உயிரியல் போரில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது..!

  • by
how to safeguard us from war between countries

ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டிற்கும் போர் என்று வந்தால் முதலில் பயன்படுத்துவது முப்படைகள்தான். நீர் வழியாகவும், வாண் வழியாகவும் மற்றும் தரை வழியாகவும் போர் புரிவார்கள். அதில்  துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்துவார்கள். அதைத் தவிர்த்து டேங்கர் மற்றும் வான்வழி விமானங்களைப் பயன்படுத்தி மற்ற நாட்டில் போர் புரிவார்கள். இதில் உயிரிழப்புகள் இரு பக்கமும் சரிசமமாக இருக்கும். எப்போது ஒரு நிலையான உயிரிழப்புகள் இருக்கிறதோ அப்போது மற்றொரு நாடு வெற்றி பெறுகிறது. ஆனால் உயிரிழப்பே இல்லாமல் போர் புரிவதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் உயிரியல் போர் அதாவது “பயாலஜிக்கல் வார்”.

உயிரியல் போர் தொடக்கம்

1972 ஆம் ஆண்டு உயிரியல் போர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இது தீவிரவாதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட மாநாடு. இந்த மாநாட்டின் நோக்கம் என்னவென்றால் ஆயுதங்களை பயன்படுத்தி தீவிரவாதிகளை அழப்பதை விட, உயிரியல் ஆயுதம் மூலமாக அவர்களை அழிக்கலாம் என்று திட்டமிட்டார்கள். இதன்மூலமாக ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு குறையும் என்று கருதி இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டது. ஆனால் இதை மற்ற நாட்டவர்களுக்கு எதிராக போர் புரிவதற்கு பயன்படுத்தினால் என்ன ஆகும் என்ற அச்சத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதை தடை செய்தார்கள்.

மேலும் படிக்க – உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசும், ஆயுதமாக மாறியுள்ள சோப்பும்!

சைனாவில் ஆராய்ச்சி மையம்

இஸ்ரேலில் தலைமைப் பதவியை வகிப்பவர் சைனாவில் மேல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். கரோனா வைரஸ் என்பது சீனாவால் உற்பத்தி செய்யபட்ட உயிரியல் ஆயுதம் என்று அவர் கூறியுள்ளார். அங்கே வேலை செய்யும் ஒருவரால் தான் இந்த கரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவி உள்ளது என்று இஸ்ரேல் அவர்மேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதுபோன்ற உயிரியல் ஆராய்ச்சியை நிறுத்தும்படி எல்லோருக்கும் அறிவுறுத்தியது யூஎன். அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி சைனா செய்த ஆராய்ச்சியினாள் தான் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றார்கள்.

உயிரியல் போர்

தீவிரவாதிகளை அழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த உயிரியல் போர், நாளடைவில் மற்ற நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதனால் இதை தடை செய்துள்ளார்கள். எந்த நாட்டின் மேல் இதுபோன்ற உயிரியல் போர் தொடங்குகிறார்கள் அந்த நாடு முழுவதும் அழிந்து பல வருடங்கள் மேலும் எந்த ஒரு உற்பத்தியும் இல்லாமல்  சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும். இதனாலேயே இதை எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து தடை செய்தார்கள்.

இதிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றுவது

பயோ வார் என்பது முழுக்க முழுக்க காற்றில் கலக்கப்படும் போர். இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, இப்போது குரானா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்கிறோமோ அதே போல் தான் நாம் நம்மை பயோ வாரில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொண்டு காற்றின் தரத்தை உயர்த்தினால் பயேவாரின் தாக்கம் குறையும். அதை தவிர்த்து முகங்களில் உரைகள் மற்றும் கையுறைகளை அணிந்து வந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மேலும் படிக்க – சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்களும், தீர்வுகளும்.!

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வகையான போரின் ஆரம்பம் என்று சொல்லலாம். எனவே இதிலிருந்து காத்துக் கொள்வதற்காக நாம் அன்பை வெளிப்படுத்தி ஒற்றுமையாக வாழ்வதே சிறந்த வழியாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன