ஊரடங்கின் பொழுது உடல் பருமன் பிரச்சினையை தடுப்பது எப்படி..!

  • by
how to reduce your body weight during lockdown

நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றி வருவதினால் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் நிகழ்ந்து வருகிறது. ஒருசிலர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதினால் அலுவலகத்தில் இருப்பதைப் போல் ஒரே இடத்தில் அமர்ந்து விருப்பமான உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். இதன் மூலமாக இவர்களுக்கு உடல் பருமன் பிரச்சினை உண்டாகுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் அதிகமாக உள்ளது என ஆய்வுகள் குறிப்பிடுகிறது. எனவே ஊரடங்கு சமயத்தில் உடல் பருமன் பிரச்சினை எப்படித் தடுப்பது என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நமக்கு யோசனைகளை அளித்துள்ளார்கள்.

கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும்

நாம் உண்மையில் நம்முடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் இருக்கும் கலோரிகளை கணக்கிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையான ஆற்றலின் அளவை பொறுத்தே கலோரிகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் ஊரடங்கு சமயத்தில் நாம் அதிக அளவிலான உடல் ஆற்றலுடன் செயல்பட மாட்டோம், இதனால் நாம் குறைந்த அளவிலான கலோரியை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே உங்கள் உணவில் அதிக கலோரி இருந்தால் அதை குறைந்த அளவு எடுத்து உங்கள் உடல் எடையை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைத்து ஆரோக்கியமுடன் வாழ எங்கள் டயட் நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து அதில் இருக்கும் இயற்கை தன்மை முழுமையாக இழந்து ஆரோக்கிய தன்மையற்ற உணவாக மாறுகிறது. இது அனைத்திற்கும் மேலாக உணவுகள் கெடாமல் இருப்பதற்காக ஒரு சில ரசாயனங்களையும் இதில் கலக்கிறார்கள். எனவே ஊரடங்கு சமயங்களில் இது போன்ற உணவுகளை நாம் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – மனோதத்துவ நிபுணர்களிடையே அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்..!

மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்

நாம் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும், குடிப்பதன் மூலமாக நம் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஊரடங்கு சமயத்தில் நாம் மதுபானங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதேபோல் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள குளிர் பானங்களையும் நாம் தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடலில் தேவையற்ற கலோரிகளை அதிகரித்து உடல் பருமன் பிரச்சனையை உண்டாக்கும். காலப்போக்கில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

புரோட்டின் சாக்லேட்

ஒரு சிலர் உடனடியாக உடல் ஆற்றல் பெறுவதற்காக சாக்லேட் போன்ற இனிப்பு உணவுகளை உண்கிறார்கள். அதில் புரோட்டீன், ஃபைபர், கால்சியம், விட்டமின் என ஏராளமான சக்திகள் உள்ளது என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சக்திகளின் அளவை விட 100 மடங்கு அதிகமாக இதில் சர்க்கரை இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

உடல் எடையை குறைப்பதற்கு

நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு நாம் புரோட்டின் அதிகமாக உள்ள முட்டை, கோழி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சேர்த்து பேரிக்காய், அவகோடா, ராஸ்பெர்ரி, செரல், சக்கரவள்ளி கிழங்கு போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு பச்சைக் காய்கறிகள் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

மேலும் படிக்க – ஊட்டச்சத்து நிபுணர்களுடன் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்..!

உடற்பயிற்சி அவசியம்

நாம் வேலைகளை செய்யும்போது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தடுக்க வேண்டும். அவ்வப்போது எழுந்து கைகள் மற்றும் கால்களில் சிறிய வளைவுகளை உண்டாக்க வேண்டும், இதை தவிர்த்து தினமும் காலையில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகள் அனைத்தும் விலகும். உடலில் எப்போதும் நீராகாரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாம் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தவிர்த்து வருவதினால் இந்த நாட்களை அழுத்தத்துடன் கடக்காமல் புத்துணர்ச்சியாக கடந்து செல்ல வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொண்டு போதுமான அளவு உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன