கண்களின் மேல் உள்ள கருவளையங்களை போக்குவதற்கான வழிகள்..!

  • by
how to remove dark circles from your eyes

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் நபர்களின் கண்களில் மேல் கருவளையம் ஏற்பட்டால் அவர்களின் அழகு முற்றிலும் வீணாகிவிடும். நாம் எவ்வளவுதான் ஓய்வு எடுத்தாலும் நம் கண்களின் மேல் கருவளையங்கள் உண்டாகி கொண்டே இருந்தாள், அதைத் தவிர்த்து இதற்காக நாம் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துவோம் இருந்தாலும் கருவளையத்தின் தாக்கம் குறையாமல் அப்படியே நீடித்திருக்கும். எனவே இதைத் குறைப்பதற்கான வழிகளை இங்கு காணலாம்.

கருவளையங்கள் உண்டாகும் காரணம்

கருவளையங்கள் ஒரு சிலருக்கு மரபு ரீதியான பிரச்சினைகளால் உண்டாகும். இதை குணப்படுத்துவது சற்று சிரமமானது. போதுமான அளவு ஓய்வு இல்லாமை, என்னேரமும் கண் விழித்துக் கொண்டு செல்போன் மற்றும் கணினியை பார்ப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளினால் கருவளையங்கள் ஏற்படுகிறது. எனவே இதை தடுப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் கண்களின் மேல் செய்யப்படும் சில செயல்களினால் குறைக்கலாம்.

மேலும் படிக்க – டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

வெள்ளரிக்காய்

நாம் அழகு நிலையங்களுக்குச் சென்றால் நம் கண்களில் முதலில் வைக்கப்படும் காய்தான் வெள்ளரிக்காய். இதில் ஸ்டார்ச் சக்தி அதிகமாக இருப்பதினால் உங்கள் கண்களில் இருக்கும் கருவளையங்களைப் குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே கருவளையங்கள் உள்ளவர்கள் மாலை நேரத்தில் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி உங்கள் கண் மேல் வையுங்கள்.

டி பொடி

நாம் க்ரீன் டீ அல்லது சாதாரண டீயை பேக் மூலமாக அப்படியே தண்ணீரில் ஊறவைத்து குடிக்கிறோம், எனவே இதுபோன்ற டீ பேக்கை தூக்கி எறியாமல் அதை அப்படியே ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். அது நன்கு கட்டிய பிறகு அதை எடுத்து உங்கள் கண்களின் மேல் 5 முதல் 7 நிமிடங்கள் வைத்தால் நல்ல தீர்வு கிடைக்கும். சாதாரண டீ பேக்கை விட கிரீன் டீ சிறந்தது.

கண் சோர்வை குணப்படுத்தும்

தொடருந்து உழைப்பவர்களின் கண் சோர்வாக இருக்கும், எனவே இவர்கள் திடீரென்று எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் உடனடி பொலிவை பெறுவதற்கு இவர்கள் கண்மேல் கீழே குறிப்பிட்டுள்ள கலவையை வைத்தால் போதும். அரிசி மற்றும் கருஞ்சீரகத்தை நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு வேகவைத்த அரிசி மற்றும் கருஞ்சிரகத்தில் பண்ணீரை ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதை மொத்தமாக வடிகட்டி அந்த பன்னீரை பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தேய்க்க வேண்டும். பின்பு அந்தப் பஞ்சை கண்களின் மேல் வைத்து 10 நிமிடங்கள் ஊற வைத்தால் உங்கள் கருவளையம் மற்றும் கண் சோர்வு அனைத்தும் குறையும்.

சாமந்திப்பூ சிகிச்சை

கண்களின் மேல் உள்ள கருவளையத்தை குறைக்க வேண்டுமென்றால் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் சாமந்திப் பூவைப் போட்டு விட வேண்டும். பின்பு அது ஆரிய பிறகு ஃப்ரிட்ஜில் 24 மணிநேரம் வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து தொட்டு கருவளையங்கள் உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்தால் கருவளையம் குறையும்.

தாமரை மலர்

தாமரை மலரின் இதழ்களை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் விளக்கெண்ணெய் மற்றும் சிறிது தேன் கலந்து நன்கு குழைத்து கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வெளியே வைத்த பிறகு, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அது கெட்டியான பிறகு பஞ்சை கொண்டு நம் கண்களின் மேல் ஃபேஸ் பேக் போட வேண்டும். இதன் மூலம் கண்கள் பொலிவு அடைந்து கருவளையத்தை நீக்கும்.

காய்கறிகள்

முள்ளங்கி, பீட்ரூட், கேரட் இவைகளை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை வடிகட்டி சாறை தனியாக எடுத்து அதில் 5 மில்லி கிளிசரின் மற்றும் 5 மில்லி எலுமிச்சை சாறை விட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அதை தேவைப்படும்போதெல்லாம் நம்முடைய கருவளையங்கள் மேல் தடவி தீர்வு காண முடியும்.

மேலும் படிக்க – இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு

ஆரோக்கியமான உணவுகள்

வைட்டமின் சி கொண்ட தக்காளி, கேரட், குடைமிளகாய், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளை சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் நலக் கோளாறுகளினால் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படாது.

எனவே நீங்கள் கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களை தரமானதாக வாங்கி பயன்படுத்துங்கள். முடிந்தவரை கண்களை பண்ணீர் கொண்டு கழுவுவது சிறந்தது எனவே இது போன்ற வழிகளை பயன்படுத்தி கண்களில் உள்ள கரு வளையங்களை நிரந்தரமாக அகற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன