போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே வருவது எப்படி..!

  • by
how to stay away from bad habits

போதை என்பது எல்லோருக்குள்ளும் இருக்கக்கூடிய ஓர் இயல்பான உணர்வு. ஆனால் எப்போது இதை நாம் அதிகளவில் எடுத்துக் கொள்கிறோமோ அப்போதே நாம் அதற்கு அடிமையாகி நம்முடைய வாழ்க்கையை போதைக்காக அர்ப்பணித்துக் கொள்கிறோம். இதனால் நம்மின்தேவை யாருக்கும் பயன்படாமல் தேவையற்ற ஒரு வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். இதற்கு காரணமாக இருக்கும் போதை பழக்கங்களில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வருவதற்கான வழிகளை இங்கே காணலாம்.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம் ஏன் போதைப் பழக்கத்தில் வருகிறது என்ற சந்தேகம் உங்கள் அனைவருக்கும் தோன்றலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவது சோம்பேறித்தனத்தினால் தான். எல்லாத் தீய பழக்கங்களுக்கும் ஆரம்ப புள்ளியாக அமைவது இந்த சோம்பேறித்தனம். எனவே இதை எளிமையாக எடுத்துக் கொள்ளாமல், இதிலிருந்து விடுபடுவதற்கான செயல்களை அனைவரும் செய்ய வேண்டும். நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டே இருப்பவராக இருந்தால் உடனடியாக எழுந்து உங்களுக்கு பிடித்தமான செயல் ஏதாவது செய்யுங்கள். செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்த்து ஓவியம் வரைதல், விளையாடுவது, எழுதுவது அல்லது வீட்டு வேலைக்கு உதவி செய்வது போன்றவைகளில் செய்யுங்கள்.

மேலும் படிக்க – பல நோய்களை தீர்க்கும் ஒரே இலை அது என்னவென்று தெரியுமா???

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் பல பேரின் வாழ்க்கையை சீரழிக்கிறது. மிக மலிவான விலையில் கிடைக்கும் புகையிலையை அனைவரும் வாங்கி அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆரம்பத்தில் உங்களுக்கு இது மகிழ்ச்சி அளித்தாலும் சில ஆண்டுகளிலேயே இதனால் ஏற்படும் பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். புகைப்பழக்கத்தை விடுவதற்கான பல வழிகள் இருக்கின்றன அதில் முதல் வழி நிக்கோடின் என்ற மிட்டாயை வாங்கி மெல்லுங்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்துங்கள். நீங்கள் அதிக அளவில் புகை பிடிப்பவராக இருந்தால் அதை படிப்படியாக குறையுங்கள். இதனால் உங்களை நினைத்து நீங்களே பெருமை படுங்கள். உங்களைச் சுற்றி யாராவது புகை பிடித்து வந்தால் அவர்கள் அருகில் இருப்பதைத் தவிருங்கள். அப்படியே யாராவது உங்களுக்கு தங்கள் சிகரெட்டை கொடுத்தால் அதை மறுத்து விடுங்கள்.

மது பழக்கம்

தமிழகத்தின் வளர்ச்சியை மதுவை வாங்கி அருந்தும் குடிமகன் கையில் இருக்கிறது என்று தமிழக அரசு மறைமுகமாக தெரிவித்து வருகிறது. இத்தகைய தீய செயலை அனைத்து மக்களும் தினமும் செய்து வருகிறார்கள், எனவே நீங்கள் தொடர்ந்து குடிப்பவராக இருந்தால் அதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மையை பற்றி யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக எந்த நன்மையும் இருக்காது, உங்களுக்கான உடல் உபாதைகள் மட்டுமே அதிகரிக்கும். அதேபோல் எப்போதாவது குடிப்பவர்கள் ஒரே அடியாக அதிகளவில் குடித்துவிடுவார்கள் இதுவும் உங்கள் உடலுக்கு செய்யும் தீங்குதான். எனவே குடிப்பழக்கத்தில் இருந்து எளிதில் விடுபடுவதற்கு நீங்கள் குடிக்கும் சமயங்களில் உங்களுக்குப் பிடித்த குளிர் பானங்களை அருந்தலாம். அதேபோல் பழரசம் இல்லையெனில் மிகக்குறைந்த அளவிலான மதுவை எடுத்துக்கொள்ளலாம். புகையைப் போல குடியையும் நாம் படிப்படியாக குறைத்து ஒருநாள் அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.

பாலியல் சிந்தனை

பதின் பருவம் துவங்கி முதியவர்கள் வரை இருக்கும் இயற்கையான பிரச்சினைதான் பாலியல் பிரச்சனை. ஒரு சிலர் தினமும் தங்கள் கையில் உள்ள செல்போனை பயன்படுத்தி இது சம்பந்தமான கதைகள் மற்றும் காணொளிகளை பார்ப்பது வழக்கமாக இருக்கும். இதைத்தொடர்ந்து இதனால் இவர்கள் சில தீய செயல்களையும் செய்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவது கடினம் என்று பலரும் நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையையும் தங்கள் ஆரோக்கியத்தையும் அழித்து வருகிறார்கள். எனவே இதுபோல் பாலியல் எண்ணங்கள் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் சிந்தனையை வேறு திசையில் திருப்ப வேண்டும். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள். இதுபோன்ற சிந்தனையை உண்டாக்கும் செய்திகள், காணொளிகள் மற்றும் உரையாடல்கள் அனைத்தையும் தவிருங்கள். ஆரம்பத்தில் இதனால் சில அற்ப சந்தோஷங்கள் கிடைத்தாலும் உங்களின் எதிர்காலம் மோசமாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் மனநிலையும் இது பெரிதாக பாதிக்கும் எனவே இதுபோன்ற எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் உங்கள் சிந்தனையை திசை திருப்பி வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள். தொடர்ந்து செய்வதன் மூலமாக நாளடைவில் இதை நீங்கள் மறந்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

மேலும் படிக்க – சிறுநீரகத்தை  சிறப்பாக செயல்பட வைக்கும் உணவு வகைகள்.!

சூதாட்டம்

சூதாட்டம் என்பது இப்போது முழுமையாக அழிந்து விட்டது என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இணையதளம் மூலமாக இன்றும் பலர் சூதாடி கொண்டேதான் இருக்கிறார்கள். பத்து ரூபாய் செலவழித்தால் நூறு ரூபாய் கிடைக்கும் என்ற போதையில் சிறிய தொகையை செலுத்தி மிகப்பெரிய தொகையை ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறார்கள். சாதாரண விளையாட்டு என்று நினைத்து நீங்கள் செலவு செய்யும் பத்து ரூபாய் மூலம் எங்கேயோ யாரோ ஒருவர் மிகப்பெரிய பணக்காரராக உருவாக்கி வருகிறார். இது போன்ற குறுக்கு வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்காமல் உழைத்து சம்பாதிப்பது சிறந்தது. அதேபோல் நீங்கள் இணையத்தில் வீணாக்கும் பத்து ரூபாயை உங்கள் உணவில் சேருங்கள்.

உணவு பழக்கம்

ஒரு சிலர் உணவு அருந்துவதையே முழு நேர வேலையாக செய்வார்கள். உணவு ஆரோக்கியமானது தான் ஆனால் அதை அளவுக்கு மீறி எடுப்பதன் மூலமாக அவர்கள் ஆரோக்கியம் படிப்படியாக குறைந்து கொண்டே போகும். அதைத் தவிர்த்து உங்கள் உடல் உறுப்புகள் செயல் இழக்கவும் செய்யலாம். ஒருசிலர் மற்றவர்களைக் கவர்வதற்காக ஏராளமான உணவுகளை அருந்தும்படி காணொளிகளை மேற்கொள்வார்கள். ஒருசில வயது வரை உங்கள் உணவுகள் அனைத்தும் உங்கள் உடலில் சேரும், ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் 35 வயதிற்கு மேல் வெளிக்காட்டும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிருங்கள்.

வலைத்தளங்கள்

இணையத்தளம் என்பது எல்லோர் கையிலும் இருக்கிறது. ஆனால் இதை தவறுதலாக பயன்படுத்துவார்கள் எண்ணிக்கை தான் அதிகம். எனவே நீங்கள் இணைய தளத்தில் முழு நேரமும் மூழ்கி இருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வெளியில் ஒரு அற்புதமான உலகம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இணையத்தில் பார்க்கும் 90% செயல்கள் அனைத்தும் பொய்யானவை எனவே அதன் உண்மையை அறிய நீங்கள் வெளியே சென்று அனுபவங்களை மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையை அழகாக்குங்கள். அதைத் தவிர்த்து என்னேரமும் தனிமையில் இணையத்துடன் இருக்காதீர்கள்.

மேலும் படிக்க – கத்தரிக்காய் பிரியர்களா நீங்கள்?? முதலில் இதைப் படியுங்கள்.!

எல்லாத் தீய பழக்கங்களில் இருந்து வெளிவதற்கான ஏதாவது ஒரு வழி இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அந்த எளிய வழியை நாம் கடைப் பிடிக்காமல் நம்முடைய வாழ்க்கையை நாமே அழித்து வருகிறோம். எனவே எல்லாப் பழக்கங்களையும் உடனடியாக குறைக்காமல், அதன் நேரத்தையும் அல்லது அதன் அளவையும் குறைக்கலாம். இதை படிப்படியாக குறைத்து உங்கள் வாழ்க்கையை அழகாக்குங்கள். அதே போல் உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களை புரிந்து கொள்ளுங்கள், அவர்களுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். சுற்றுலா செல்லுங்கள், புதியதாக ஏதாவது செயலில் ஈடுபடுங்கள், உண்மையான வாழ்க்கையை வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன