21 நாட்களை நாம் எப்படி கழிக்க வேண்டும்..!

  • by
how to spend these 21 days lock down period

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவாமல் இருப்பதற்காக நம்முடைய இந்தியா முழுவதும் முடக்கத்தில் உள்ளது, அதிலும் தமிழ்நாட்டில் எல்லா  மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் வேலிகளை அமைத்து யாரும் கடக்காதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். எனவே இருப்பவர்கள் அவர் இருக்குமிடத்தில் இருந்து தங்கள் நாட்களை எப்படி கழிப்பது என்பதை காணலாம்.

வீட்டில் இருப்பவர்கள்

நீங்கள் திருமணமாகி குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து, உங்கள் மனைவிக்கு உதவியாக தேநீர் தயாரிக்க வேண்டும். பின்பு உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமுள்ள பாடங்களை கற்றுக் கொடுத்து, மீண்டும் மதிய உணவுக்காக உங்கள் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சிறிது நேரம் தொலைக்காட்சி அல்லது புத்தகங்களைப் படித்து நேரத்தை கழிக்க வேண்டும். பின்பு மாலை 3 மணி அளவில் ஏதேனும் சிறிய ஆகாரத்தை தயாரித்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க – உணர்வுகளை பறை சாற்றும் வர்ணங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது???

மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்திடுங்கள்

பிறகு வீட்டிற்குள் விளையாடுவதற்கான பொருட்களை வைத்து உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். மாலை 7 மணி அளவில் அவர்களுக்கு ஏதேனும் உபயோகமுள்ள விஷயங்களை கற்பிக்க வேண்டும். அதை தொடர்ந்து இரவு உணவுக்கு உங்கள் மனைவிக்கு உதவியாக இருந்து பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். குடும்பம் முழுவதும் ஒன்றாக சிறிது நேரம் உரையாடிவிட்டு தூங்கவேண்டும்.

நண்பர்கள் உடன் இருப்பவர்கள்

நீங்கள் உங்கள் சொந்த ஊரை விட்டு வேறு ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டால் இந்த 21 நாட்கள் உபயோகம் உள்ள ஏதாவதை செய்ய வேண்டும். ஏதாவது புதிய தொடரை நீங்கள் பார்க்க துவங்கலாம், இல்லையெனில் உடற்பயிற்சிகள் செய்து உங்கள் உடலை நீங்கள் நினைப்பதைப் போல் மாற்றலாம். புதிதாக இசைக்கருவிகள் ஏதேனும் பயின்று அதில் தேர்ச்சி பெறலாம், புதிய புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கலாம். இல்லையெனில் கதை எழுதலாம், கைவினைப் பொருட்களை உருவாக்கலாம். அனைத்திற்கும் மேலாக உங்களுக்குப் பிடித்த ஏதாவது செயலை மீண்டும் மீண்டும் செய்யலாம்.

மேலும் படிக்க – 144 தடையுத்தரவு நாட்களில் எவை இயங்கும்?? எவை இயங்காது??

மனவலிமை இல்லாதவர்கள்

உங்களுக்கு போதுமான அளவு பொறுமையும், மனவலிமையும் இல்லை என்றால் நீங்கள் யோகா பயிற்சிகளை செய்யலாம். உங்களை அமைதியாகவும், சாந்தமாகவும் வைத்துக் கொள்ளும் பாடல்களை கேட்டு உங்கள் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வரலாம். எப்போதும் எதிர்மறை சிந்தனையுடன் செயல்பட என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை எண்ணுங்கள்.

உங்களின் மனநிலையை பொறுத்து தான் உங்கள் வீட்டிலுள்ளவர்கள் மனநிலை மாறும், எனவே நீங்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். இந்த 21 நாட்களில் நீங்கள் எப்படி உங்கள் இல்லத்தில் இருக்கிறீர்களே அதைப் பொறுத்துத்தான் உங்கள் எதிர்காலம் அழகாக அமையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன