நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

  • by
how to Remove Darkness Around Your Nails

பெண்கள் தங்கள் நகத்தின் ஆரோக்கியத்திற்காக அழகு நிலையங்களுக்கு சென்று மெனிக்யூர் போன்ற அழகூட்டும் செயல்களை செய்து வருகிறார்கள். ஆனால் என்னதான் மெனிக்யூர் செய்தாலும் நம் நகத்தில் ஏற்படும் கருமையைப் போக்குவதற்கு இயற்கை மருத்துவமே சிறந்தது.

அழகூட்டும் நகம்

அழகு என்றாலே பெண்கள் என்றுதான் சொல்லவேண்டும், அப்படிப்பட்ட அழகானவர்கள் கூந்தல், கண்கள், அவர்கள் நகங்கள் என எல்லாமே அழகாக இருக்கும். ஆனால் அதில் ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்தால் மட்டுமே அந்த அழகு குறைவாக காணப்படும். அதிலும் பெண்களின் நகம் எப்போதும் நீளமாகவும், அழகாகவும் இருக்கும். அதில் கருமையாக வளையங்கள் ஏற்பட்டால் அந்த அழகு அனைத்தும் பறி போய்விடும். இதற்கு பயந்து பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று அதிகமான பணங்களை வீணாக்குகிறார்கள். அதை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் நகத்தில் ஏற்படும் கருமையைப் போக்க முடியும்.

மேலும் படிக்க – பூங்ககாய் எனும் பூந்திக்காயின் தூய்மை பயன்கள்

தக்காளி பேஸ்ட்

பெண்கள் தங்கள் நகத்தின் அழகை அதிகரிப்பதற்காக வீட்டில் இருக்கும் தக்காளியை நன்கு பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும். அதை கை விரல்களில் மருதாணி போடுவது போல் போட்டு ஊற வைத்துவிட வேண்டும். பிறகு கை கழுவுவதன் மூலம் உங்கள் நகம் பொலிவாக இருக்கும். இதை பேஸ்டாக பயன்படுத்தாவிட்டாலும் சிறிய துண்டுகளாக நறுக்கி நம் நகத்தின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளதால் நம் சருமத்திற்கு எப்படி அழகு கிடைக்கிறதோ அதே போல் நம் நகங்களுக்கும் அழகூட்டும்.

ஆலுவேரா ஜெல்

சருமத்தின் அழற்சி தன்மையை அழிக்கும் சக்தி கொண்டது தான் ஆலுவேரா. இதை நம் நகத்தின் மேல் தடவுவதன் மூலம் நகத்தில் இருக்கும் கருமைகள் விலகி நகத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

மஞ்சள் மற்றும் எலுமிச்சை

இயற்கையாகவே மஞ்சளில் அன்டிபையோடிக் இருப்பதினால் உங்கள் நகங்களில் இருக்கும் கிறுமிகளை அகற்றுகிறது. இதனால் நகத்தில் ஏற்படும் கருவளையங்கள் நீங்கி நம் நகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்கிறது. மஞ்சளில் எலுமிச்சை சாறை கலந்து அதை பேஸ்ட்டாக மாற்றி கொண்டு நம் நகத்தின் மேல் தடவ வேண்டும். இதை இரவு தூங்குவதற்கு முன் தடவி உறங்குவது சிறந்ததாக இருக்கும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய நகம் வலுவடையும்.

கருமையை விளக்கும் தயிர்

வீட்டில் இருக்கக் கூடிய தயிரைக் கொண்டு நம் நகத்தில் இருக்கும் கருமையை முழுமையாக விளக்க முடியும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் நம் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது போல் நம் நகத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நகத்தின் மேல் தடவுவதன் மூலம் அதில் இருக்கும் கருமைகள் மற்றும் இறந்த செல்களை விலக்கி நகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!

இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உங்கள் நகத்தின் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள். இதற்கு மாறாக தேவையில்லாமல் பணங்களை செலவு செய்து உங்கள் நகத்தை நீங்களே அழித்து விடாதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன