மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

  • by
How to save you from pollution

உலக அளவில் காற்று அதிகளவில் மாசடைந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதிலும் இந்தியாதான் முதலிடம். இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 25 லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டினால் உயிரிழக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகள் வளர்ந்து வரும் நாட்டில் தான் அதிகமாக ஏற்படுகிறது, அங்கேதான் அவர்களுக்கான போதுமான விழிப்புணர்வு ஏதும் சரியாக கிடைப்பதில்லை.

இந்தியாவின் காற்று மாசடைதல்

கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் காற்றில் இருக்கும் நச்சுதன்மை அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே சுவாசிக்கும் அனைவருக்கும் நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. டெல்லி காற்று சுவாசிப்பதற்கு ஏற்றதல்ல என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். எனவே காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார்கள். இந்தக் காற்றை சுவாசிக்கும் குழந்தைகள் வளரும் தருவாயில் புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது இன்றைக்கு முடியும் பிரச்சனை அல்ல, எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும்.

மேலும் படிக்க – புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.?

மாசுபாட்டை தடுக்கும் வழிகள்

நாம் நாட்டில் இருக்கும் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் அதற்கான செயல்களை செய்ய வேண்டும். எப்பொழுதும் வெளியே செல்வதாக இருந்தாலும் தனக்கென்று ஒரு வாகனத்தை பயன்படுத்தாமல் பொதுவாகனத்தில் செல்வது நல்லது. அப்படி உங்கள் வாகனத்தில் கூட்டமாக செல்வதாக இருந்தால் வாகனத்தை நன்கு பராமரிக்க வேண்டும். அது வெளியிடும் புகை காரணமாக கூட நம் காற்று மாசடையும். தேவையற்ற சமயங்களில் வாகனத்தை செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நாம் நெகிழி போன்ற பொருட்களை எரிப்பதை தடுக்க வேண்டும். நம்முடைய சுற்று சூழலை எப்போதும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

உலக வெப்பமடைதல்

நம்முடைய வாழ்க்கை முறைகளினால் நம்முடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இன்று ஏதோ ஒரு இடத்தில் நெருப்பை பற்ற வைப்பதினால் நம் எதிர்திசையில் எங்கோ ஓரிடத்தில் அடர்ந்த காட்டில் தீ உருவாகிறது. இதை கருத்தில் கொண்டு நம்மால் என்ன நடக்கப்போகிறது என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். உலக வெப்பமடைவதுனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் ஆங்காங்கே காட்டுத்தீ பரவி பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அதேபோல் கடல் நீர்மட்டம் அதிகரித்து, மிக விரைவில் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை நம்முடைய குடும்பம் பாதுகாப்பாக எண்ணி அதற்கான செயல்களை இன்று முதல் செய்யத் தொடங்குங்கள்.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

மரங்கள் அதிகரிக்க வேண்டும்

நம்முடைய சுற்றுச்சூழல் செம்மையாக இருக்க வேண்டும் என்றால் நாம் இன்று முதல் ஆங்காங்கே செடிகளை நடுவதை வாடிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். என்றோ ஒருநாள் நாம் பயன்படுத்திய தீய காரியங்களினால் இன்று நம்முடைய சுற்றுச்சூழல் பெரிதாக பாதிப்படைந்துள்ளது. எனவே அதை சரி செய்வதற்காக இன்று செடிகளை நடுவதால் நாளை உங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மறைந்து போகும்.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

பாதுகாப்பு அவசியம்

மாசில் இருந்து  நம்மை பாதுகாப்பதற்கு நாம் முகத்தில் முகமூடி அணிந்து கொள்வது நல்லது. அதிலும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் எப்போதும் முகமுடியில் இருக்க வேண்டும், இல்லையெனில் காற்றில் இருக்கும் மாசு தங்களை எளிதில் தாக்கும், உங்கள் உடல்நிலையில் சீர்குலைக்கும். உலகின் பல பகுதிகளில் ஏராளமான கிருமிகளின் தொற்றுகள் இருப்பதினால் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. எனவே சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும். தினமும் குளிப்பது நல்லது. அதேபோல் நீங்கள் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களும் சுத்தமானதா என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இருமல், தும்மல் போன்றவைகளை மற்றவர்களுக்கு பரவாமல் ஏதேனும் துணிகளைக் கொண்டு இரும்ப வேண்டும். இவை அனைத்தையும் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்தையும் காப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன