தூங்குவதற்கான எண்ணங்கள் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளதா..!

  • by
How To Solve Sleeping Disorder

தூக்கம் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்று. சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். அதற்குமேல் தூங்கினாலும் சரி, அதற்குள் தூங்கினாலும் சரி, அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும். எனவே நம்மின் ஒவ்வொரு நாட்களையும் அழகாக மாற்றுவதற்கு தூக்கம் உதவுகிறது. எனவே உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறதா, அல்லது என்னேரமும் தூங்கி வருகிறீர்களா, இதற்கான காரணம் என்ன, அதை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

தூக்கம் அதிகமாக வருவதற்கான காரணம்

ஒருவருக்கு எந்நேரமும் தூக்கம் வந்து கொண்டு இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைவாக உள்ளதற்கான அறிகுறி. தலைவலி மற்றும் உடல் வலி உள்ளவர்களுக்கு தூக்கம் அதிகமாக இருக்கும். அதே போல் இரவில் தாமதமாக உறங்கும்முறை அல்லது அதிக அளவிலான தூக்கத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கும் தூக்கம் அதிகமாக வரும்.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

பாதிப்புகள்

தூக்கப் பிரச்சினையால் ஒரு சிலர் எதன் மீதும் ஆர்வம் இல்லாமல் சோர்வுடன் இருப்பார்கள். வேலைகள் அல்லது படிப்பின் மேல் நாட்டம் இல்லாமல் கடமைக்கு என்று வாழ்வார்கள். இவர்களுக்குள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அஜீரணம், தலைவலி உண்டாகும் மற்றும் தினசரி வேலையைக் கூட மிகச் சிரமத்துடன் சமாளிப்பார்கள்.

தூங்குவதற்கான அட்டவணைகளை அமையுங்கள்

உங்களுக்கு எப்போதும் தூக்கம் உணர்வு இருந்து கொண்டே இருந்தால் அதை சரி செய்வதற்கு வெளியிலிருந்து எந்த ஆற்றலையும் கொண்டுவரத் தேவையில்லை. இதற்கான தீர்வு உங்கள் உடலிலேயே இருக்கிறது. எனவே அதை அறிந்த நீங்கள் உறங்கும் நேரங்களை அட்டவணை கொண்டு அமைத்திடுங்கள். இரவில் எப்போது தூங்கவேண்டும், பகலில் எப்போது எழுந்திருக்க வேண்டும். அதேபோல் இடையில் தூக்க உணர்வு ஏற்பட்டால் எவ்வளவு நிமிடங்கள் தூங்க வேண்டும் என்ற சரியான அட்டவணை மூலமாக உங்கள் தூக்கப் பிரச்சனையை தீர்க்க முடியும்.

மன அழுத்தங்கள்

நீங்கள் செய்யும் வேலைகளில் மன அழுத்தம் உண்டாகும் பக்கங்கள் இருந்தால் அதைக் கிழித்து உங்களுக்குப் பிடித்த செயல்களை செய்யுங்கள். அதைத் தவிர்த்து உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் எப்போதும் மனம் விட்டுப் பேசுங்கள். எல்லாவற்றையும் உங்கள் மனதிற்குள் வைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் இருப்பதன் மூலமாக எந்த தீர்வும் உங்களுக்கு கிடைக்காது.

மேலும் படிக்க – கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

சரியான உணவை உட்கொள்ளுங்கள்

உணவுக்கான அட்டவணையை சரியாக அமைத்து அதற்கு ஏற்ற உணவுகளை அருந்துவது நல்லது. ஒரு சிலர் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஏதாவது உணவுகளை உட்கொண்டு தங்களின் ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வார்கள். இதுபோன்றவர்களுக்கு உடனடி உடல் சோர்வு ஏற்பட்டு, இரவில் தூங்கி வழிவார்கள். எப்போதும் குறைந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

எதிர்மறை சக்தியால் பாதிப்புகள்

ஒரு சிலர் வாழும் வாழ்க்கையை எப்பொழுதும் தவறாக பார்ப்பார்கள். தாங்கள் எல்லாவற்றிற்கும் பயந்து எது செய்தாலும் தவறாக முடிந்து விடும் என்று எண்ணி எதிர்மறை சக்தியை கொண்டு எல்லாவற்றையும் புறக்கணிப்பார்கள். எனவே இதைத் தவிர்த்து எப்போதும் நேர்மறையான எண்ணங்களை கொண்டு வாழ முயற்சி செய்யுங்கள். உங்களை புதுப்பித்து புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

தீய பழக்கங்களை தவிர்த்து, உடற்பயிற்சி செய்யுங்கள்

ஒருசிலருக்கு அதிகளவிலான குடி பழக்கம் மற்றும் புகை பழக்கம் இருக்கும். எனவே இவர்கள் இதைத் தவிர்த்து தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலை சாந்தப்படுத்தி உங்களுக்கு தேவையான தூக்கத்தை அளிக்கும். அதை தவிர்த்து தேவை இல்லாத சமயங்களில் தூக்க உணர்வை அழித்து விடும்.

ஒவ்வொரு நாளும் புதிதாக உணரவேண்டும் என்றால் உங்கள் அறையை அற்புதமாக அலங்கரியுங்கள். போதுமான காற்றோட்டம், சுவர்களில் ஓவியங்கள், படுக்கை மெத்தை மற்றும் தலையணையை வண்ணமயமாக மாற்றுவதன் மூலம் உங்கள் தூக்கப் பிரச்சனை தீரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன