போர்க்கால சமயங்களில் உங்கள் பணத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்வது..!

  • by
how to spend your money during this corona virus situation

கரோனா வைரஸ் பாதிப்பினால் நாம் இப்போது போர்க்கால அடிப்படையில் எல்லோரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இதனால் ஒரு சில மாநிலங்களில் காலை 7 மணியிலிருந்து 10 மணி வரைதான் கடைகள் திறந்திருக்கும். தமிழகத்திலும் ஒரு சில கடைகள் மற்றும் உணவகங்கள் மட்டும் திறந்து இருக்கும். அதிலும் உணவுகளை அங்கே சாப்பிடக்கூடாது என்ற சட்டங்களையும் விடுத்துள்ளார்கள். எனவே இதுபோன்ற போர்க்கால அடிப்படையில் நம் வாழ்க்கையை வாழும் போது நம் பணத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

அடிப்படைத் தேவைகள்

இது போன்ற சூழல்களில் நம்முடைய வருமான தொகை அல்லது இருப்புத் தொகை எப்போதும் குறைவாகவே இருக்கும். எனவே இதுபோன்ற கட்டத்தில் நாம் நம் தொகையை சரியாக எடுத்து அதை அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் மருந்துகளுக்கு பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பொருட்கள் எதுவும் இது போன்ற சமயங்களில் வாங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் படிக்க – கொரானாவால் ஸ்தம்பிக்கும் தினசரி வாழ்வு

வீட்டு உணவுகள்

உங்கள் வீட்டின் போதுமான அளவு எரிபொருள் இருந்தால் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மளிகை கடையில் வாங்கி வரலாம். அதிலும் குறைந்த விலையில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பதே சிறந்தது. அதிகமாகவும், உடனடியாக சமைக்கக் கூடிய உணவுகளை வாங்கி பயன்படுத்தலாம். அதிலும் அதன் விலை குறைவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். உணவகங்களில் வாங்கப்படும் உணவுகள் பாதுகாப்பற்றதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே அதைத் தவிர்த்து வீட்டில் பல முறை சுத்தம் செய்து உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.

உதவிகள் செய்யலாம்

உங்கள் வீட்டு குடியிருப்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சிறிய வகை உணவுகளை சமைத்து உதவிகளை செய்யலாம். இருந்தாலும் அவர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பது இது போன்ற சூழல்களில் உங்களை எந்த ஒரு வைரஸ் தொற்றுகளும் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க உதவும். உங்களிடம் போதுமாதை விட அதிகமாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற தானத்தை செய்யலாம்.

மேலும் படிக்க – பாதுகாப்பான பாரம்பரிய தமிழர்களின் பழக்க வழக்கங்கள்..!

பாதுகாப்பாக வாங்குங்கள்

உங்கள் வீட்டுத் தேவைக்கான பொருட்களை வாங்கச் செல்லும் முன்பு எந்த கடைகளில் மலிவாக கிடைக்கிறது என்று பாருங்கள். அதைத் தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்கள் எங்கே ஆரோக்கியமான முறையில் விற்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். இதை பொருத்து அங்கு சென்று உங்கள் தேவைகளை வாங்கிக்கொள்ளுங்கள். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அந்த கடையை தவிர்த்து கூட்டம் குறைவாக இருக்கும் கடைகளில் உங்கள் வீட்டிற்க்கு தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

குறைந்த பணம்

உங்களிடம் மிகக்குறைவான பணம் இருந்தால் கிட்டத்தட்ட பத்து நாளைக்கு அதை வகுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் செலவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தீட்டி, பத்து நாளைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நம்முடைய வாழ்க்கை இயல்பு நிலையை அடையும் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.

உணவை வீணடிக்காதீர்கள்

சமைக்கும் போது போதுமான அளவு உணவுகளை மட்டும் சமையுங்கள், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை சமைப்பதன் மூலமாக இதுபோன்ற தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கலாம். மிச்சமாகும் உணவுகளை உங்க உடலின் தேவைக்கேற்ப அதை மறுசுழற்சி செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க – கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

அரசாங்க உதவிகள்

கையிருப்பு குறைவாக இருக்கிறது என்று பயத்தையும், பதட்டத்தையும் கொள்ளாமல் இது போன்ற சூழல்களில் உங்கள் குடும்பத்தை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். அரசாங்க உதவிகள் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் கிடைக்கும் போது இந்த சூழல் சாதகமாக மாறும். நிச்சயம் உங்களுக்கான நிவாரண உணவுகள் மற்றும் பொருட்கள் கிடைக்கும். எனவே பயத்தைப் துறந்து இருக்கும் தொகைகளை சிக்கனமாக செலவு செய்து கொஞ்சம் சேமிப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு அரசு மருத்துவமனைகள் இருக்கிறது. எனவே உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாகவும், நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உங்களின் கடமை. அதை அறிந்து சிக்கனமாக உங்கள் பணத்தையும் மற்றும் உணவுப் பொருட்களையும் பயன்படுத்தி உங்கள் நாட்களை இனிமையாக கழியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன