திருமணத்தில் உண்டாகும் பிரச்சனையை ஜோதிடத்தில் தீர்க்கலாம்..!

  • by
how to resolve your problems in marriage life with astrology

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு அந்த உணர்வை திருமணம் வரை கொண்டு செல்வதற்குள் நாம் ஏராளமான பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. அதையும் மீறி ஒருவகையாக திருமணம் செய்யும் பொழுது நம்மை சுற்றி உள்ளவர்கள் அல்லது உறவினர்களினால் ஏதேனும் பிரச்சினைகள் உண்டாகிறது, அதையும் சமாளித்து ஒரு வகையாகத் திருமணம் செய்யும் பொழுது ஜாதகத்தில் ஒரு சில பிரச்சினைகள் உண்டாகும். இதுபோல் திருமணத்தை நடத்தும் போது ஏற்படும் பிரச்சனைகளை இங்கே காணலாம்.

தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனை

திருமணம் என்பது ஒரு வகையான பதட்டத்தை கணவன் மற்றும் மனைவிக்குள் உண்டாக்கிவிடும். இதனால் அந்த பதட்டத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் தங்கள் துணை இடையே கோபமாக வெளியிடுவார்கள். இதனால் திருமணத்தை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு இவர்களுக்கும் சிந்தனைகள் உண்டாகும். காதலன், காதலியாக இருக்கும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் காதலித்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதுவே திருமணம் என்றவுடன் தங்களுடைய சுதந்திரம் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இது போன்ற பதட்டங்கள் உண்டாகும்.

பணத்தால் உண்டாகும் பிரச்சனை

திருமண ஏற்பாட்டை பற்றி பேசத் தொடங்கிய நாள் முதல் அந்தத் திருமணம் முடிந்து விருந்திற்கு செல்லும் வரை ஏராளமான பணத்தை பெண் மற்றும் பிள்ளை விட்டார்கள் செலவழிக்க வேண்டும். ஒரு சிலர் கடனுக்கு வாங்கி கௌரவமான முறையில் திருமணம் செய்வார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு திருமண செலவு அதிகரிக்கும் போது அதை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருபவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது. இது போன்ற பிரச்சினைகளை நாம் ஜோதிடத்தில் கண்டறிந்து அதற்கான உடனடி தீர்வை அளிக்க முடியும்.

கருத்து வேறுபாடு

திருமணம் என்றவுடன் அதை எப்படி நடத்தலாம் என்ற கருத்துக்கள் எல்லோரிடமும் இருந்து வந்த வண்ணம் இருக்கும். ஆனால் ஒருவர் சொல்லும் கருத்து எப்போது மற்றவர் மறுக்கிறாரே அப்போதுதான் திருமணத்திற்குள் பிரச்சனைகள் உருவாகிறது. இதைத் தடுப்பதற்கு ஒருவர் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்கும்படி பொறுமையாக உங்கள் திட்டங்களை சொல்ல வேண்டும், அதை மற்றவர்கள் மறுத்தால் அவரின் கருத்தை கேட்டு அதை எப்படி உங்கள் கருத்துடன் ஒப்பீட்டு மாற்றலாம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.

மேலும் படிக்க – மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தை குறைக்க உதவும் ஜோதிடம்..!

உறவினர்களால் ஏற்படும் பிரச்சனை

திருமணம் என்பது ஆண் பெண் இருவரை மட்டும் இணைப்பது அல்ல இரண்டு வெவ்வேறு விதமான குடும்பத்தையும் இணைப்பது. அப்படி இணைக்கும் பொழுது ஒரு பெண் அல்லது ஆண் தன்னுடைய துணை உடைய குடும்பத்தை அவதூறாக பேசுவது அல்லது அவர்களின் செயலைப் பற்றி குறை கூறுவது போன்றவற்றை நாம் குறைக்க வேண்டும். அப்படி குறைக்காமல் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தால் உறவுக்குள் பிரச்சினைகள் உண்டாகும்.

ஈர்ப்பு குறைபாடு

பெற்றோர்களின் விருப்பப்படி அமையப்படும் திருமணங்களில் பொதுவாக இருக்கும் பிரச்சனை என்னவென்றால் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் இடையே ஈர்ப்பு தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் ஒன்று இணைவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் வரை எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்ற பிரச்சினையை ஆரம்பத்தில் தடுப்பதற்காகவே இருவீட்டு குடும்பத்தாரும் அவ்வப்போது சந்தித்து வருவார்கள், இருந்தாலும் ஈர்ப்புத் தன்மை குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கான பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும்.

இதுதான் திருமணத்தில் உண்டாகும் பொதுவான பிரச்சினைகள் இதை தடுப்பதற்காக நாம் முன்கூட்டியே சில திட்டங்களை வகுக்க வேண்டும். அது என்னவென்றால் நாம் மணமகன், மணமகள் போன்றவர்களுக்கு ஜாதகப் பொருத்தத்தை பார்க்கும் பொழுதே இரண்டு குடும்பங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் முன்பே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக பிரச்சினைகள் இல்லாத அற்புதமான திருமணத்தை நடத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன