வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

  • by
how to relax while doing work from home

காலையில் எழுந்து குளித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று நண்பர்களுடன் உரையாடிக் தங்கள் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, வீடு திரும்பி இரவில் ஆழமான உறக்கத்தை மேற்கொண்டு வந்த ஏராளமான மக்கள் இப்போது காலையில் எழுந்தவுடன் வேலையில் அமர்ந்து இரவில் உறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் நண்பர்களுடன் உரையாட முடியாமல், வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி போக்கலாம் என்பதைக் காணலாம்.

வீட்டில் இருந்து வேலை

கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்காக மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதன் மூலமாக இணையதளத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் கணினி மூலமாக வேலை செய்பவர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் உற்சாகமாக செய்யப்பட்ட இந்த வேலை நாளுக்கு நாள் அவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கி வருகிறது. இதில் இருந்து எப்படி நாம் விடுபடலாம் என்பதைக் காணலாம்.

மேலும் படிக்க – பசியால் தத்தளிக்கும் இந்திய கிராமங்கள்

இவர்கள் பிரச்சனைகள்

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு வீட்டில் இருப்பவர்கள் மூலமாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக நாம் ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கும் போது நம் வீட்டில் உள்ளவர்கள் நம்மை ஏதாவது உதவிக்கு அழைப்பார்கள். இதன் மூலமாக நம் வேலை பாதிக்கப்படும், அதை தவிர்த்து நம் மனநிலையும் மாறும். வீட்டில் பெரியவர்கள் அல்லது குழந்தைகள் இருந்தால் உங்களை தொந்தரவு செய்வதற்கான வழிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து முடிந்தவரை உங்கள் கவனத்தைச் சிதறடிக்க முயற்சி செய்வார்கள். எனவே இவர்களை எதிர்த்த நம்மால் சுதந்திரமாக வேலை செய்ய முடியாது.

புரியாத உறவுகள்

வீட்டிலிருந்து வேலை செய்வதை வீட்டில் இருப்பவர்கள் பார்க்கும்போது அது ஏதோ சாதாரண வேலையாகவே தெரிகிறது. அதில்  இருக்கும் கஷ்டங்கள் மற்றும் சிக்கல்கள் எதைப்பற்றியும் அறியாதவர்கள் நம்மை கேலியும், கிண்டலும் செய்து கொண்டு நம் வேலைகளை கெடுத்து வருவார்கள். நாம் என்ன வேலை செய்கிறோம், அது எதற்காக செய்கிறோம் என்ற எந்த ஒரு தெளிவும் இல்லாத நபர்கள் தான் நமக்கு ஏராளமான தொந்தரவுகளை கொடுப்பார்கள்.

தடுக்கும் வழிகள்

உங்கள் மனநிலையை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள நீங்கள் அலுவலகத்திற்கு செல்வதைப் போல் காலையில் எழுந்து குளித்து விட்டு உங்கள் பணியைத் தொடங்குங்கள். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அச்சமயத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் உங்கள் வேலைகளை பகிருங்கள். உணவு இடைவேளை, தேனீர் இடைவேளை என அதற்கேற்ப நேரத்தை ஒதுக்கி உங்கள் வேலைகளை நிறைவு செய்யுங்கள்.

மனப் பதற்றத்தை குறைக்கும்

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்காக எப்படி ஒரு மேதை இருக்கிறதோ, அதேபோல் உங்கள் வீட்டிலும் ஒரு மேஜையை வைத்துக்கொள்ளுங்கள். அதன் மேல் உங்கள் வேலைக்கு சம்பந்தமான பொருட்களை மட்டுமே வைக்க வேண்டும். அதை தவிர்த்து உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் ஏதேனும் புகைப்படங்கள் அல்லது பொம்மைகளை வைக்கலாம். முடிந்தவரை உங்களுக்கான தனி அறை இருந்தால் அதை மூடி வைத்து வேலை செய்வதால் உங்கள் கவனம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – வீட்டிலுள்ள எளிய மூலிகையில் எல்லாம் இருக்கு

தனிமையாக இருப்பவர்கள்

வெளி மாநிலத்தில் இருந்து வேறு நகரத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும். உதாரணத்திற்கு அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது, அதைப்போல் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேலை செய்ய முடியாது, இதற்கு இடையே தாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். எனினும் இவர்களின் மனநிலை மற்றவர்களை ஒப்பிடுகையில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இது போன்றவர்கள் தங்கள் வேலை நேரத்திற்கு இடையே தங்களுக்கு பிடித்த செயல்களை செய்ய வேண்டும். உதரணத்திற்கு அதிக ஒலியுடன் பாடல் கேட்பது, திரைப்படத்தைப் பார்ப்பது, நன்பர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடுவது போன்றவற்றை செய்து உங்கள் மனநிலையை ஒருநிலை படுத்தலாம்.

வீட்டில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை மதித்து அவர்களுக்கான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அவர்கள் வேலையை பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். அப்படி உங்கள் வீட்டு அருகே தனிமையில் யாராயினும் இருந்து வேலைகளை செய்து வந்தால் உங்களால் முடிந்தவரை ஏதேனும் உதவிகளை அவர்களுக்கு அளியுங்கள். ஒவ்வொருவரும் தங்கள் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழிகள் அவர்களுக்கே அதிகமாக தெரிந்து இருக்கும். எனவே இந்த வழிகளை தேர்ந்தெடுத்து உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன