கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

how to save yourself from corona virus

சைனாவில் உள்ள ஊஹான் மாநிலத்தில் இருக்கும் ஒரு சந்தையில் இருந்து உருவானது தான் இந்த கரோனா வைரஸ். ஆரம்பத்தில் இது பாம்பிலிருந்து பரவியது என்று பலராலும் நம்பப்படுகிறது, ஆனால் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இது வவ்வால் களிலிருந்து பரவி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். ஒரு சிலரோ இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ், அவர்களின் ஆராய்ச்சி கூடங்களில் இருந்து வெளியாகி உள்ளது என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இந்த வைரஸ் தாக்குதலினால் சீனா மற்றும் பிற நாடுகளில் ஏராளமானோர் பாதிப்படைந்து உள்ளார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் மனித உயிர்கள் இறந்து கொண்டே இருக்கிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 

இன்றுவரை கரோனா வைரஸ் தாக்குதலினால் சுமார் 170 பேர் இறந்துள்ளார்கள், அதை தவிர்த்து 7700 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சிலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். கரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவி இருப்பதினால், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களின் மேல் கிருமிநாசினி மருந்துகளை பரப்பி வருகிறார்கள். அதை தவிர்த்து இங்கே ஏராளமான மருத்துவர்கள் கரோனா வைரஸை தடுப் பதற்காக ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க – இயற்கையான முறையில் உடல் துர்நாற்றம் அகற்றுவது இவ்வளவு எளிமையா..?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள 9-க்கும் மேற்பட்டவர்களை இந்த கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றி உள்ளார்கள். அதேபோல் இது மேலும் ஒருவரை பாதிக்க செய்யாமல் இருப்பதற்கு ஒரு நோயாளியை கிட்டத்தட்ட நான்கு மருத்துவர்கள் பரி சோதிக்கிறார்கள்.

சைனாவின் பாதுகாப்பு நடவடிக்கை

கரோனா வைரஸ் மற்ற நகரங்களுக்கு பரவாமல் இருப்பதற்க்கும், மற்ற நாடுகளுக்கு சென்று விடாமல் இருப்பதற்காகவும் எல்லா விமான நிலையங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதற்கான பரிசோதனைகள் செய்கிறார்கள். சைனாவின் பிரதமரும் இதைப் பற்றிய பயங்கள் எதுவும் இல்லாமல் மக்களுடன் மக்களாக இறங்கி விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து  தப்புவது எப்படி

கரோனா வைரஸ் பாதிப்பிக் யாராவது இருந்தால் அவர்கள் உடனே மருத்துவரை அணுகுவது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவுவதற்கு சமமாகும். ஏனென்றால் இது காற்றின் மூலமாக பரவக்கூடியது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய பொருட்களை மற்றொருவர் தொடுவதன் மூலம் கரோனா வைரஸ் உங்களிடம் தொற்றிக்கொள்கிறது. பின்பு அதை நாம் சுவாசித்தால் அல்லது உங்கள் உணவில் கலந்தால் நமக்குள் கரோனா வைரஸ் தொற்றிக் கொள்கிறது. இந்த வைரஸ் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை உயிருடன் இருக்குமாம்.

மேலும் படிக்க – வாயுத் தொல்லையிலிருந்து விடுதலையாவதற்கான வழிகள்..!

இதைத் தடுப்பதற்கு நாம் முகமூடி மற்றும் கை கவசம் அணிந்து இருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவ வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்திய எந்த பொருளையும் பயன்படுத்தாமல் சுத்தமான முறையில் இருக்க வேண்டும். வெளியே செல்வதோ அல்லது மாமிச உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சீனா மற்றும் அதை சுற்றி உள்ள நாடுகள் விற்கப்படும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மாற்று மருந்து

கரோனா வைரஸ் சைனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் பரவியுள்ளது. இதில் ஒவ்வொரு நாடும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் வைரஸ் மாதிரியை வைத்து அதற்கான மாற்று மருந்தை தயார் செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸின் மாதிரியை வெற்றிகரமாக நகல் செய்து அதற்கு இந்த மாதிரியான மருந்துகளை அளிக்கலாம் என்ற ஆராய்ச்சி செய்து வெற்றியும் அடைந்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை நேரடியாக மனிதர்கள் மேல் பரிசோதிக்க முடியாது. முதலில் விலங்குகள் அல்லது பறவைகளுக்கு பரிசோதித்த பிறகே மனிதர்களுக்கு இதை பயன்படுத்த முடியும்.

மாற்று மருந்து இருந்தாலும் அது 100% வேலை செய்யுமா என்பது கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு பிறகே தெரியும். நாளுக்கு நாள் உயிர் சேதம் அதிகரித்திருக்கும் போது மூன்று மாதத்திற்கு பிறகு இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 மடங்கு அதிகரித்திருக்கும்.

மேலும் படிக்க – ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் இந்த நோய் பரவ ஆரம்பித்திருக்கலாம், அச்சமயங்களில் சைனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு சென்றவர்கள் மூலமாக அவர்கள் நாட்டிலும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்கிறார்கள். சைனாவோ இதை எதிர்க்கிறது, சில வாரங்களுக்கு முன்புதான் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது என்றார்கள். ஆனால் உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக வளர்ந்து வரும் சைனாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் நாட்டில் உருவான சார்ஸ் வைரஸ் மூலமாக ஏவப்பட்ட உயிர்சேதம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் சைனா பாதுகாப்பில்லாத நாடாகவே கருதப்படுகிறது. எனவே உலகம் முழுக்கும் இருக்கும் பெரிய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் அதிகமாக இருப்பதினால் சைனா மிகப்பெரிய பொருளாதார இழப்பை எதிர்கொண்டு வருகிறது. ஒரு சிலர் உணவுகளுக்கும் கஷ்டப்பட்டு வருகிறார்கள், ஆனால் சீன அரசாக் முடிந்தவரை எல்லா மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள்.

மிக விரைவில் சீனா இந்தப் பிரச்சனையில் இருந்து வெளிவரும் என்று அந்நாட்டுப் பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார்.

ஓர் புதிய வைரஸ் பிறக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் மனிதர்கள் தான். எனவே ஆரோக்கியமான மற்றும் தேவையான உணவுகளை அருந்துவதன் மூலம் நமது வாழ்க்கை சீராக இருக்கும், அதை தவிர்த்து காடுகளில் இருக்கும் பாம்பு, வவ்வால் போன்ற உயிரினங்களை எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் சமைத்து சாப்பிடுவதன் மூலம் இது போன்ற மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என்று நமக்கு உணர்த்தியுள்ளது.

எனவே மக்களால் வளர்க்கப்படும் மாமிசங்களை சாப்பிடுவதே சிறந்தது. அதை தவிர்த்து புதிய முயற்சி செய்கிறேன் என்ற எண்ணத்தில் இதுபோன்ற இக்கட்டான வாழ்க்கைக்குள் இறங்காமல் ஆரோக்கியமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன