மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை எப்படி பாதுகாப்பது..!

  • by
how to safeguard mobile and laptops

கொரோனா வைரஸ் தொற்று உங்கள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. நாம் எங்கு சென்றாலும் நம்முடைய செல்போன்களை நம் கையில் எடுத்துக் கொண்டு செல்கிறோம். அதைத் தவிர்த்து அதன் பயன்பாடும் பொதுஇடங்களில் அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அந்தக் குறிப்புகள் அனைத்தும் உங்கள் செல்போனில் பதிவாகி இருக்கும்.

அதை தவிர்த்து அவ்வப்போது நாம் செல்போனை பயன்படுத்தி தேவையான பொருட்களை பற்றிய விவரங்கள் நம் வீட்டில் கேட்போம். இது போன்ற நிலைகளில் வைரஸ் உங்கள் செல்போனில் பரவ வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வழிகளை இங்கு காணலாம்.

செல்போன் பயன்பாடு

நம் வீட்டை விட்டு வெளியே சென்று நமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அங்காடிகளுக்கு சென்று வாங்கி வருகிறோம். அச்சமயங்களில் நாம் பல இடங்களை நம்மையறியாமல் தொட்டு விடுகிறோம். ஆனால் நாம் வீட்டிற்கு திரும்பியவுடன் நம் கைகள் மற்றும் கால்களை நன்கு அலம்பி நம்மை சுத்தப்படுத்துகிறேம் ஆனால் நாம் அது போன்ற பொது இடங்களில் பயன்படுத்தி வந்த செல்போன்களை எப்படி சுத்தப்படுத்துவது. நம் கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆல்கஹாலால் செல்போனை சுத்தப்படுத்தினால் அது பழுதாகிவிடும்.

மேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

லேப்டாப்

அதைத்தொடர்ந்து செல்போன் மூலமாக பரவிய இந்த தொற்று உங்கள் லேப்டாப்பிற்க்கு பரவ வாய்ப்புள்ளது. இல்லையெனில் நீங்கள் அலுவகத்தில் இருந்து லேப்-டாப்பை வீட்டிற்குக் கொண்டு வந்து இருந்தால் அதில் வைரஸ் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற இயந்திரம் மூலமாக இயங்கும் செல்போன் மற்றும் லேப்டாப்களை நாம் எப்படி பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது என்பதை தெளிவாக காணலாம்.

மைக்ரோ பைபர்

நம்முடைய செல்போன்களை நாம் மைக்ரோ பைபர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் முகத்திற்கு பயன்படுத்தும் வெட் கிளோத்களை கொண்டு நம் செல்போனை துடைக்கலாம். இதில் ஆல்கஹால் இல்லாத வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே பொருட்களை வைத்து உங்கள் லேப்டாப்பையும் சுத்தப்படுத்தலாம். உங்கள் வெட் கிலாத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அதை சற்று குறைத்து பயன்படுத்துங்கள்.

பயன்படுத்தக் கூடாது

சனிடேஷன், சோப்பு, ஹேண்ட் வாஷ், கிச்சன் மற்றும் கண்ணாடிகளை துடைக்கும் பொருட்கள், மற்றும் ஒப்பனை அகற்றும் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஒரு சிலர் காற்றைக் கொண்டு பயன்படுத்துவார்கள் இது எந்த வகையிலும் உங்களுக்கு உதவாது.

மேலும் படிக்க – மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

தவிர்ப்பது நல்லது

எனவே பொது இடங்களுக்கு செல்வதாக இருந்தால் அங்கே உங்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது. அதை மீறி நீங்கள் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் அதைச் சுற்றி ஏதேனும் பாலித்தீன் கவர் போன்றவறின் மூலமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதேபோல் வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் கணினியை தொடுவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். உங்கள் கைகளை சுத்தப்படுத்திய பிறகு உங்கள் லேப்டாப்பை தொடலாம்.

எனவே கொரோனா வைரஸ் உங்கள் வீட்டிற்குள் நுழைவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விடுங்கள். உங்கள் குடும்பத்தின் நலனைக் கருதி இது போன்ற சிறுசிறு செயல்களை செய்து உங்க குடும்பத்தை பாதுகாத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன