சருமத்தில் ஏற்படும் வெண் படைகளை போக்குவதற்கான எளிய வழிகள்.!

  • by
How To Solve White Skin

நம் ஊர்களில் வாழும் ஒரு சிலர்கள் பார்ப்பதற்கு வெள்ளைக்காரர்களை போல் காட்சி அளிப்பார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் வெளிநாட்டவர்கள் அல்ல, நம் ஊரை சேர்ந்தவர்களை வெண் படை நோய் பாதிப்படைய செய்வதினால் இவர்கள் வெளிநாட்டவர்களை போல் காட்சி அளிக்கிறார்கள்.

ஏன் வெண்படை உருவாகிறது

வெண் படைகள் உங்கள் சருமத்தில் ஏற்படும் பொழுது மெளசோசைட்டுகள் என்பது அழிக்கப்படுகிறது. இதனால் மெலனின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. நம் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் வெண்படைகள் உண்டாகிறது.

ஒருசிலரின் தருமம் வெளிநாட்டவர்களின் தருமம் என்று எண்ணிக்கொண்டு இது போன்ற வெள்ளை சருமம் உருவாகிறது. இன்று வரை இதற்கான தீர்வு மற்றும் இது ஏன் உருவாகிறது என்ற காரணங்கள் முழுமையாக தெரியாமலேயே இருக்கிறது.

மேலும் படிக்க – நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

வெண்படைகளை குறைக்கும் வழிகள்

வேம்பு எண்ணெய்களை கொண்டு நம் சருமத்தில் ஏற்படும் வெண்படைகளை குறைக்க முடியும். தினமும் வேப்ப எண்ணெயை வெண் சருமம் உள்ள இடங்களில் பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். அதை 30 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் வெண்படைகளின் நிற மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் வெண்படைகளை குறைக்க உதவுகிறது. நாம் மஞ்சளுடன் சிறிது கடுகு எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதை வெண் படைகள் உள்ள இடங்களில் நன்கு தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு கழுவவேண்டும் இதை 3 முதல் 4 வாரங்கள் வரை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் சருமத்தில் மாற்றத்தை காணலாம்.

இஞ்சி சாறு மற்றும் சிவப்பு களிமண்

இஞ்சியில் பைத்தோகெமிக்கல் அதிகமாக உள்ளதால் உங்கள் சருமத்தில் ஏற்படும் வெண்படைகளை அழிக்கிறது. இஞ்சியில் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் களிமண்ணை கலந்து நன்கு பிசைந்து சருமத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து விரைவில் வெண்படையை குணப்படுத்தும்.

மேலும் படிக்க – இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

மாதுளை இலைகள்

நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகமாக கொண்டுள்ளது மாதுளை இலை. இதில் பயோடின் உள்ளதால் வெண்படைகளை குணப்படுத்துகிறது. மாதுளை இலைகளை வெயிலில் காயவைத்து நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நீர் கலந்து சருமத்தில் தடவினால் வெண்படைகள் குணமாகும்.

மற்ற நாடுகளில் இதற்கான தீர்வுகள் இன்றுவரை கண்டுபிடிக்காமல் இருந்தாலும் நம் பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் நாட்டு வைத்தியங்களில் இதை குறைப்பதற்கான வழிகள் உள்ளதை அறிந்து மேலே குறிப்பிட்டுள்ள வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெண்படைகளை குறைக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன