நாடே முடக்கத்தில் இருக்கும் பொழுது உங்கள் பணத்தை எப்படி செலவு செய்வது..!

  • by
how to spend your money during this lockdown

கொரோனா வைரஸ் பாதிப்பினால் எல்லோரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். இதன் மூலமாக ஒரு சில நிறுவனங்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களின் ஊதியத்தை முழுமையாக அளிப்பதாக உறுதி அளித்து உள்ளார்கள். ஆனால் தொழில் செய்பவர்கள் மற்றும் தினசரி கூலியை செய்பவர்கள் மிகப்பெரிய பிரச்சினைக்கு இடையில் இருக்கிறார்கள். இவர்கள் இந்த முடகத்தை எப்படி கடந்து வர வேண்டும் அதற்கு அவர்கள் செலவுகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

இருப்பை கணக்கிடுங்கள்

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்படி உங்களிடம் போதுமான அளவு பணம் இருந்தால் அதை அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்றவாறு பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இவ்வளவு பணம் தான் செலவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஒருவாரத்திற்கு இவ்வளவுதான் செலவு என்று வகுத்துக் கொள்ளுங்கள். இதைத்தொடர்ந்து அதற்கேற்ப வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான குறிப்புகள்

அத்தியாவசிய பொருட்கள்

இதுபோன்ற சூழ்நிலையில் ஆடம்பர வாழ்க்கைக்கு பின் செல்லாமல் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். அதேபோல் உடனடியாக வீணாகும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அதிகநாட்கள் இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குங்கள். அதேபோல் உங்களை ஆரோக்கியமாகவும் வேறு எந்த ஒரு உடல் பிரச்சினைகளும் உருவாகாதவாறு உணவுப் பொருட்களை தேர்ந்தெடுங்கள். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக வாங்கிக் கொள்ளுங்கள்.

குறைந்த பணம் உள்ளவர்கள்

உங்களிடம் மிகக்குறைவாக பணம் இருக்கிறது என்றால் கவலை வேண்டாம். ஏனென்றால் அரசாங்கம் அனைவருக்கும் பண உதவி மற்றும் மளிகை பொருட்களையும் தருகிறது. எனவே உங்கள் குடும்ப அடையாள அட்டையை வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் அரசு மலிவு விலை கடைகளில் வாங்கி பயன்பெறலாம். உங்களிடம் இருக்கும் குறைந்த பணத்தை உணவுகளுக்கு பயன்படுத்தாமல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் உடல் பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவமனை செலவுக்காக இந்த பணத்தை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – வேப்ப எண்ணெயின் பயன்கள் அறிவோம் வாங்க!

சிறுதொழில் செய்பவர்கள்

சிறுதொழில் செய்பவர்கள் பொதுவாக குறைந்த சேமிப்புகளே கையிருப்பாக வைத்துக்கொள்வார்கள். அதை மறுசுழற்சி செய்து அவர்களின் தொழிலை வளர்க்க திட்டமிட்டிருந்தார் இதுபோன்ற சூழலில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் எதிர்காலம் என்ன வாகும் என்று தெரியாமல் இருக்கும் நம்மை பாதுகாக்கும் ஒரே வழி உணவுகள்தான். எனவே இதற்காக திட்டமிட்டு உங்கள் பணத்தை செலவு செய்யுங்கள். அதேபோல் மருத்துவ செலவுக்காக ஒரு தொகையை சேமித்து வையுங்கள்.

பணம் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, உங்களால் பாதுகாப்பாக வாழ முடியும். ஏனென்றால் உங்களுக்கு அரசாங்கம் உணவுப் பொருட்களை தருகிறது. அதை தவிர்த்து அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. எனவே எதைப்பற்றியும் நினைத்து பயப்படாமல் குடும்பத்துடன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன