மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

  • by

திருமண  வாழ்க்கை சிறப்பாக அமைய கணவர் வீட்டில் உள்ளாருடன் சுமுகமான உறவுடன் நடந்து கொள்ள வேண்டும்.  திருமணத்திற்கான பையனை பிடித்துவிட்டால் அவருடன் ஏற்படும் புரிதலுக்கு நிகரானது மாமியாருடன் புரிதல் ஏற்படுத்துவது.   மாமியாரிடம் பேசும் பொழுது அவரை கணித்தல் நல்லது. ஏனெனில் மாமியார் மருமகள் உறவு சுமூகமானதாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பமே மகிழ்ச்சியானதாக இருக்க வழிவகை கிடைக்கும். வாழ்கையும் நிம்மதியாக இருக்கும். அப்படி உங்கள் மாமியாரை அழைத்து இந்த விஷயங்களையெல்லாம் தெளிவாக சொல்லிவிடுங்கள்.

உறவில் புரிதல்  வேண்டும் :

 மாமியாரிடம் என்றுமே அவர் உங்களுக்கு மகன், பிறகுதான் எனக்கு கணவர். அவருடைய நலன்களை விரும்புவதில் இருவருமே அதிக அக்கறை கொண்டவர்கள் என்பதை புரியும்படி தெரிவிக்கலாம். 

மேலும் படிக்க – காதல் கல்யாணத்திற்கு பின்பும் தொடர உதவும் மூன்று விஷயங்கள் இவை தான்!

 உங்கள் இடத்தை என்னால் பிடிக்கவும் முடியாது, என் இடத்தைப் போல் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்,. அதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என உறவு குறித்து தெளிவாக சொல்லிவிடுங்கள்.

சண்டை  வேண்டாம் : 

 அத்தையின் சமையலை எப்பொழுதும் உயர்வாக பேசுங்கள். நீங்கள் வைக்கும் சாம்பார் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் என்னுடைய ஸ்டைலில் கொஞ்சம் ருசியாக வைத்தாலும் உங்களுக்குப் பின்தான் நான் என்பது  உறுதியாகும். 

உங்களுடைய  கைப்பக்குவம், அந்த ருசி அவருக்கு பிடித்திருக்கிறது அவ்வளவே. என்றுமே உங்களுடைய ருசியை என்னால் ஈடு செய்ய முடியாது. சமையலில் உங்களுடன் போட்டியும் போட  என்னால் முடியாது. உங்களுக்குப் பின்தான் நான் என்பதை குறித்து விளக்கிவிடுங்கள்.

என் குடும்பத்திற்கு இணையானது  நம் குடும்பம்:

குடும்பத்தில் ஒற்றுமைக்கு வழிவிடுங்கள். மாமியாரிடம்  குடும்ப ஒற்றுமையை முன்னிருத்திப் பேசுங்கள். என் பெற்றோர்களுக்கு நிகரானவர்கள் நீங்கள் என்பதை உறுதிபட தெரிவியுங்கள்.   திருமண பந்தம் என்றுமே உயர்வானது அதை நீங்கள் புரிந்து கொண்டுள்ள்ரிகள் என்பதை உணர்த்துங்கள். 

உங்க்ளுக்கு முக்கியத்துவம்  : 

மாமியார் வீட்டிலிருந்தும்,வீட்டு வேலைகளிலிருந்தும் தப்பிக்க வேலைக்குச் செல்லவில்லை என்பதை வீட்டில் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிவிக்கும். பல சண்டைகள் வரும் ஆனால் அமைதி காத்து நில்லுங்கள். 

 ஆரம்பத்திலேயே  வேலைக்குச் செல்லும் காரணத்தை தெளிவுப் படுத்துங்கள். . எனக்கென சில கனவுகள் இருக்கின்றன. லட்சியங்கள் இருக்கின்றன. அதை நிஜமாக்கவே வேலைக்குச் செல்கிறேன். எல்லாவற்றையும் நீங்களும் நானும்  பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

வீட்டு வேலைகளை பகிர்வு:

வயதான மாமியார்களுக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டும் இருவரும்  பகிர்ந்து செயல்படுதல் நல்லது ஆகும். கணவரை அம்மாக்கு உதவி செய்ய சொல்லுங்கள் ஒரு வீடு யாருக்கு செய்தாலும் பலன் எல்லாருக்கும் சேரும் இதை மனதில் வைத்து செயல்படுங்கள். வீட்டில் கிளவரா சுமார்டா செயல்படுங்கள் கணவரின் தயாருக்குரிய இடத்தை கொடுத்து, உங்கள் இடத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன