அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

  • by

காதலிக்கும் பொழுது எவ்வளவு இனிமை இருக்கின்றதோ அதுபோல் கசப்புத்தன்மையும் இருக்கும். நீங்கள் உங்கள் அன்பார்ந்தவர்களிடம் இது போன்ற கடினமான சூழலை கடக்க வேண்டியது அவசியம் ஆகும். நாம்  அன்றாட வாழ்கையில் நாம் பலவிதமான இலக்குகளை தேடி பயணிபோம். அந்த நேரத்தில் எதோ ஒரு கோபத்தை அன்புக்குரியவரிடம் காட்டி விடுவோம். 

உங்கள் அன்புக்குரியவரிடம் இது குறித்து தெளிவான பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம். உங்களை நேசிக்கும் ஒருவரிடம் தேவையற்ற கோபத்தை காமிப்பது அவ்வளவு நன்மை  கொடுக்காது. இது போன்ற நேரத்தில் ஆண் பெண் இருவரில் யார் தவறு செய்து இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். 

 வலியை கொடுக்கும் பிடிவாதம்: 

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது அவசியம் ஆகும். காதலில் கோபம் எப்படி முக்கியமோ அது போல் பேசிய வார்தைகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள் காதலில் தேவையற்ற பிடிவாதத்தை மறந்துவிடுங்கள்  அன்புடன் இருப்பது மட்டும் காதலர்களுக்குள் நெருக்கத்தை உண்டு செய்யும். 

மேலும் படிக்க:வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

பொய் பேசுவதை விடுங்கள்: 

பொய் பேசுவதை விட்டுவிடுங்கள்   ஒருசில இடங்களில் பேசுவதை தவிர்க்க முடியாது.  ஆனால் எல்லா இடங்களிலும் பொய் பேசுவது அவசியமற்ற ஒன்றாகும். காதலிப்பவர்கள் இருவருக்குள்ளூம் அது பெரிய பிளவை உண்டு செய்யும்.  பொய் சொன்னது தெரிந்தால் ஏன் பொய் சொல்ல வேண்டிய சூழல் வந்தது என தெளிவுபடுத்தவும். பொய்யை மறைக்க பொய் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டாம். 

மேலும் படிக்க: காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

காதலருடன் மனஸ்தாபம்  நரகம்:

காதலருடன் நரகம் என்பது நரக வேதனையை உண்டு செய்யும் ஆகையால்  முடிந்தவரையில் சண்டையிடுதலை நிறுத்துங்கள், தேவையற்ற வார்த்தை பரிமாற்றத்தை நிறுத்தவும். பிடிவாதமாக இருப்பத்தை நிறுத்துங்கள்.  போட்டி போட்டு இருவரும் முகத்தை திருப்பினால் மிஞ்சுவது வலி மட்டுமே இதனை உணர்ந்து செயல்படுங்கள். 

கொஞ்சிப் பேச வேண்டாம் கொடுமையாக பேசாமல் இருப்பது நலம் பயக்கும். இன்றைய சூழலில் எதை எடுத்தாலும்  பொறுமை இல்லாத போக்கு காணப்படுகின்றது. எல்லாமே எளிதாகிவிட்டது. எளிதில் அனைத்தையும் முடித்து கொள்ள இன்றைய சமுதாயம் தயாராகிவிட்டது. தடுமாற்றத்துடன் பணிகள் நடைபெறுகின்றன. வாழ்வில் உறவு என்பது பொற்காலம் அது எதையும் எதிர்பார்த்து வராது.  அப்படி எதையாவது எதிர்ப்பார்த்து வரும் எதுவும் நிலைக்காது. 

மேலும் படிக்க: அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

காதலர்களுக்கு இன்றைய சூழலில்   ஒருவருக்கொருவர் ஆழந்த புரிதலுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆற்றல் மிகு குடும்பம்  என்ற ஒரு கட்டமைப்பை கொண்டது நமது சமூகம் அதன் பாரம்பரியம் பழமை அனைத்தும் நமக்கு கற்றுக் கொடுப்பது விட்டுகொடுப்பது, ஆழந்து சிந்தித்து பேசுதல் செயல் படுதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. பொறுமை என்பது அனைத்து  சூழலிலும் அவசியம் ஆகும். அவசரபட்டு எடுத்தோம் கவுத்தோம் என எதையும் பேசுவது தவறாகும்.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன