பெண்களின் முகத்தில் முடிகள் வளர்வதை தவிர்பபதற்கு செய்யவேண்டியவை.!

how to Solve Hair Growing Problem In Girls Face

ஆண்கள் முகத்தில் முடிகள் வளர்ந்தால் அவர்களின் ஆண்மை மற்றும் கம்பீரம் என்பார்கள். அதுவே பெண்களின் முகத்தில் முடிகள் வளர்ந்தால் அதை அவர்கள் அவமானமாக எடுத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அழகை இதுபோன்ற முடிகல் பெரிதளவில் பாதிப்படையச் செய்கிறது. இது போன்ற பிரச்சினைகள் அவர்களின் ஹார்மோன்கள் அல்லது தவறான உணவு முறைகளால் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்காக நாம் எளிமையான முரையில் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிகளை பார்ப்போம்.

பெண்கள் முகத்தில் முடி வளர்வதை தவிர்ப்பதற்காக நாம் பீலரை பயன்படுத்த வேண்டும். இதை உங்கள் முகத்தில் முடிகள் இருக்கும் இடத்தில் போட்டுவிட்டு பின்பு வேகமாக பிரித்து எடுக்க வேண்டும். இதன்மூலம் முடிகலை வெளியேறிவிடும் ஆனால் இதை நாம் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் முகத்தில் இருக்கும் முடிகள் நிரந்தரமாக வெளியேறும்.

மேலும் படிக்க – பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு மேக் ஓவர் எப்படி செய்வது?

அழகு நிலையங்களில் செய்யப்படுவது போல் உங்கள் முகத்தில் இருக்கும் முடிகளை வேக்சில் செய்வதன் மூலமாக நீங்கள் முடிகளைஅகற்றிவிடலாம் இதுவும் மேலே குறிப்பிட்டதைப் போல் தான் இருக்கும். ஆனால் இது கொஞ்சம் வலிகள் நிறைந்ததாகவே இருக்கிறது, இருந்தாலும் இதை செய்வதன் மூலம் பல மாதங்கள் உங்கள் முடி வளர்வதை தடுக்கிறது.

அழகு சாதன நிலையங்கள் அல்லது அது போன்ற பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு சென்று உங்கள் நிறத்திற்கு ஏற்ற பிலீச் பேசியல் கிட்டு வாங்கிக் கொள்ளுங்கள் அதை வீட்டிலேயே எளிமையான முறையில் உங்கள் முகத்தில் தடவி உங்கள் முகங்களில் இருக்கும் முடிகளை அகற்றி விடுங்கள். இதை பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே செய்து வருகிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் பீலர்களை போல் வீட்டிலேயே நாம் எளிமையான முறையில் பீலர்களை தயார் செய்து முகத்தில் போட்டுக் கொள்ளலாம். அதற்கு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறுகள் இருந்தால் போதும். இதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பின்பு கட்டிய நிலை வரும்போது அதை ஆற வைத்து விட்டு அதனை முகத்தில் தடவிவிட்டு அகற்றினால் நம் சருமத்தில் இருக்கும் முடிகள் அகன்றுவிடும்.

மேலும் படிக்க – உங்கள் அழகை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்..!

பழங்கால மக்கள் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்றுவதற்கு கோதுமை மாவைப் பயன்படுத்தி வந்தனர். இதை உங்கள் சருமத்தில் இருக்கும் முடிகளின் எதிர்திசை பக்கமாக இந்த மாவுகளை கொண்டு தேய்த்தால் முடிகள் அகன்று உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும். அல்லது பப்பாளிப் பழத்தை நம் சருமத்தில் முடிகள் இருக்கும் பகுதியில் தேய்த்தால் சில மாதங்களில் முடிகள் வளர்ச்சியைக் குறைத்து உங்கள் சருமத்தை மீட்டெடுக்கும். ஆனால் இதன் செயல் பல மாதங்கள் நீடிக்கும் என்கிறார்கள்.

எனவே இது போன்ற வழிகளை பின்தொடர்ந்து உங்கள் சருமம் மற்றும் முகங்களில் இருக்கும் முடிகளை அகற்றி அழகாகவும் தன்னம்பிக்கையுடன் உங்களுக்கு பிடித்த தோற்றத்துடன் வெளியே செல்லலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன