முன் தலை வழுக்கையா இதோ நிவாரணி!

  • by

ஆண்களுக்கு ஹெல்மெட் போடுவதால் ஏற்படும் வியர்வை சரியான காற்றோட்டமில்லா நிலையில்  முன் தலை வழுக்கை ஏற்படும். பெண்களுக்கு முன் மண்டையில் கெமிக்கல் சாம்பூகளால் அதிகப்படியான  முடிவளர்ச்சி காணப்படுவதில்லை. முன் மண்டையில் முடி இல்லாதது சிலருக்கு மரபு காரணமாக இருக்கும். 

முன் தலை வழுக்கை என்பது  முழுதாக என்னவென்று பலருக்கு  தெரிவதில்லை. இதனை போக்க வீட்டிலேயே எளிய ரிமெடிகளை நாம்  தாயாரிக்கலாம். 

வெங்காயப் பேக்

இதற்கு 3 பொருட்கள் மட்டும் போதுமானது ஆகும். இதனை நாம் முழுமையாக  தொடர்ந்து கடைப்பிடித்தால் போதுமானது ஆகும். 28 நாட்கள் கடைபிடித்தால் எதிர்பார்க்கும்  முடி வளர்ச்சியை பெறலாம். 

வெங்காயம் 2 , 

விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன்,

ஆலோவீரா ஜெல் 1 ஸ்பூன், 

முன் தலை வழுக்கையைப் போக்க  வெங்காயத்தை சாறுப் பிழிந்து 2 ஸ்பூன் எடுக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய்  2 ஸ்பூன் மற்றும் ஆலோவீரா வீட்டில் உள்ளது அல்லது ஜெல் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மூன்றையும் கலந்து நன்கு நுரையுடன் கீரீம் பதம் வரும் வரை  கலக்கி எடுக்கவும். 

இந்த கலவையை இரவில்  தலையில் தடவி காலையில் குளித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். எப்பொழுது வேண்டுமனாலும் இந்த  கலவையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து 28 நாட்கள் பயன்படுத்துதல் அவசியம் ஆகும். ரிமெடியை செய்ய சின்ன வெங்காயம் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது.  தொடர்ந்து 28 நாட்கள் பயன்படுத்தி குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு நிற்கும். நன்றாக முடிவளர்ச்சியை நாம் காணலாம்.

மேலும் படிக்க –  காலனிகளின் அற்புத வகைகள்..!

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தின் பயன்பாடு சிறப்பு வாய்ந்தது ஆகும். உடல் சூட்டினை குறைக்கும். உடலிலுள்ள கழிவை கரைக்கும் மற்றும் சளித் தொல்லையிலிருந்து காக்கும். வெங்காயத்தில் சல்பர்  அதிகம் உள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் காலையில் கஞ்சியுடன் சின்ன வெங்காயம் கடித்துக் கொண்டு பொழுதுதை துவங்குவார்கள். 

சின்ன  வெங்காயத்தை சிலர் அப்படியே  உரித்து தலையில் தேய்பார்கள் அது தவறானது ஆகும். அவ்வாறு செய்யக் கூடாது இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும்.  வெங்காயத்தை ஆந்திரா மாநிலத்தில் தாயுடன் ஒப்பீடு செய்வார்கள் பல்முனை உதவித் தளமாக இருக்கும். அம்மை வந்தால் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் சூட்டினை குறைக்க வெங்காயத்தை  நூலில் கோர்த்துக் கழுத்தில் கட்டுவார்கள். இது உடலின் வெப்ப நிலையை சீராக்குகின்றது. 

சந்தையில் விற்கும் வெங்காய  டானிக் என்பது இதுதான் ஆனால் வெங்காயச் சாற்றை பதப்படுத்த கெமிக்கல் கலந்து விற்பனை செய்கின்றனர். நம் மக்கள் இது குறித்து எந்தவித விழிப்புணர்வு இன்றி பிராண்டுகளின் கீழ் விழுந்து கிடக்கின்றனர். 

வெங்காயத்தை  சாறு எடுத்தவுடன் அதனை ரிமெடியாக பயன்படுத்துவதற்கும் அதனைப் பதப்படுத்திபயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. சிலர் வெங்காயத்தை  கெடாமலிருக்க நன்கு அறைத்து எண்ணெயில் காய்ச்சு அதனை தலைக்கு தேய்த்துவருவார்கள் அது சிறப்பானதுதான். குறைந்தபட்சம் இதையாவது செய்து வழுக்கையிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

நாம் பயன்படுத்தும் சீப்பானது மரத்தால் செய்யப்பட்டு  இருந்தால் அது இன்னும் சிறப்பானது ஆகும். முடி வேர்கால்களை மரத்தால் செய்யப்பட்ட சீப்பின் பல் தூண்டிவிட்டு முடி வளர்ச்சிக்கு  உதவும். 

மேலும் படிக்க – இயற்கை எண்ணெய்யினால் நம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்.!

ஆலோவீரா:

ஆலோவீரா ஜெல்லானது ஆயிரக்கணக்கான மடங்கு சக்திவாய்ந்தது இதனை தேவக்கண்ணி என்றும் அழைக்கின்றனர். கற்றாலை மடலில் அலோயின் அலோசோன் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது உடலில் அகமருந்தாக்வும், அழகு குறிப்பிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. இன்றைய அழகு பொருட்கள் சந்தையில் கற்றாழைச்சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.   உடலில் உள்ள சத்து வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் உள்ளது. இதனை தலைக்கு தேய்த்தால் சில்கியான முடியும், தலைமுடி உதிர்வும் தடுக்கும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன