பாசிட்டிவிட்டியை எப்படி பகிர்வது..!

  • by
how to share positivity

நேர்மறை எண்ணம் என்று அழைக்கப்படும் இந்த பாசிட்டிவிட்டியை மற்றவர்களுக்கு பரவுவதன் மூலமாக கொரோனா தொற்றினால் உண்டாகும் பயங்கள் அனைத்தும் குறையும். இதைத் தவிர்த்து எந்த ஒரு நேர்மறை எண்ணமும் இல்லாதவர்களை ஊக்குவிக்கும் வகையில் நீங்கள் சொல்லப்படும் ஒரு சில வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்களையும், உங்களுக்குத் தெரிந்தவர்களை நேர்மறையாக வைத்துக் கொள்ள ஒருசில வழிகளை காணலாம்.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளத்தில் ஏராளமான புரளிகல் மற்றும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதுபோன்று பதவிகள் ஒரு சிலரை மிக மோசமாக பாதிக்கிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளை ஆராய்ந்து பாருங்கள், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் மூலமாக கிடைக்கும் பயன்களை பொருத்து மற்றவர்களுக்கு பகிரலாம். இல்லை எனில் இது போன்ற பயத்தை அதிகரிக்கும் மற்றும் எதிர்மறை எண்ணத்தை தூண்டும் பதிவுகளை பகிராதீர்கள்.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

நேர்மறை எண்ணம்

குடும்பத்திற்குள் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் பேசுங்கள், மற்றவர்களை அதற்கேற்றால் போல் இருக்க அறிவுறுத்துங்கள். இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் வாழ்க்கையின் அற்புதங்கள் அனைத்தையும் உணர்த்துங்கள். நேர்மறை எண்ணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் குறைத்து சந்தோஷமாக வாழ வழிவகுக்கும்.

மரணப்படுக்கை

வயது முதிர்ந்தவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர்களுடன் உரையாடும் ஆறுதல் வார்த்தைகள் அவர்களை பல நாட்கள் உயிர் வாழ வழிவகுக்கும். இவர்களுக்கு தேவையானவை ஆறுதலான வார்த்தைகள் மற்றும் நேர்மறையான சொற்கள். இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை அழகாக்குங்கள். வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு கதை சொல்வதைப் போல், வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். இது அவர்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

விழிப்புணர்வை பறவுங்கள்

எல்லோரும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நேர்மறையான வார்த்தைகள் பகிருங்கள், அதை தவிர்த்து அவர்களுக்கு தேவைப்படும் செயல்களை செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களை தவிர்த்து உங்கள் வீட்டு அருகே இருப்பவர்களை வாட்ஸப் குழுவின் மூலமாக ஒன்றிணைத்து அவர்களுடன் உரையாடி அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் என்பது மனிதனை தாக்கும் கிருமி அது மனிதனை கொல்லும் கிரிமே இல்லை என்பதை உணர்த்தி அவர்களை விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உங்கள் வாழ்க்கை அமைகிறது. எனவே எப்போதும் நேர்மறை எண்ணங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன