கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!

  • by
how to safeguard us from corona virus

திரும்பிய திசையெல்லாம் நம் காதுகளில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும் ஒர வார்த்தை கரோனா!
 

உலகையே தன்வசப்படுத்தி இருக்கும் இந்த வைரஸ் தொற்றை நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு நம்மிடம் வராமல் தற்காத்துக் கொள்வது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

உலக சுகாதார நிறுவனமே பெரும் தொற்று நோயாக இந்த கோவிட் – 19 னை அறிவித்துள்ளது. நோயினைத் தடுக்க நம் உடலையும் மனதையும் திடமாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொண்டாலே போதும் நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
 

நம்முடைய மரபு உணவு முறையும் பழந்தமிழர் வாழ்வியல் முறையும் இப்பொழுது இந்த சூழ்நிலையில்  மீட்டறிய வேண்டிய அவசியம் வந்துள்ளது.

ஆன்ட்டிபயாட்டிக் ஆக மாறிய மஞ்சள் 

நம் முன்னோர்கள் உணவிலும் சுப காரியங்களிலும் மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்த காரணம் அது ஒரு கிருமி நாசினி என்பதால் தான். இன்று நம்மை சுற்றி இருக்கும் தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க பயன்படுவதும் இந்த மஞ்சள் தான்.

மேலும் படிக்க – கோடைகாலங்களில் ஏற்படும் வியர்வையை தடுப்பது எப்படி..!

கைகளை கழுவ மஞ்சள் கரைத்த நீர் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. மஞ்சள் கரைத்த நீரில் கைக்குட்டையை ஊற வைத்து அதன் பின் அதனை பயன்படுத்த வேண்டும்.

இந்த மஞ்சள் கரைத்த நீரை வாசலில் முன்புறமும் வீடுகளிலும் உட்புறமும் தெளித்தால் சுற்றியிருக்கும் வைரஸ் கிருமிகள் நம்மை தாக்காமல் கிருமிகளை இந்த மஞ்சள் அழிக்கும்.

மஞ்சள் கரைத்த நீர் அதனுடன் வேப்பிலை திருநீற்றுப்பச்சை ,நொச்சி, கற்பூரவள்ளி இலைகளை ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை எடுத்து வீட்டின் வெளி பகுதிகளிலும் வெளியில் சென்று வந்தால் கை கால்கள் கழுவுவதற்கும் அந்த நீரை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

குழந்தைகள் முதியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது இந்த காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. உணவில் மஞ்சளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.

அஞ்சறைப்பெட்டி உணவுப் பொருட்கள் 

“உணவே மருந்து ” என்ற பழமொழிக்கேற்ப நம் முன்னோர்கள் உணவையே மருந்துபோல் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் உண்டு வாழ்ந்திருக்கின்றனர். அவர்களை போல் அன்றாட உணவில் மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களுமே அதிகமாக பயன்படுத்த வேண்டிய சூழல்  நிலவுகிறது. 

அன்றாடம் பயன்படுத்த வேண்டிய அஞ்சறைப்பெட்டி பொருட்கள்

லவங்கம், பட்டை, அன்னாசிப்பூ சுக்கு கிராம்பு ஆகியவை நறுமணம் ஊட்டும் பொருட்கள் மட்டுமல்ல நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ பொருட்களும் தான் அவற்றை சிறிதளவு எடுத்து குடிநீராக காய்ச்சி பயன்படுத்தலாம். 

பெரும்பாலான அஞ்சறைப்பெட்டி உணவுகள்தான் கிருமிகளின் பெருக்கத்தை அதிகம் அளிக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

பாக்கெட் உணவுகளை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக நாம் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து உண்பது நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும். இஞ்சி தேநீர் ,சுக்கு கஷாயம், மிளகு ரசம் தூதுவளை துவையல், புதினா சட்னி சின்ன வெங்காயம், பூண்டு, மிளகுதூள் தூவிய பழங்கள் குறிப்பாக நெல்லிக்காய் துவையல் போன்றவை சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கின்றன.

நாள்தோறும் கீரை வகைகள் , காய்கறி சூப் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம் அருகில் கூட வர வாய்ப்பில்லை.

நோய் பரவாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

வெயில் காலம் என்பதால் நாம் அனைவரும் குளிர்ச்சியான பொருட்களை தேடி உண்பதற்கு ஆசைப்படுவோம். ஆனால் இப்பொழுது சூடாக தயாரித்த உணவை உட்கொள்வது அவசியம்.

குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருள்களை சில்லென்று சாப்பிடுவதும் நோய் தொற்றுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நோய்கள் பரவும் இக்காலகட்டத்தில் நம் உடலை நோய் தொற்றால் பாதிப்படையாமல் பாதுகாத்துக்கொள்வது மிக முக்கியமானதாகும்.

உணவகங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவுகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றை சில வாரங்களுக்கு சாப்பிடாமல் இருப்பதே நல்லதாகும்.

மேலும் படிக்க – பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

அச்சம் வேண்டாம்

நம் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதும் எந்த வைரஸும் நம்மை தாக்காது. சாதாரண சளி ,காய்ச்சல், இருமல் என்றாலே கரோனா என்ற பதற்றம் நிச்சயமாக தேவை இல்லாத ஒன்று.

இப்போது கிடைத்திருக்கும் விடுமுறை தினங்களை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். ஏனெனில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் உடலில் அதிகம் சுரந்தால் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமே நம்மை இன்னும் பலவீனமானவர்களாக மாற்றும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன