கண்களை சுற்றியிருக்கும் பிரச்சினைகளை இரண்டே வாரங்களில் தீரத்துவிடலாம்.!

how to solve all your eye problems

நம் முகத்திற்கு அழகை சேர்ப்பது நமது கண்கள் தான். நம் பார்வை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் நமது குணங்களும் இருக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். அத்தகைய மகத்தாக இருக்கும் கண்களில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையங்கள், கண்கள் சோர்வடைதல், வீக்கமடைதல் அல்லது கண்களில் சுருக்கம் ஏற்படும் பிரச்சனைகள் இருக்கின்றன. இதை வீட்டிலேயே நாம் எளிமையான முறையில் குணப்படுத்திவிடலாம், அதற்கான வழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

கண்களில் இருக்கும் கருவளையங்களைப் போக்குவதற்கான பாதாம் எண்ணையை பயன்படுத்த வேண்டும். இதில் இருக்கும் வைட்டமின் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களைப் போக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் இ இருக்கிறது இதை கொண்டு நம் கண்களில் இருக்கும் கருவளையங்களைப் போக்கி சர்மத்திற்கு புத்துயிர் பெற முடியும். இதை செய்வதற்கு பாதாம் எண்ணெய், ரோஸ்ஷிப் எண்ணெய் மற்றும் வைட்டமின் இ மாத்திரைகளை ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு கொள்ள வேண்டும். உறங்குவதற்கு முன்பு இந்த கலவையை உங்கள் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் பகுதிகளில் தடவி உறங்கினால் சில நாட்களிலேயே கருவளையங்கள் நீங்கி உங்கள் கண்களுக்கு புத்துயிர் பிறப்பிக்க முடியும்.

மேலும் படிக்க – இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

கண்களில் இருக்கும் வீக்கத்தை குறைப்பதற்காக நாம் காபி பொடியுடன் இனிப்பு பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு ஊற வைத்து பிறகு கண்களுக்குக் கீழ் உள்ள வீக்கங்களை மேல் தடவி அதை குறைக்க முடியும். அதேபோல் கண்களுக்கு மேல் உள்ள வீக்கங்களை குறைப்பதற்கு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கண்கள் மேல் தடவினால் கண்கள் மேல் உள்ள வீக்கங்கள் குறையும்.

கண்கள் சோர்வடைவதைத் தவிர்ப்பதற்காக நாம் ஜோஜோபா எண்ணெய், தேங்காய் எண்ணெய், அவகோடா எண்ணெய் மற்றும் அப்ரிகாட் கர்ணன் எண்ணெயை ஒன்றாக சேர்த்து சோர்வடைந்த கண்கள் மேல் தடவ வேண்டும், இதனால் கண்கள் மீண்டும் புத்துயிர் பெறும். சாதாரணமாக ஜோஜோபா எண்ணெயில் காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நம் கண்களின் மேல் தடவினால் சோர்வடைந்த செல்களை அழித்து புத்துயிர் பெறச் செய்கிறது.

மேலும் படிக்க – பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

கண்களில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்காக நாம் ஆரஞ்சு பழம், ஆரஞ்சு தோல் பொடி  மற்றும் ஜோஜோபா எண்ணெய் இவைகளை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கண்களில் தடவினால் கண்ணைச் சுற்றி உள்ள சுருக்கங்களை போக்கி உங்களை இளமையாக வைத்துக் கொள்கிறது. எனவே கண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இந்த வழிகளை பயன்படுத்தி உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன