பூஞ்சை தொற்றிலிருந்து காக்க எளிய வழிமுறைகள்

  • by

பூஞ்சைகள்  தொற்று நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல ஈரமான சூழல்கள் நிறைந்த பகுதி, சுத்தமாக இல்லாத பகுதிகள் மற்றும் காற்றோற்றம் இல்லாத பகுதிகள் அத்துடன் கழிவுகள் நிறைந்த பகுதிகளில் பூஞ்சையின் தாக்கம் இருக்கும். இது மனிதர்களுக்கு  பாதிப்பை உண்டுசெய்யும். 

பூஞ்சை பாதிப்பு இருந்தால் அதனைப் போக்க பின்பற்ற வழிமுறைகள் பூஞ்சை பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் வழிமுறைகள் அனைத்தும் இந்தப் பதிவில் அறிவோம். 

மனித உடலில் பூஞ்சை பாதிப்பு: 

அதிக கழிவுகள் உடலில் தேக்கம் ஏற்படும் பொழுது காற்றோட்டம் இல்லாத இறுக்க உடைகள் போன்றவற்றால் பூஞ்சை  தொற்று ஏற்படும் அது தோலினைப் பாதிக்கும். பூஞ்சை தொற்றால் மனித தோல் உடனடியாக பாதிக்கப்படும் பூஞ்சை  தொற்றால் படர்தாமரை, சேற்றுப்புண், தேமல் ஆகியவை ஏற்படுகின்றது. இது தோலை சேதப்படும் உடல் முழுவதும் பரவும் ஆபத்து கொண்டது ஆகும்.  இது வந்தால் தோலில் அரிப்பு, தடிப்பு, நிறம் மாறல் ஆகியவை ஏற்படக்கூடும். 

பூஞ்சை தொற்று குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை: 

பூஞ்சை  தொற்றானது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கச் செய்யும் ஒன்றாகும். இது அதிகமான வெப்ப பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்படும்.  

பூஞ்சை   தொற்று சூரிய ஒளிபடாமல் வியர்வையால் உண்டாகும். அழுக்குகள் எனும் கழிவுகள் தேங்கும் பொழுது அக்குகள், தொடை இடுக்குகளளில் ஈரமான உடை அணியும் பொழுது இது ஏற்படும். சுகாதரமான சுற்றுசூழல் இருக்க வேண்டும். 


பூஞ்சை தொற்று

குணப்படுத்தும் வழிமுறைகள்: 

தினமும் உடலை சுத்தமாக  வைத்திருக்க வேண்டும். கழிவுகளை முறையாக வெளியேற்ற  வேண்டும். தேவைபடும் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள் தின உணவில் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.  பத்திய உணவு சாப்பிடுதல் நல்லது ஆகும். ஆண்டிபயோட்டிக் மருந்துகள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். 

இருக்கமான ஜீன்ஸ், அணிவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான உள்ளாடைகள் அணிய வேண்டும். உள்ளாடைகள் முறைய அளவில் அணிய வேண்டியது அவசியம் ஆகும். உணவில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டும். ஈஸ்ட் அதிகமுள்ள உணவை குறைக்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவை தவிர்க்க வேண்டும். 

மருதாணி துளிர் இலைகளுடன், பூண்டு 2 பல், 6 மிளகு தட்டி போட்டு மஞ்சள் பொடி சிட்டிகை சேர்த்து  தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு சுண்ட காய்ச்சி குடிக்க பூஞ்சைகள் தொற்று குறையும். ஆப்பிள் சிடர் விநிகர் தினமும் ஒரு ஸ்பூன் குடிக்கும் நீரில் கலந்து குடித்து வருதல்  நோய் தொற்றை குறைக்கும். 

தயிர் தினமும் சாப்பிட்டு வர  அதிலுள்ள லக்டோ போஸிலஸ் நல்ல பாக்டிரியாக்கள்  உடலுக்கு தீங்கு தராது. அமில காரத்தன்மையை சரி செய்யும். தினமும்  சாப்பிடும் உணவில் தயிர் சேர்க்க வேண்டும். 

பூஞ்சை தொற்று

எதிர்ப்புச் சக்தி நிறைந்த  தொற்றுகள் ஏற்படாமல் காக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆரஞ்சு, க்ரீன், டீ, மிளகு கீரை, ஆப்பிள், காளான் ஆகியவற்றை உடலில் சேர்த்து வருதல் நல்லது ஆகும். உடலுக்கு விட்டமின் டி அதிகம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.  பூஞ்சை தொற்றானது முதலில் சிறியதாக தோன்றும் நாளடைவில் இது பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்யும். உடலில் பாதுக்காபை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கச் செய்ய வேண்டும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன