உடலில் கழிவு நீக்கம் இப்படி செய்யுங்கள்.!

how to remove waste from your body

சாதாரணமாக நாம் வீட்டில் ஒரு இடத்தை கவனிக்காமல் விட்டால் அந்த இடத்தில் ஏகப்பட்ட பூச்சிகள், தூசுகள், ஒட்டடைகள் சேர்ந்துவிடும். அதே போல் தான் நமது உடலும், அதற்க்கு ஆரோக்கியமான உணவு அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் உடலில் தேவையற்ற நச்சுகள் உருவாகும். இதனால், உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும். கண்ணுக்குத் தெரிந்த வீட்டை நாம் எளிதில் சுத்தப்படுத்தி விடலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத உங்கள் உடலில் இருக்கும் பல பாகங்களை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமே. ஆனால் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் கழிவுகள் அகன்று சுத்தமடையும்.

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமாக இருந்தால் நாம் இதுபோன்ற செயல்களை செய்யத் தேவையில்லை. ஆனால் நாம் ஆரோக்கியமான உணவைத் தவிர்த்து மற்ற அனைத்து உணவுகளையும் வாங்கி சாப்பிடுகிறோம். அதிலும், வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தினமும் சாப்பிடுகிறார்கள். இதைத் தவிர்த்து இதனால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதற்காக இவர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை. ஒரு சிலர் இதுபோன்ற உணவை சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்வார்கள் ஆனால் அதையும் செய்யாமல் எந்த முயற்சிகளும் எடுக்காமல் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – ஸ்ட்ராபெரி பழங்களில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!

தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது நல்லது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகள் அகன்று, ரத்த நாளத்தில் இருக்கும் நச்சுக்களும் அகற்றி விடும். ஒருசிலருக்கு இதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

தினமும் காலையில் இஞ்சியை கொதிக்க வைத்து அந்த சாறினை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அதேபோல், அந்த சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் நமது கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும். ஒருசிலருக்கு காலையில் இஞ்சி டீ குடிக்கும் வழக்கம் இருக்கும். இது போன்றவர்கள் இந்த தேனீரில் சர்க்கரை கலக்காமல் தேன் கலந்து குடித்தால் உங்கள் உடலை சுத்தப்படுத்தும். ஒரு நெல்லிக்காய் உடன் இஞ்சி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வடிகட்டிக் குடித்தால் கழிவுகள் அகன்று மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்து விடும்.

இயற்கையாகவே பூண்டில் நச்சுகளை அகற்றும் தன்மை இருக்கிறது. இதனால்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து உணவுகளிலும் இஞ்சி மற்றும் பூண்டுகளை பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தும் உங்களுக்கு போதுமான அளவு இது உடலில் சேரவில்லை என்றால் தினமும் மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகள் அகன்று விடும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வீட்டிலேயே ஆரோக்கிய பானத்தை தயார் செய்து வாரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்கள் அகன்றுவிடும். அந்த பானத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். மூன்று அல்லது நான்கு கேரக்டர்களை எடுத்துக் கொண்டு, சிறு துண்டு இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் அல்லது தேங்காய் பாலை சேர்த்து வாரம் ஒருமுறை குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இஞ்சி உங்களின் வயிற்றை சுத்தப்படுத்தும், மஞ்சள் உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றும், எலுமிச்சை நோய்த் தொற்றுக் கிருமிகளை அழித்துவிடும், கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களுக்குள் இருக்கும் நச்சிகளுக்கு எதிராக போராடும்.

இரவில் உறங்குவதற்கு முன்பு நாம் கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதேபோல் தீய பழக்கம் உள்ளவர்கள் தினமும் அகத்திக் கீரையை சாப்பிடுவது நல்லது. இதனால் உங்கள் உடலில் ஏற்படும் தீய கழிவுகள் அனைத்தையும் அகற்றி விடும்.

மேலும் படிக்க – விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

நாம் தினமும் காலையில் உண்ணும் உணவு தான் நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. இதனால் காலையில் அன்னாச்சி பழம், கொய்யா, உலர் திராட்சை, சப்போட்டா போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் நமது உடல் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். கடைகளில் விற்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் அதேபோல் நெல்லிக்காய் பழங்கள் போன்ற பாட்டில் பானங்களை தவிர்ப்பது நல்லது.

நாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம் என்ற தலை கனமில்லாமல் தினமும் இதுபோன்ற உணவுகளை அருந்தி உங்கள்  ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். இல்லை எனில் இளமையில் நீங்கள் அனுபவித்த பல நாட்கள் முதுமையில் வேதனையாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன