பழைய வெள்ளி நகைகளை புதுப்பிக்கும் வழிகள்..!

  • by
how to restore the beauty of silver jewellery

நகைகள் என்பது இந்தியர்கள் எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய பொருட்கள். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. இந்தியா முழுவதும் திருமணம் என்று நடந்தால் அதற்கு முதலில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு செலவுகளை செய்வார்கள். இப்படி இவர்கள் நகைகளை சேகரித்து அதை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதினால் அவர்கள் வைத்திருக்கும் அனைத்து நகைகளும் பழுதடைந்துவிடும். அதை தவிர்த்து வெள்ளி நகைகள் தன் நிறத்தை இழந்து கருமையாக மாறிவிடும். இதை வீட்டிலேயே புதுப்பிக்கும் வழிகளை இங்கே காணலாம்.

வினிகர் பயன்படுத்தலாம்

நகைகளை சுத்தம் செய்வதற்காகவே வினிகர் இருக்கிறது, நீங்கள் கடைகளில் உங்கள் வெள்ளி நகையை சுத்தப்படுத்த கொடுத்தால் வினிகரை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். வினிகரை வாங்கிக் கொண்டு அதில் நகையை போட்டு 10 நிமிடங்கள் அதில் ஊறவைத்த பிறகு பின்பு எடுத்து நீங்கள் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை கொண்டு மெதுவாக தேய்த்து சுத்தப்படுத்தலாம். இதன் மூலமாக உங்கள் ஆபரணத்தில் இருக்கும் கருமை விலகி பொலிவடையும்.

மேலும் படிக்க – சிறிய மேக்கப்பிற்க்கான அறிவுரைகள்..!

அலுமினியத்தால்

நம்முடைய வெள்ளிப் பாத்திரங்களை அலுமினியத்தால்களைக் கொண்டு நாம் புதுபித்திருப்போம். அதேபோல் அலுமினியத்தால் வைத்து நம்முடைய வெள்ளி நகைகளை சுத்தப்படுத்தலாம். அதற்கு நாம் ஒரு பாத்திரத்தில் அலுமினியத்தை வைத்து விட்டு அதன் மேல் நமது வெள்ளி நகைகளை வைத்து சுடு தண்ணீரை அதன் மேல் ஊற்ற வேண்டும். நகைகள் மேல் முழுவதும் சுடுதண்ணி படுமாறு ஊற்றிய பிறகு நகைகளை வெளியே எடுத்து அதை மீண்டும் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். இதன் மூலமாக உங்கள் நகை புதிதாகும்.

உப்பை பயன்படுத்தலாம்

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை தண்ணீரில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனுள் நமது வெள்ளி நகைகளைப் போட்டு மென்மையான பிரஷ் கொண்டு அழுக்குகளை அகற்ற வேண்டும். உப்பு உங்கள் நகைகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்டை பயன்படுத்தி உங்கள் வெள்ளி நகையை பளிச்சென்று மாற்ற முடியும். உங்கள் வெள்ளி நகைகளில் மேல் டூத் பேஸ்ட் மென்மையாகத் தேய்த்து அதை பத்து நிமிடங்கள் அதிலேயே ஊற வைத்து பின்பு கழுவினால் அதன் மேல் இருக்கும் கருமைகள் விலகும்.

மேலும் படிக்க – நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

சோப்புத் தண்ணீர்

எல்லோரும் பயன்படுத்தும் மிக எளிமையான வழி இதுதான். நாம் துணிகளுக்கு பயன்படுத்தும் சோப்பு பவுடரை தண்ணீரில் கலந்து அதில் நமது வெள்ளி நகையை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பின்பு கழுவினால் உங்கள் நகைகள் பளப்பளப்பாக இருக்கும்.

எனவே கடைகளில் கொடுத்து உங்கள் வெள்ளி நகை புதுப்பிப்பதை விட வீட்டில் இது போன்ற வழிகளை கடைப்பிடித்து உங்கள் நகைகளை புதுப்பிக்கலாம். இதனால் உங்கள் பணம் மிச்சமடையும், நகைகளும் புதிதாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன