர் எப்படி செய்வது?

இரண்டாம் கலவை

அவரி இலை பொடியுடன் சிறிது எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை ஒன்றாக சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் தலை முடியில் படும்படி நன்கு தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி காயவைத்து பார்த்தால் உங்கள் கூந்தலில் இருக்கும் நரை மறைவதை பார்க்கலாம்.

முட்டையை பயன்படுத்துவது என்றால் முட்டை வாடை வரும் என்று நினைக்க வேண்டாம். அவுரி பொடி முட்டையின் வாசத்தை உறிஞ்சிவிடும் எனவே இயற்கையான கருமையான கூந்தலை பெறுவதற்கு இந்த வழியை பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன