உங்கள் உடலை ரீசார்ஜ் செய்து ஆற்றலை அதிகரிப்பது எப்படி..!

  • by
how to rest and recharge your body

நாம் தரமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் நமக்கு போதுமான அளவு ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வை நாம் 80% தூங்குவது மூலமாக பெறுகிறோம், மற்ற 20% நம்முடைய பொதுப் போக்காக அமைகிறது. எனவே ஓர் ஆழ்ந்த தூக்கமும், ஒரு சிறந்த பொழுதுபோக்கும் நமக்கு எவ்வாறு இருக்க வேண்டும். அதனால் நம்முடைய உடல் எப்படி ரீசார்ஜ் ஆகிறது என்பதை காணலாம்.

தூங்கும் நேரத்தை பின்தொடருங்கள்

ஒரு நாளைக்கு நமக்கு 8 மணி நேர உறக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே நம்முடைய உடல் களைப்பை போக்குவதற்கும், அடுத்தநாள் ஆற்றலாக இருப்பதற்கும், நாம் 8 மணி நேரம் உறங்க வேண்டும். இந்த உறகத்திற்கான சரியான திட்டங்களை தீட்ட வேண்டும். அதாவது இரவு 10 மணிக்கு தினமும் உறங்க முயற்சி செய்யுங்கள், பிறகு அதிகாலை 6 மணிக்கு எழுந்திருங்கள். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் இது பழக்கமாக மாறி இதனால் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பது மட்டுமல்லாமல் அடுத்த நாளுக்கான ஆற்றலும் கிடைக்கும்.

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

படுக்கையறையை அழகாக்குங்கள்

உங்கள் படுக்கை அறை முழுக்க கண்களுக்கு பாதுகாப்பான அழகான வண்ண விளக்குகளை அலங்கரியுங்கள், பிறகு உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்கள் மற்றும் மன நிறைவைத் தரும் நினைவுகளை உங்கள் படுக்கை அறை சுற்றி வையுங்கள். அதை தவிர்த்து முக்கியமாக உங்கள் படுக்கையை மென்மையாகவும், உறங்குவதற்கு உதவுவதாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கான ஓய்வு சிறப்பானதாக அமையும்.

உங்கள் ஆன்மாவை அமைதிப்படுத்துங்கள்

நாம் எந்தளவு அமைதியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கான ஓய்வு நமக்கு கிடைக்கிறது. எனவே சிறிய வகை உடற்பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலமாக உங்கள் மனம் அமைதி அடையும். அதை தவிர்த்து இனிமையான பாடல்களை கேட்பது, ஏதாவது கட்டுரையை எழுதுவது, இல்லை எனில் புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக உங்கள் ஆன்மா ஓய்வு பெற்று உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.

உங்களுக்கு நீங்களே பரிசுகளை அளித்து கொள்ளுங்கள்

நீங்கள் ஓய்வுக்காக செய்யும் எல்லா விஷயங்களையும் பாராட்டும் வகையில் உங்களுக்கான பரிசுகளை நீங்களே அளித்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு எப்போதெல்லாம் நீங்கள் மன உளைச்சல் அல்லது களைப்புடன் இருக்கிறீர்களே அப்போது தனிமையாக உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவகத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்த உணவை அருந்தலாம். இல்லை எனில் சினிமாவுக்கு அல்லது மற்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று உங்களை மகிழ்வித்து கொள்ளலாம். இது உங்களுக்கு நீங்களே தரக்கூடிய மிகச்சிறந்த பரிசாகும்.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

ஒருவருக்கும் போதுமான அளவு ஓய்வு வேண்டுமென்றால் அவர்கள் மனம் மற்றும் உடல் இரண்டும் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு, பிடித்த பொழுதுபோக்கும் மற்றும் போதுமான அளவு உறக்கமும் தேவைப்படுகிறது. எனவே இதை தினமும் சரியாக கடைப்பிடித்து உங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், அழகாகவும் மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன